சாந்தி வில்லியம்ஸ்
சாந்தி வில்லியம்ஸ் | |
---|---|
பிறப்பு | 23 செப்டம்பர் 1958 கோயம்புத்தூர் |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1970-1980 1993-தற்போது வரை |
அறியப்படுவது | மெட்டி ஒலி தென்றல் (தொலைக்காட்சித் தொடர்) அந்நியன் (திரைப்படம்) பூவே உனக்காக |
வாழ்க்கைத் துணை | ஜே. வில்லியம்ஸ் (தி.1979-2005) (இறப்பு 2005) |
பிள்ளைகள் | 4 |
சாந்தி வில்லியம்ஸ் (Shanthi Williams) என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பல்வேறு தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். [1] [2]
தொழில்
சாந்தி தனது 12 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிப்புத் தொழிலுக்கு வந்தார். சாந்தி 1970 இல் வியட்நாம் வீடு படத்திலிருந்து நடிக்கத் தொடங்கினார். இவர் 1999 முதல் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்களில் இரண்டாவது முன்னணி பாத்திரம் மற்றும் துணை வேடங்களில் நடித்தார். மெட்டி ஒலி என்ற தொடரில் கட்டுப்பாடான தாயாக நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர். [3] [4]
தமிழரசுவின் தாயாக தென்றலில் நடித்ததற்காக இயக்குனர் கே பாலச்சந்தரிடம் சிறந்த எதிர்மறை பாத்திர நடிகைக்கான விருதைப் பெற்றார்.அவர் இயக்குநர் மூலம் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான வழங்கப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை
சாந்தி வில்லியம்ஸ் மலையாளி பெற்றோருக்கு தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்தார். இவர் 1979 இல் மலையாளியான ஒளிப்பதிவாளர் ஜே. வில்லியம்சை மணந்தார் [5] இவர்களுக்கு 4 குழந்தைகள் பிறந்தனர்.[2]
திரைப்படவியல்
தமிழ்
- வியட்நாம் வீடு (1970)
- மதன மாளிகை (1976)
- உயர்ந்தவர்கள் (1977)
- ஜெனரல் சக்ரவர்த்தி (1978) -
- மாந்தோப்புக்கிளியே (1979) - லட்சுமி
- பணம் பெண் பாசம் (1980)
- மூடு பனி (திரைப்படம்) (1980) - Chandru's mother
- நெஞ்சத்தை கிள்ளாதே (1980) - Viji's sister-in-law Mala
- ஜென்டில்மேன் (1993)
- கருப்பு நிலா (1995)
- கிழக்கு முகம் (1996)
- பூவே உனக்காக (1996)
- ஆஹா என்ன பொருத்தம் (1997) - மங்கலம்
- காதலே நிம்மதி (1998)
- சொல்லாமலே (1998)
- சுயம்வரம் (1999 திரைப்படம்) (1999) - பல்லவனின் தாய்
- Jodi (1999) - கண்ணனின் தாய்
- உனக்காக மட்டும் (2000) - மங்கலம்
- வானவில் (2000) - பிரியாவின் தாய்
- சிநேகிதியே (2000) - கல்லூரி முதல்வர்
- பெண்ணின் மனதைத் தொட்டு - மைதிலி
- பிரண்ட்ஸ் - பத்மினியின் தந்தையின் நண்பரின் மனைவி
- டும் டும் டும் (2001)
- ஆண்டான் அடிமை (திரைப்படம்) (2001)
- லவ்லி (2001) - நிவேதிதாவின் தாய்
- நரசிம்மா (2001) - வாணதியின் தாய்
- பூவெல்லாம் உன் வாசம் (2001)
- அள்ளித்தந்த வானம் (2001) - கண்ணம்மா
- 12 பி (திரைப்படம்) (2001) சக்தியின் தாய்
- மனதை திருடிவிட்டாய் (2001) - இந்துவின் தாய்
- ரோஜாக்கூட்டம் (2002) - ஆகாசின் தாய்
