பாபட்லா - 4358

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பாபட்லா - 4358
BPT 4358
வேளாண் பெயர்
சூர்யா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
சொர்ணமசூரி X ARC 6650
வகை
கலப்பின நெல் வகை
காலம்
140 - 145 நாட்கள்[1]
மகசூல்
6500 - 7000 கிலோ எக்டேர்
வெளியீடு
1999
வெளியீட்டு நிறுவனம்
CVRC / SVRC, பாபட்லா[2]
மாநிலம்
ஆந்திரப் பிரதேசம்
நாடு
 இந்தியா

பாபட்லா - 4358 (BPT 4358) முன்மொழிவு எண்: (IET 15721),[3] எனப்படும் இந்த நெல் வகை, சொர்ணமசூரி மற்றும் ARC 6650 ஆகிய நெல் இரகங்களை பரம்பரை முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட, தென்னிந்தியப் பிராந்தியமான ஆந்திர மாநிலத்தின் நெல் இரகமாகும். "நடுவண் வகை வெளியீட்டுக் குழு (CVRC)" மற்றும் "மாநில வகை வெளியீட்டுக் குழு (SVRC)" ஆகியவையால் 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, சூர்யா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]

காலம்

நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 140 - 145 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. குறுவை சாகுபடி மற்றும் சம்பா சாகுபடி பருவங்களில் பயிரிடப்படும் இந்த நெல்வகை, சம்பாப் பருவத்தில் ஆந்திர மாநில கிருஷ்ணா ஆற்றின் மேற்கு கழிமுகப் பகுதிகளான ஈரத்தன்மையுள்ள நிலங்களில் பெருமளவு பயிரடப்படுவதாக கருதப்படுகிறது.[1]

மகசூல்

வெள்ளை முதுகு கொண்ட தாவரத் தத்துப்பூச்சி (WBPH) மற்றும் சாருறுஞ்சும் பூச்சிகளுக்கு வெகுவான எதிர்ப்புத்திறன் கொண்ட பாபட்லா - 4358, ஒரு எக்டேருக்கு சுமார் 6,500 முதல், 7000 கிலோ வரை மகசூல் தருவதாக கூறப்படுகிறது. மேலும் தரமான ஒட்டாத நீள விகிதத்துடன் உள்ள இதன் அரிசி, நன்றாக சமைக்கும் தன்மையுடன், உறைந்து போகாத மற்றும் உடைந்து போகாத தானியங்களாக உள்ளது என கூறப்படுகிறது.[1]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 "Surya (BPT 4358)" (PDF). angrau.ac.in (ஆங்கிலம்) - ©2025. Retrieved 2025-08-14.
  2. Paddy varieties released from Agricultural Research Station, Bapatla
  3. Page 21 of 135
"https://tamilar.wiki/w/index.php?title=பாபட்லா_-_4358&oldid=433655" இலிருந்து மீள்விக்கப்பட்டது