திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவாசி |
மாவட்டம்: | திருச்சிராப்பள்ளி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மாற்றுரைவரதர் (பிரம்மபுரீஸ்வரர், சமீவனேஸ்வரர்) |
தாயார்: | பாலாம்பிகை |
தல விருட்சம்: | வன்னி |
தீர்த்தம்: | அன்னமாம்பொய்கை, சிலம்பாறு |
ஆகமம்: | சிவாகமம் |
சிறப்பு திருவிழாக்கள்: | திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், தைப்பூசம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், சுந்தரர் |
மாற்றுரைவரதீசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவாசி என்ற ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 62வது சிவதலமாகவும் உள்ளது. இச்சிவாலய மூலவரை உமாதேவி, பிரம்மதேவன், இலக்குமி, அகத்திய முனிவர், கமலன் எனும் வைசியன், கொல்லிமழவன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
சிவாலயத்தின் எதிரே அடைக்கலம் காத்தார் கோயிலும் அதில் கருப்பண்ணசாமி சன்னதியும் உள்ளது. அக்கோயிலின் அருகே மதுரை வீரன் சன்னதியும் அமைந்துள்ளது.
இச்சிவாலயம் அமைந்த திருவாசி ஊரானது புராண காலத்தில் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
தல வரலாறு
சுந்தரர் தன்னுடன் சிவதல யாத்திரைக்கு வருகின்ற சிவனடியார்களுக்கு உணவு படைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறு உணவு படைக்க சிவபெருமானிடம் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொள்வார். ஆனால் இத்தலத்தில் சுந்தரர் பொற் பதிகம் பாடியும் சிவபெருமான் பொன்னைத் தரவில்லை. சுந்தரர் கோபம் கொண்டு பாடல்களைப் பாடினார். அதன்பின்பு சிவபெருமான் பொன்னை தந்தார். பிறகு அந்தப் பொன் சுத்தமானதா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்கு வந்த இருவர் அந்தப் பொன்னை சோதித்து அதன் தரத்தினை உரைத்தனர். சிவபெருமான் தன்னை இகழ்ந்து பாடினாலும் பொன் தருவார் என்பதை சுந்தரர் அறிந்தார். பொன்னை உரைத்து தரத்தை உரைத்த இருவரும் மறைந்தனர். அவர்கள் சிவபெருமானும் திருமாலும் என சுந்தரர் அறிந்தார்.
மாற்றுரைவரதர் எனும் பெயர் இதன் காரணமாகவே வந்தது.
தல சிறப்புகள்
அர்த்தஜாம பூசையின் பொழுது முதலில் அம்பாளுக்கு பூசைகள் செய்யப்படுகின்றன. அதன் பின்பு இறைவனுக்கு பூசைகள் செய்யப்படுகின்றன.
திருவிழாக்கள்
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பௌர்ணமி தொடங்கி 11 நாட்கள் தினந்தோறும் முத்துப்பல்லக்கில் இறைவன் வீதிஉலா நடைபெறுகிறது.
வழிபாடு
இச்சிவாலயத்தின் மூலவரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் 7 விளக்குகளில் இலுப்ப நெய்யூற்றி தீபம் ஏற்றினால் பொருளாதார சுபிட்சம் அடைவர் . பாலதோஷம் அல்லது பாலாரிஷ்டம் என்று சொல்லப்படும் குழந்தைகளுக்கான தோஷம் பற்றியவர்கள் தொடர்ந்து மூன்று ஞாயிறுகளில் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அத்துடன் அபிஷேக தீர்த்தத்தை பருகினால் மூன்று நாளில் இந்த பாலதோஷம் குழந்தைகளிடமிருந்து விலகும். திருமணமாகாத இளைஞர்களும், இளம் பெண்களும் தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமை அன்னமாம் பொய்கையில் நீராடி அம்பிகைக்கு அர்ச்சனை , அபிஷேகம் செய்தால் திருமணம் விரைவில் நிச்சயமாகும். வலிப்பு, வயிற்றுவலி, வாதம் முதலிய நோய்கள் பாதித்தவர்கள் தொடர்ந்து ஒரு மண்டலத்திற்கு நரடாஜ பெருமானுக்கு அர்ச்சனை செய்துவந்தால் நோயின் கடுமை குறைந்து பூரண குணமாகும்.
பாடல்கள்
திருஞான சம்மந்த மூர்த்தி - திருப்பாச்சிலாச்சிராமத் திருப்பதிகம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருப்பாச்சிலாச்சிரமத் திருப்பதிகம் - 12 பாடல்கள் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - சேத்திர திருவெண்பா - 1 பாடல் தனிப்பாடல்கள் 3
காட்சியகம்
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
- அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்
- கோயில் பற்றிய விபரங்கள் பரணிடப்பட்டது 2007-10-18 at the வந்தவழி இயந்திரம்
- தலவரலாறு, சிறப்புகள் பரணிடப்பட்டது 2007-10-25 at the வந்தவழி இயந்திரம்
- சம்பந்தர் பதிகம் பரணிடப்பட்டது 2008-02-02 at the வந்தவழி இயந்திரம்
திருப்பாச்சிலாச்சிராமம் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருப்பைஞ்ஞீலி |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருஈங்கோய்மலை |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 62 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 62 |