இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்
Jump to navigation
Jump to search
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238 முதல் 1250 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இவனுக்கு இளவரசுப் பட்டத்தினை சூட்டினான். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் இறப்பிற்குப் பின்னர் சில மாதங்கள் இரண்டாம் சடையவர்மன் குலசேகரன்[1][2] ஆட்சி செய்தான் என திருத்தாங்கல் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவனது மெய்க்கீர்த்தி 'பூதலவனிதை' எனத் தொடங்குவதும் குறிப்பிடத்தக்கது.