இரணியன் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இரணியன்
இயக்கம்வின்சென்ட் செல்வா
திரைக்கதைவின்சென்ட் செல்வா
நடிப்புமுரளி (தமிழ் நடிகர்)
மீனா (நடிகை)
ரகுவரன்
ரஞ்சித்
ஒளிப்பதிவுகே. டி. பாலசுப்பிரமணியம்
படத்தொகுப்புஎஸ். எஸ். வாசு
சலீம்
வெளியீடு18 நவம்பர் 1999
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இரணியன் என்பது வின்சென்ட் செல்வா இயக்கிய 1999 தமிழ் மொழி திரைப்படம். இப்படத்தில் முரளி மற்றும் மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், ரகுவரன் மற்றும் ரஞ்சித் ஆகியோர் மற்ற துணை வேடங்களில் நடித்துள்ளனர். நவம்பர் 1999 இல் வெளியான தேவா,[1] இசையமைத்த படம்.[2] இப்படம் கிராமத்தின் நலனுக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர் "வாட்டாகுடி இரானியன்" என்ற கற்பனையான சுயசரிதை.

கதைச்சுருக்கம்

இந்தத் திரைப்படத்தில் சிறையிலிருந்து கிராமத்திற்கு வரும் இரணியன் நிலப்பிரபுத்துவக் கொடுமைகளையும் தனது மாமன் மகளின் காதலையும் சந்திக்கிறான். கொலைகளே நியாயமாகின்ற இடத்தில் நிலப்பிரபுவின் குடும்பம் சார்ந்தவர்களை பல்வேறு தருணங்களில் ஒவ்வொருவராகக் கொல்கிறான். தோளில் துண்டும் காலில் செறுப்பும் அணிகின்ற கூலி விவசாயிகளுக்குச் சாணிப்பால் புகட்டப்பட்டு சவுக்கடி கொடுக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். கிராமத்தில் உள்ள அனைத்து மக்களையும் நிலப்பிரபு விஷம் கலந்த கஞ்சியை கொடுத்துக் கொல்கிறார். தலைமறைவு வாழ்க்கையிலேயே தனது மாமன் மகளை இரணியன் மணந்து குழந்தைக்கும் தகப்பனாகிறான். நிலப்பிரபுவை எதிர்த்து போராடும் போராட்டத்தில் இரணியனின் சக நண்பர்களை இழக்கிறான். மீண்டும் மீண்டும் பட்டினிக்கும், சாவுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாகும் கூலித் தொழிலாளர்கள் இரணியனின் போராட்ட உத்வேகத்திலிருந்து அன்னியமாகிறார்கள். அவர்கள் புலம் பெயர்ந்து பஞ்சம் பிழைக்கச் செல்லும்போது அவர்களைத் தடுக்கும் இரணியனைக் கல்லால் அடிக்கிறார்கள். ஆட்சித்தலைவரிடம் கூலித்தொழிலாளர்களின் உரிமைகளை அங்கீகரித்துக் கையொப்பமிடும் ஆண்டை வஞ்சகமாக மக்கள் கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே இரணியனைச் சுட்டுக் கொல்கிறான். கோபம் கொள்ளும் ஆட்சித்தலைவர் இரணியனின் சாவுக்குக் காரணமான மக்கள் கூட்டத்தைப் பார்த்து மிகக் கோபமாகக் கூலி அடிமை ஒப்பந்த விடுதலைப் பத்திரத்தை விசிறியடிக்கிறார். மனைவியும் குழந்தையும் தாயும் சூழ்ந்து கதற, இரணியனின் உயிர் பிரிகிறது. அநேக மக்களின் ஒற்றுமை தன்னைப் பரவசப்படுத்துவதாக இறுதியில் தெரிவிக்கிறான் இரணியன். இரணியனின் மரணம் ஏற்படுத்திய கோபமும், வெஞ்சினமும் குற்றவுணர்வும் அடைந்த கிராமத்து மக்கள் ஆண்டையைத் துரத்திச் சென்று பல கூலி அடிமைகள் தூக்கிலிடப்பட்ட அதே தூக்குமரத்தில் திறந்த வெளியில் தூக்கிலிடப்படுகிறார். பதியப்படாத வரலாறு இது எனத் திரையில் மேலெழும் இறுதி வரிகள் நமக்குச் சொல்கின்றன.

