தடையறத் தாக்க

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தடையறத் தாக்க
இயக்கம்மகிழ் திருமேனி
தயாரிப்புசுசில் மோகன்
ஏமந்து
இசைசீ. தமன்
நடிப்புஅருண் விஜய்
மம்தா மோகன்தாசு
ரகுல் பிரீத் சிங்
ஒளிப்பதிவுசுகுமார்
படத்தொகுப்புகே. எல். பிரவீண்
என். பி. சிறீகாந்து
கலையகம்பெதர் டச் என்டர்டெயிண்மன்டு
வெளியீடுசூன் 1, 2012 (2012-06-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தடையறத் தாக்க என்பது 2012ல் வெளி வந்த தமிழ் திரைப்படமாகும். இதை மகிழ் திருமேனி இயக்கினார். அருண் விஜய், மம்தா மோகன்தாசு போன்றோர் நடித்துள்ளனர்.

கதை

செல்வா (அருண் விஜய்) வாடகைக்கு மகிழுந்து விடும் கடையை வைத்துள்ளார். அவரின் காதலி பிரியா (மம்தா மோகன்தாசு). பிரியாவின் வீட்டில் திருமணத்திற்கு அனுமதி பெறுகிறார் செல்வா. தன் தோழிக்கு உதவப்போய் சென்னையின் பெரிய தாதா மகாவை சந்திக்கிறார். மர்மமான முறையில் மகா இறந்துவிடுகிறார். மகாவை கொல்ல பயன்படுத்தப்பட்ட மட்டையின் ஒரு பகுதி செல்வா சென்ற மகிழுந்தில் இருந்ததால் அவரின் இறப்பிற்கு காரணம் செல்வா என மகாவின் தம்பி குமார் கருதுகிறார். அதனால் அவரை கொல்ல முயல்கிறார். அவரிடம் இருந்து தப்ப செல்வா முயல்கிறார். உண்மையான கொலையாளி யார் என்று கண்டுபிடிக்கிறார். குற்றவாளியை காத்து மகா\செல்வா குழுவை ஒழித்துகட்டுகிறார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=தடையறத்_தாக்க&oldid=33810" இருந்து மீள்விக்கப்பட்டது