- கையோடு கை (2003) - ராஜாவின் தாய்
- பார்த்திபன் கனவு (2003) - பார்த்திபனின் தாய்
- திருமலை (திரைப்படம்) (2003) - திருமலையின் தாய்
- நதிக்கரையினிலே (2003)
- புன்னகை பூவே (2003)
- ஆய்த எழுத்து (திரைப்படம்) (2004) - செல்வநாயகத்தின் மனைவி
- மானஸ்தன் (2004)
- உதயா (2004)
- அந்நியன் (திரைப்படம்) (2005) - சுசீலா ராமானுஜன் தாய்
- ஆடும் கூத்து (2005) -
- Pasa Kiligal (2006) -
- ஒரு பொண்ணு ஒரு பையன் (2007) -
- அம்முவாகிய நான் (2007) - கோரிசங்கரின் தாய்
- சீனாதானா 001 (2007) - ஆளுநரின் மனைவி
- ஓடும் மேகங்களே (2008)
- கண்ணுக்குள்ளே (2009) - ஞானபிரகாசத்தின் மனைவி
- ஆச்சர்யங்கள் (2012) - வாணி
- மூன்று பேர் மூன்று காதல் (2013) - குணசேகரின் தாய்
- அம்மா அம்மம்மா (2014)
- பாபநாசம் (2015) - ராணியின் தாய்
- நான் அவளை சந்தித்தபோது (2019)
தொலைக்காட்சி
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | அலைவரிசை | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|---|
2000–2001 | சித்தி | பத்மாவதி | சன் தொலைக்காட்சி | தமிழ் | |
2002 | மருமகள் | விஜய் தொலைக்காட்சி | |||
2002–2005 | மெட்டி ஒலி | ராஜம்மா | சன் தொலைக்காட்சி | Won,சிறந்த எதிர்மறை பாத்திரத்திர நடிகைக்கான சன் குடும்ப விருதுகள் | |
2004 | தங்கமான புருசன் | கே தொலைக்காட்சி | |||
2004–2007 | தறகாபுக் கலை தேரடா | கலைஞர் தொலைக்காட்சி | |||
2004–2009 | மீனுகுடி | சூர்யா தொலைக்காட்சி | மலையாளம் | ||
2005 | மனைவி | சன் தொலைக்காட்சி | தமிழ் | ||
2006 | ராஜராஜேஸ்வரி | சன் தொலைக்காட்சி | தமிழ் | ||
நோம்பரப்பூவு | விமளா | ஏஷ்யாநெட் | மலையாளம் | ||
2007 | அரசி | Chandramathi | சன் தொலைக்காட்சி | தமிழ் | |
2008–2012 | வசந்தம் | ||||
2008–2009 | கலசம் | நாகலட்சுமி | |||
பந்தம் | தாமரை | ||||
2008 | வைர நெஞ்சம் | ||||
2009 | கல்யாணம் | சிவகாமி | |||
அவள் ஒரு மின்சாரம் | கலைஞர் தொலைக்காட்சி | ||||
2012-2013 | தங்கம் | ஆவுடையம்மாள் | சன் தொலைக்காட்சி | ||
2009–2011 | தென்றல் | ருக்மனி | Won,சிறந்த எதிர்மறை பாத்திரத்திர நடிகைக்கான சன் குடும்ப விருதுகள் | ||
2010 | அபிராமி | அபிராமியின் தாய் | கலைஞர் தொலைக்காட்சி | ||
மைதிலி | |||||
2011 | சாந்தி நிலையம் | ஜெயா தொலைக்காட்சி | |||
சினேககூடு | சூர்யா தொலைக்காட்சி | மலையாளம் | |||
2011–2013 | தங்கம் | ஆவுடையம்மாள் | சன் தொலைக்காட்சி | தமிழ் | |
சிவசங்கரி | |||||
உறவுகள் | சுதா | சன் தொலைக்காட்சி வசந்தம் தொலைக்காட்சி |
|||
2012–2014 | பிள்ளை நிலா | சாவித்திரி | சன் தொலைக்காட்சி | ||
2013–2018 | வாணி ராணி | அங்கயற்கண்னி | |||
2013–2014 | உறவுகள் சங்கமம் | ராஜ் தொலைக்காட்சி | |||
2015–2016 | ஆண்டாள் அழகர் | வடிவு | விஜய் தொலைக்காட்சி | ||
2016 | விஸ்வரூபம் | குமுதம் | பிளவர்ஸ் | மலையாளம் | |
2015–2016 | கேளடி கண்மணி | பாக்கியம் | சன் தொலைக்காட்சி | தமிழ் | |
