சொல்லாமலே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சொல்லாமலே
Sollamale
இயக்கம்சசி
தயாரிப்புஆர்.பி.சௌத்ரி
கதைசசி
இசைபாபி
நடிப்புலிவிங்சுடன்
கௌசல்யா
கரண்
விவேக்
ஆனந்த்
பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவுஆர்தர் ஆ. வில்சன்
படத்தொகுப்புவி.ஜெய்சங்கர்
கலையகம்சூப்பர் குட் பிலிம்சு
விநியோகம்சூப்பர் குட் பிலிம்சு
வெளியீடு31 சூலை 1998
ஓட்டம்158 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சொல்லாமலே (Sollamale) சசியின் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தமிழ்த் திரைப்படம் ஆகும். இயக்குநர் சசிக்கு இது முதல் திரைப்படமாகும் நடிகர் லிவிங்சுடனும் நடிகை கௌசல்யாவும் இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கரண், விவேக், ஆனந்த், பிரகாசு ராஜ் ஆகியோர் துணை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 1998 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று ஒரு வெற்றிப்படமாக அமைந்தது [1][2]. பின்னர் இத்திரைப்படம் தெலுங்கில் சீனு (1998), நடிகர் வெங்கடேசு மற்றும் நடிகை ட்விங்கிள் கன்னா ஆகியோரின் நடிப்பிலும், இந்தியில் பியார் திவானா ஒட்டா ஐ (2002) என்ற பெயரில் நடிகர் கோவிந்தா மற்றும் நடிகை ராணி முகர்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க திரைப்படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

கதை

நடராஜ் (லிவிங்சுடன்) ஒரு நேர்மையான அழகில்லாத ஒரு கிராமத்துக் கலைஞர் பாத்திரம் ஆவார். இவர் வேலை தேடுவதற்காக நகரத்திற்கு வருகிறார். அவர் ஒரு சிறிய நடிப்பு கலைஞராகிறார். இந்தியாவையும் அதன் கலாச்சாரத்தையும் நேசிக்கும் சுவேதா (கௌசல்யா) ஓர் அமெரிக்க குடிமகள் பாத்திரப் படைப்பு. இவர் பரதநாட்டியம் கற்க தனது உறவினர்களுடன் தங்கியிருக்கிறார். மென்மையான இயல்புடைய அன்பான இப்பெண், துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவ விரும்புகிறார். யாராவது பொய் சொன்னால் அல்லது ஏமாற்றினால் மட்டும் அவரால் தாங்க முடியாது. ஆரம்பத்தில் இந்த இருவரும் சந்திக்க நேரிடும்போது நடராஜ் ஓர் ஊமை என்று அவள் தவறாக நினைத்து அவனிடம் பரிதாபப்படுகிறாள். நடராசுடன் சுவேதா அவ்வப்போது நட்புறவு கொள்வது, உதவி செய்வது என படிப்படியாக அவர்கள் காதல் மெல்ல மலர்கிறது. இந்த நேரத்தில் குற்ற உணர்ச்சியடைய நடராஜ் அவளை இழக்க நேரிடும் என்று அஞ்சியதால் தான் ஊமையில்லை என்ற உண்மையை வெளிப்படுத்த மிகவும் தயங்கி சொல்லாமல் இருந்து விடுகிறார். உண்மையை வெளிப்படுத்த அவர் எவ்வளவு முயன்றாலும் முடியாமல் இறுதியாக சுவேதா இவரை ஒரு மோசடி பேர்வழியாக்க் கருதி விடுகிறார். இருப்பினும் இறுதியில், நடராஜ் ஊமையாக நடிப்பதற்கான உண்மையான நோக்கங்களை உணர்ந்து கதாநாயகி அவனை மன்னிக்கிறாள். இருப்பினும் படத்தின் இறுதிக் காட்சியில் சுவேதா நடராஜிடம் தன்னிடம் பேசும்படி கேட்கும்போது நடராஜ் அவ்வளவு நாளாக தான் நடித்ததை உண்மையாக்க மருத்துவரிடம் சென்று நாக்கை வெட்டிக் கொண்டதால் பேசமுடியாமல் அவர் அமைதியாக இருக்கிறார். படம் முடிகிறது

நடிகர்கள்

ஒலிப்பதிவு

எண். பாடல் பாடகர்கள்
1 "கோலம்பசு காதலா" மனோ
2 "சொல்லாதே" ஹரிஹரன் (பாடகர்), சித்ரா
3 "சிந்தாமணியே வா" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
4 "சொல்லு சொல்லு" பாபி , சித்ரா
5 "ராதிரிடா ரௌண்டடிடா" சபேசு
6 "சொல்லாதே" ஹரிஹரன்

வெளியீடு

பல ஆண்டுகளாக துணை வேடங்களில் மட்டுமே நடித்துவந்த லிவிங்சுடன்னுக்கு பாராட்டைப் பெற்றுத் தந்தது. இந்த திரைப்படம் இயக்குனர் சசிக்கு வெற்றிப்படமாக அமைந்து தமிழ் மொழித் திரைப்படங்களில் சசியின் வாழ்க்கையைத் தொடங்கி வைத்தது. பின்னர் அவர் ரோஜாக்கூட்டம் (2002) மற்றும் டிஷ்யூம் (2006) உள்ளிட்ட வெற்றிகரமான காதல் கதைகளை பின்னாளில் இயக்கினார். இசையமைப்பாளர் பாபி இசைக்காக சிறந்த இசை இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை இப்படத்திற்காக வென்றார் [3].

பின்னர் இது தெலுங்கு மொழியில் வெங்கடேஷ் மற்றும் ட்விங்கிள் கன்னா நடித்த சீனு(1998) என்ற திரைப்படமாக வெளிவந்தது. இந்தி மொழியில் கோவிந்தா மற்றும் ராணி முகர்ஜி ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரஙகலாக கொண்ட பியார் திவானா ஹோடா ஹை (2002) என்ற திரைப்படமாய் மறு ஆக்கம். செய்யப்பட்டது.

சான்றுகள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-10-19. பார்க்கப்பட்ட நாள் 2019-10-23.
  2. http://www.rediff.com/movies/1998/nov/10ss.htm
  3. http://rrtd.nic.in/Film%20Bulletin-July.html

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சொல்லாமலே&oldid=33635" இருந்து மீள்விக்கப்பட்டது