பாபட்லா - 1235

தமிழர்விக்கியிலிருந்து
imported>Anbumunusamy பயனரால் செய்யப்பட்ட 13:43, 14 ஆகத்து 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பாபட்லா - 1235
BPT 1235
வேளாண் பெயர்
தானிய லட்சுமி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
சபர்மதி X W12708
வகை
கலப்பின நெல் வகை
காலம்
120 - 125 நாட்கள்[1]
மகசூல்
6500 - 7000 கிலோ எக்டேர்
வெளியீடு
1982
வெளியீட்டு நிறுவனம்
CVRC / SVRC, பாபட்லா[2]
மாநிலம்
ஆந்திரப் பிரதேசம்
நாடு
 இந்தியா

பாபட்லா - 1235 (BPT 1235), எனப்படும் இந்த நெல் வகை, சபர்மதி மற்றும் W12708 ஆகிய நெல் இரகங்களை பரம்பரை முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட, தென்னிந்தியப் பிராந்தியமான ஆந்திர மாநிலத்தின் நெல் இரகமாகும். "நடுவண் வகை வெளியீட்டுக் குழு (CVRC)" மற்றும் "மாநில வகை வெளியீட்டுக் குழு (SVRC)" ஆகியவையால் 1982 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, தானிய லட்சுமி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]

காலம்

குறுகிய கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 120 - 125 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. குறுவை சாகுபடி பருவங்களில் பயிரிடப்படும் இந்த நெல்வகை, வறட்சியை தாங்கி வளரரும் இயல்பு கொண்டதாக கருதப்படுகிறது.[1]

மகசூல்

பித்தப்பை பூச்சி, தண்டு துளைப்பான் போன்ற நோய்கள் தாக்குதல்களை தாங்கும் பாபட்லா - 1235, ஒரு எக்டேருக்கு சுமார் 6,500 முதல், 7000 கிலோ வரை மகசூல் தருவதாக கூறப்படுகிறது. [1]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 "Dhanya Lakshmi (BPT 1235)" (PDF). angrau.ac.in (ஆங்கிலம்) - © TNAU 2008 - 2023. Retrieved 2025-08-12.
  2. Paddy varieties released from Agricultural Research Station, Bapatla
"https://tamilar.wiki/w/index.php?title=பாபட்லா_-_1235&oldid=433647" இலிருந்து மீள்விக்கப்பட்டது