2017–2018 | றெக்கை கட்டி பறக்குது மனசு | தாயாரம்மா | ஜீ தமிழ் | ||
2018 – தற்போது | பாண்டியன் ஸ்டோர்ஸ் | முல்லையின் தாய்-பார்வதி | விஜய் தொலைக்காட்சி | [6][7] | |
2018–2019 | தேனம் வயம்பம் | முல்லசேரி பகீரதி | சூர்யா தொலைக்காட்சி | மலையாளம் | [8] |
2018 | குட்டீஸ் | கன்னியம்மாள் | போகோ | தமிழ் | |
2019 | அழகு | சுதா, பூர்ணா, மாதனின் பாட்டி | சன் தொலைக்காட்சி | ||
கண்மணி | தமிழ்செல்வி | ||||
2019 – தற்போது | சந்திரலேகா | மீனாட்சி | |||
2019 | பூவே செம்பூவே | காந்திமதி | கலைஞர் தொலைக்காட்சி | ||
2019 – 2020 | ராஜாமகள் | காஞ்சனா | ஜீ தமிழ் | ||
2020 – தற்போது | செந்தூரப்பூவே | ராஜலட்சுமி | விஜய் தொலைக்காட்சி | ||
2020 | மகராசி | மீனாட்சி | சன் தொலைக்காட்சி | சிறப்புத் தோற்றம் |
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
- ↑ "TV and film actress Shanthi Williams". https://nettv4u.com/celebrity/tamil/tv-actress/shanthi-williams.
- ↑ 2.0 2.1 "Shanthi Williams talks about her acting career and personal life". https://cinema.vikatan.com/tamil-cinema/113886-shanthi-williams-talks-about-her-acting-career-and-personal-life.
- ↑ தி இந்து No "Mettioli" after June Monday, 25 April 2005 "Rajamma (Shanthi Williams), the traditional mother in the family, was glorified by director Thirumurugan."
- ↑ Mythili's century[தொடர்பிழந்த இணைப்பு] "Mythili, a mega-serial being telecast on Kalaignar TV ( Mondays to Fridays at 1.30 pm) has completed its 100th episode. On the occasion, 24 sarees were given to women who had written best comments about the serial. Mythili stars Ajay, Suja, Shanthi Williams and Viji Kitty. Written and directed by S G Ali Khan, Mythili is produced by Dr Shridhar Naarayanan and Vijaya Sridhar."
- ↑ "சாந்தகுமாரி சாந்தி வில்லியம்ஸ் ஆனா கதை..!". https://m.youtube.com/watch?v=-FI_ekLsWIQ.
- ↑ "'நான் எதிர்கொண்ட வலிகளும் கஷ்டங்களும் ரொம்ப அதிகம்!' - ரீ என்ட்ரி சாந்தி வில்லியம்ஸ் உருக்கம்". https://www.vikatan.com/tamil-cinema/139122-actress-shanthi-williams-talks-about-her-acting-comeback-experience.
- ↑ "Tamil TV show Pandian Stores team greets fans ahead of Pongal". https://m.timesofindia.com/tv/news/tamil/tamil-tv-show-pandian-stores-team-greets-fans-ahead-of-pongal/articleshow/67510377.cms.
- ↑ "Vivek Gopan to team-up with Sreelaya on new serial, Thenum Vayambum; The other casts who will play important roles are Thara Kalyan, Kottayam Rasheed, Rizabawa, Seenath, Manka Mahesh and Shanthi Williams.". https://m.timesofindia.com/tv/news/malayalam/vivek-gopan-to-team-up-with-sreelaya-on-new-serial-thenum-vayambum/articleshow/66179203.cms.