திருப்பதி (திரைப்படம்)
திருப்பதி | |
---|---|
இயக்கம் | பேரரசு |
தயாரிப்பு | எம்.எஸ் குகன் எம்.சரவணன் |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | அஜித் குமார் சதா பிரமிட் நடராஜன் ஹரிஷ் ராகவேந்திரா ரியாஸ்கான் பேரரசு |
படத்தொகுப்பு | அந்தோனி |
வெளியீடு | ஏப்ரல் 14, 2006 |
ஓட்டம் | 158 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திருப்பதி (Thirupathi) பேரரசுவின் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் அஜித்குமார் கதாநாயகனாகவும் சதா கதாநாயகியாகவும் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத்வாஜின் இசையுடன் இத்திரைப்படம் வெளியானது.
வகை
நடிகர்கள்
- அஜித் குமார் - திருப்பதி
- சதா - பிரியா
- கஞ்சா கருப்பு - முத்து
- ரியாஸ்கான் - சூரி
- அருண் பாண்டியன் - ஏ. சி. முரளி
- லிவிங்ஸ்டன் - சாணக்கியன்
- எம். எஸ். பாஸ்கர் பி. ஏ. பிரம்மா
- தீபு - திருப்பதியின் சகோதரி
- ஹரிஷ் ராகவேந்திரா - திருப்பதியின் சகோதரன்
- சம்பத் ராஜ் - சூரியின் சகோதரன் / டாக்டர் வரதன்
- சத்யன் - திருப்பதியின் நண்பர்
- பேரரசு - ஆட்டோ ஓட்டுனர்
- லைலா - கீரை விதைப்போம் பாடல்
- ராஜேஷ் - முதலமைச்சர்
திரைக்கதை
‘திருப்பதி’ சவுண்ட் சர்வீஸ் ஓனர் அஜீத்தும், அமைச்சர் மகன் ரியாஸ் கானும் நண்பர்கள். ரியாஸ்கான் கைகாட்டும் வேலைகளை நட்புக்காக கண்மூடித்தனமாகச் செய்து முடிப் பவர் அஜீத். தன் தங்கையின் பிரசவத் துக்காக மருத்துவமனைக்குச் செல்லும்போது கூட நண்பன் கூப்பிடுகிறான் என்று அவருடன் செல்கிறார். பிரசவத்துக்குச் சென்ற அஜீத்தின் தங்கை, டாக்டரின் பணத்தாசையால் சிசேரியன் செய்யப்பட்டு, உயிரிழக்கிறார். உண்மை தெரிந்து அஜித் குமார் ஆவேசமாக டாக்டரைக் கொல்லப் போனால், அவர் ரியாஸ்கானின் அண்ணன்.
தன் அண்ணனைக் கொல்ல வரும் அஜீத்தை அடித்து, ‘டேய்! நீ என் ஃப்ரெண்ட் இல்லை. வெறும் அடியாளுதான்!’ என ரியாஸ்கான் நிஜ முகம் காட்ட, வெகுண்டு எழுகிறார் ஹீரோ. ‘பணத்தாசை பிடிச்ச உன் அண்ணனை உன் கையாலேயே கொல்ல வெச்சு, உன்னையும் கொல்வேன்’ என்று சபதம் போடுகிறார். கூடவே, பணத்தாசை பிடித்த டாக்டர்களைத் திருத்தி, ‘பிரசவத்துக்கு இலவசம்’ என்று சட்டம் கொண்டுவர முயற்சிக்கிறார். சபதத்தில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் இறுதிக் காட்சியாகும்.
பாடல்கள்
மார்ச் 15, 2006 அன்று வெளியான இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.[1]
எண் | பாடல் | பாடகர்(கள்) | நீளம் (நி:நொ) |
1 | ஆத்தாடி ஆத்தாடி | கே. கே. மாதங்கி | 5:01 |
2 | திருப்பதி வந்தா | சங்கர் மகாதேவன் | 4:46 |
3 | கீரை விதைப்போம் | புஷ்பவனம் குப்புசாமி | 5:13 |
4 | எனையே எனக்கு | விஜய் யேசுதாஸ் | 3:55 |
5 | செல்லவும் முடியல | ஹரிஷ் ராகவேந்திரா, சுவர்ணலதா | 5:20 |
6 | புதுவீடு கட்டலாமா | அனுராதா ஸ்ரீராம் | 5:04 |