ஆர்த்தி (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆர்த்தி
Aarathi (actress).jpg
பணிநடிகை, நகைச்சுவையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1987 – தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
கணேஷ்கர்

ஆர்த்தி கணேஷ்கர், ஒரு தென்னிந்தியத் திரைப்பட தொலைக்காட்சி நடிகை.[1] இவர் பல திரைப்படங்களில் நகைச்சுவையூட்டும் வேடத்தில் நடித்துள்ளார், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அசத்தப் போவது யாரு? நிகழ்ச்சியின் நடுவராகவும் உள்ளார்.[2]. கணேஷ்கர் என்ற நகைச்சுவை நடிகரைத் திருமணம் செய்துகொண்டார்.[3] இவர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் கலந்துகொண்டு இரண்டாவது பரிசை வென்றார். இந்திய ஆட்சிப் பணியாளராக விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

1987ம் ஆண்டு வெளிவந்த வண்ணக் கனவுகள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்பட சுமார் 65 திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். குழந்தைப்பருவத்தில் சககுழந்தை நட்சத்திரமும் தற்போது இவருடைய கணவருமான கணேஷ்கரின் சகோதரியாக, என் தங்கை கல்யாணி திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ்நாட்டின் கலைமாமணி விருதினைப் பெற்றுள்ளார்.

திரைப்படங்கள்

வருடம் திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1987 வண்ணக் கனவுகள் குழந்தைப்பருவ நடிகர்
1988 என் தங்கை கல்யாணி குழந்தைப்பருவ நடிகர்
1989 தென்றல் சுடும் குழந்தைப்பருவ நடிகர்
1990 சத்ரியன் குழந்தைப்பருவ நடிகர்
1990 காவலுக்குக் கெட்டிக்காரன் குழந்தைப்பருவ நடிகர்
2004 அருள் நீலவேணி
2004 கிரி வடிவேலுவின் உதவியாளர்
2005 காற்றுள்ளவரை வடிவேலுவின் மனைவி
2005 குண்டக்க மண்டக்க
2005 மாயாவி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி
2006 நெஞ்சிருக்கும் வரை
2006 திருப்பதி
2006 குஸ்தி
2007 மலைக்கோட்டை
2007 தாமிரபரணி
2008 காதல் வானிலே
2008 குருவி
2009 மலை மலை மேலாளர் அருந்ததி
2009 அடடா என்ன அழகு
2009 வில்லு
2009 தோரணை
2009 ஐந்தாம் படை டையானா
2009 புதிய பயணம்
2009 படிக்காதவன் திருக்கானி
2009 சூரியன் சட்ட கல்லூரி
2009 குரு என் ஆளு
2010 குட்டி
2010 கச்சேரி ஆரம்பம்
2010 தம்பிக்கு இந்த ஊரு
2010 குரு சிஷ்யன் மோகனாம்பாள்
2010 வீரசேகரன்
2010 தைரியம்
2010 பலே பாண்டியா
2010 உத்தம புத்திரன்
2011 தம்பிக்கோட்டை
2011 கந்தா
2011 காதலுக்காக பொருத்தம்
2011 மதுவும் மைதிலியும்
2011 ஒரு முத்தம் ஒரு யுத்தம்
2011 அழகன் அழகி
2011 சவுரியம் (தெலுங்கு)
2011 விஷ்ணுவர்தன் (கன்னடம்)
2012 கழுகு
2012 தடையறத் தாக்க
2013 எதிர்நீச்சல்
2013 நான் ராஜாவாகப் போகிறேன் கராத்தே துர்கா
2013 சொன்னா புரியாது
2013 யா யா
2013 வணக்கம் சென்னை
2014 இங்க என்ன சொல்லுது
2014 இது கதிர்வேலன் காதல்
2014 நான் சிகப்பு மனிதன்
2014 வெற்றிச் செல்வன்
2014 அரண்மனை
2014 கயல்
2015 கில்லாடி
2015 யட்சன்

தொலைக்காட்சியில்

விருதுகள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆர்த்தி_(நடிகை)&oldid=22392" இருந்து மீள்விக்கப்பட்டது