அம்பாசமுத்திரம் வட்டம்
Jump to navigation
Jump to search
அம்பாசமுத்திரம் வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] கி.பி.1861 வரை பிரம்மதேசம் என்ற ஊரே அம்பாசமுத்திரம் வட்டத்தின் தலைநகராக இருந்தது. அதன் பின்புதான் அம்பாசமுத்திரம் வட்டத்தின் தலைநகராயிற்று. [2]இதன் வட்டாட்சியர் அலுவலகம் அம்பாசமுத்திரத்தில் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் கடையம், ஆழ்வார்குறிச்சி, சிங்கம்பட்டி, அம்பாசமுத்திரம் என 4 குறுவட்ட ங்களும், 54 வருவாய் கிராமங்களும் உள்ளன. [3]
இவ்வட்டத்தில் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கடையம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [4]
- மக்கள்தொகை = 428,031
- ஆண்கள் = 210,447
- பெண்கள் = 217,584
- குடும்பங்கள் = 116,698
- கிராமப்புற மக்கள்தொகை % = 42.7%
- எழுத்தறிவு = 85.33%
- பாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 1,034 பெண்கள்
- 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 43962
- குழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 960 பெண் குழந்தைகள்
- பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = 75,049 மற்றும் 1,643
சமயம்
- இந்துக்கள் = 80.41%
- இசுலாமியர்கள் = 8.72%
- கிறித்தவர்கள் = 10.68%
- பிறர்= 0.18%
மேற்கோள்கள்
- ↑ திருநெல்வேலி மாவட்ட வருவாய் நிா்வாகம்
- ↑ பொதிகைச்சாரல் மாத இதழில் (பிப்ரவரி-2011) வரலாற்று ஆசிரியர் செ. திவான் எழுதிய அம்பாசமுத்திரம் கட்டுரை.
- ↑ வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ↑ Ambachamudram Taluka Population, Caste, Religion Census Data 2011