முரளி (இரணியனாகவும்) மீனா( இரணியனின் மாமன் மகளாகவும்) ரகுவரன் (ஆண்டையாகவும்) விஜயகுமாரி ( இரணியனின் தாயாகவும்) டெல்லி கணேஷ்( இரணியனின் மாமாவாகவும்) ராஜசேகர் ( இரணியனின் தந்தையாகவும்). அம்பிகா (ஆண்டையின் மனைவியாகவும்) நடித்துள்ளார்கள்.[3]

இரணியன் திரைப்படம் குறித்த சர்ச்சை

வாட்டாகுடி இரணியன் பற்றிய திரைப்படம் “இரணியன் ” என்ற பெயரில் வெளிவந்த வந்த நிலையில் பல்வேறு தரப்புகள் மற்றும் அமைப்புகள் பல்வேறுவித சர்ச்சைகள் எழுப்பின. அதாவது அந்த படம் பல வரலாற்றுப் பிழைகளுடன் வந்தது என்றும் குறிப்பாக இரணியன் Indian National Army (INA) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படையில் இருந்தவர் என்றும் அது குறித்துக் குறிப்பிடாமல் பட்டாளத்திலிருந்து வருவது போன்று காட்சி அமைக்கப்பட்டு இருந்ததாகவும் அவரின் சிங்கப்பூர் மலேசிய வரலாறுகள் பதியப்படவில்லை என்றும் மேலும் மற்றும் பல்வேறு தரப்புகள் மற்றும் அமைப்புகள் இருந்து வந்த அழுத்தங்கள், எதிர்ப்புகள் காரணமாக இப்படத்தின் பல்வேறு காட்சிகள் நீக்கப்பட்டது. மேலும் கமெர்சியல் வெற்றிக்காக சில காட்சிகளும் அதிகம் சேர்க்கப்பட்டன என்றும் ஆறரையடி ஆஜான பாவான இரணியன் உருவத்திற்கு ஒவ்வாத ஒருவரை அவரின் பாத்திரத்தில் நடிக்க வைத்தது இரணியன் வலுவைச் சரியாகப் பிரதிபலிப்பு இல்லாமல் செய்தார்கள் என்றும் சர்ச்சைகள் எழுப்பபட்டன இருப்பினும் இது ஓரு மறைக்கப்பட்ட மாவீரனின் வரலாற்றினை திரும்பிப் பார்க்க வைக்க உதவிய திரைப்படம் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.[4]

நடிகர்கள்

ஒலிப்பதிவு

தேவா இசையமைத்த இசை.

இல்லை. பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள்
1 அய்யாரெட்டு அனுராதா ஸ்ரீராம், கிருஷ்ணராஜ் வைரமுத்து
2 சந்திரனே சாட்சி கே.எஸ் சித்ரா நா. முத்துக்குமார்
3 சீபோயா நீ எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமண்யம் பழநிபாரதி
4 என் மாமன் மதுரை சுவர்ணலதா நா. முத்துக்குமார்
5 வரான் பாரு தேவா தியாகராஜன்

தயாரிப்பு

படத்தின் அசல் தலைப்பு வாட்டக்குடி இரணியன் படத்தின் மீது சட்ட வழக்கு தொடரப்பட்டது, பின்னர் முன்னொட்டு நீக்கப்பட்டது.[5]

வெளியீடு

படம் வெளியானவுடன் கலவையான விமர்சனங்களைப் பெற்றது, ஒரு விமர்சகர் "முரண்பாடாக, திரைப்படத்தின் மிகப்பெரிய பிரச்சனை இது உண்மையானதை விட கற்பனையானது என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகும்".[6]

மேற்கோள்கள்

  1. http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0001077
  2. http://cinematoday.itgo.com/Ooty.htm
  3. ராஜேந்திரன், யமுனா. "இரணியன் – திரைப்பட விமர்சனம்". thinnai.com. பார்க்கப்பட்ட நாள் 10 November 2019.
  4. "தேவர் இன நாயகர்கள் - தஞ்சை வாட்டாக்குடி இரணியன் தேவர் வரலாறு". thevarvamsamfilmsindia. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
  5. https://web.archive.org/web/20061103024843/http://www.dinakaran.com/cinema/english/highlights/1999/1999hili.htm
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-21. பார்க்கப்பட்ட நாள் 2019-11-10.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இரணியன்_(திரைப்படம்)&oldid=30797" இருந்து மீள்விக்கப்பட்டது