மீ. ப. சோமு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi |
imported>S. ArunachalamBot சி →வெளி இணைப்புகள்: clean up using AWB |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 15: | வரிசை 15: | ||
|employer = [[அகில இந்திய வானொலி]] |
|employer = [[அகில இந்திய வானொலி]] |
||
|occupation = தலைமைத் தயாரிப்பாளர் |
|occupation = தலைமைத் தயாரிப்பாளர் |
||
|title = |
|title = |
||
|religion = |
|religion = |
||
|spouse = |
|spouse = |
||
| வரிசை 34: | வரிசை 34: | ||
*சாகித்திய அகாதமி விருது - பயணக்கட்டுரை: ''அக்கரைச்சீமையில் ஆறுமாதங்கள்''. |
*சாகித்திய அகாதமி விருது - பயணக்கட்டுரை: ''அக்கரைச்சீமையில் ஆறுமாதங்கள்''. |
||
*[[தமிழக அரசு]] விருது - கவிதைத் தொகுப்பு: ''இளவேனில்''. |
*[[தமிழக அரசு]] விருது - கவிதைத் தொகுப்பு: ''இளவேனில்''. |
||
*[[இசைப்பேரறிஞர் விருது]], 1980. வழங்கியது: [[தமிழ் இசைச் சங்கம்]], சென்னை.<ref |
*[[இசைப்பேரறிஞர் விருது]], 1980. வழங்கியது: [[தமிழ் இசைச் சங்கம்]], சென்னை.<ref>{{cite news |title=இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள் |url=https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html |accessdate=15 June 2024 |agency=தமிழ் இசைச் சங்கம்}}</ref> |
||
* பல்கலை வித்தகர், [[தருமை ஆதீனம்]]<ref name=Kalki>[https://s-pasupathy.blogspot.com/2022/10/2259-332.html சங்கீத சங்கதிகள்], கல்கி</ref> |
* பல்கலை வித்தகர், [[தருமை ஆதீனம்]]<ref name=Kalki>[https://s-pasupathy.blogspot.com/2022/10/2259-332.html சங்கீத சங்கதிகள்], கல்கி</ref> |
||
* முத்தமிழ்ச் செல்வர், யாழ்ப்பாணம் ஆதீனம்<ref name=Kalki/> |
* முத்தமிழ்ச் செல்வர், யாழ்ப்பாணம் ஆதீனம்<ref name=Kalki/> |
||
== எழுதிய நூல்கள் == |
|||
(முழுமையானதல்ல) |
(முழுமையானதல்ல) |
||
== கவிதைகள் == |
=== கவிதைகள் === |
||
*இளவேனில் |
*இளவேனில் |
||
*குடிகாட்டு வேழமுகன் வெண்பா மாலை |
*குடிகாட்டு வேழமுகன் வெண்பா மாலை |
||
== சிறுகதைகள் == |
=== சிறுகதைகள் === |
||
*கேளாத கானம் |
*கேளாத கானம் |
||
*உதய குமாரி |
*உதய குமாரி |
||
| வரிசை 53: | வரிசை 53: | ||
*திருப்புகழ் சாமியார் |
*திருப்புகழ் சாமியார் |
||
== புதினங்கள் == |
=== புதினங்கள் === |
||
*ரவிச்சந்திரிகா |
*ரவிச்சந்திரிகா |
||
*கடல் கண்ட கனவு |
*கடல் கண்ட கனவு |
||
| வரிசை 60: | வரிசை 60: | ||
*எந்தையும் தாயும் |
*எந்தையும் தாயும் |
||
== கட்டுரைகள் == |
=== கட்டுரைகள் === |
||
*கார்த்திகேயனி |
*கார்த்திகேயனி |
||
*ஐந்தருவி |
*ஐந்தருவி |
||
| வரிசை 85: | வரிசை 85: | ||
[[பகுப்பு:1921 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1921 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:1999 இறப்புகள்]] |
[[பகுப்பு:1999 இறப்புகள்]] |
||
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட |
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட மக்கள்]] |
||
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
||
07:33, 24 மே 2025 இல் கடைசித் திருத்தம்
மீ. ப. சோமு | |
|---|---|
![]() | |
| பிறப்பு | சோமசுந்தரம் 17 சூன் 1921 மீனாட்சிபுரம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு |
| இறப்பு | January 15, 1999 (aged 77) |
| கல்வி | வித்துவான் (சென்னைப் பல்கலைக்கழகம்) |
| பணி | தலைமைத் தயாரிப்பாளர் |
| பணியகம் | அகில இந்திய வானொலி |
| அறியப்படுவது | எழுத்தாளர் |
| விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (1962) |
மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் பிறந்தவர். கோவில் தேவார ஓதுவார்கள் மரபில் தோன்றியவர்.[1] இளமையில் வாய்ப்பாட்டுடன் வீணையும் சாரங்கியும் பயின்றார்.[1] சென்னை பல்கலைக்கழகத்தில் கீழ்த்திசையியல் படித்து வித்வான் பட்டம் பெற்றவர். டி. கே. சியுடனான தொடர்பு மூலம் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டார்.[1] இவர் புதுமைப்பித்தனின் நண்பர். 1938ல் ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்றார். அவர் 1946ல் இளவேனில் என்ற அவரது கவிதைத் தொகுப்பு வெளியானது. அக்கவிதைத் தொகுப்பு மாநில அரசின் விருது பெற்றது. 1954 – 56களில் கல்கி இதழின் ஆசிரியராகப் பணி புரிந்தார். 1958 -60 களில் நண்பன் என்ற மாத இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய வானொலியில் பணியாற்றி 1981 இல் ஓய்வு பெற்றார். அங்கு தலைமைத் தயாரிப்பாளராகவும் பண் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். இவரது சாகித்தியங்கள் பல வானொலியில் ஒலிபரப்பாயுள்ளன.[1] அவரது பயணக் கட்டுரை அக்கரைச்சீமையில் ஆறுமாதங்கள் 1962ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. அவர் எண்ணற்ற கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் மற்றும் இசை ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழ்க்கலைக்களஞ்சியத்திலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சோமு 1999ல் மரணமடைந்தார்.[2][3][4][5]
விருதுகளும் பட்டங்களும்
- சாகித்திய அகாதமி விருது - பயணக்கட்டுரை: அக்கரைச்சீமையில் ஆறுமாதங்கள்.
- தமிழக அரசு விருது - கவிதைத் தொகுப்பு: இளவேனில்.
- இசைப்பேரறிஞர் விருது, 1980. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[6]
- பல்கலை வித்தகர், தருமை ஆதீனம்[1]
- முத்தமிழ்ச் செல்வர், யாழ்ப்பாணம் ஆதீனம்[1]
எழுதிய நூல்கள்
(முழுமையானதல்ல)
கவிதைகள்
- இளவேனில்
- குடிகாட்டு வேழமுகன் வெண்பா மாலை
சிறுகதைகள்
- கேளாத கானம்
- உதய குமாரி
- ஐம்பொன்மெட்டி
- மஞ்சள் ரோஜா
- மனை மங்களம்
- கல்லறை மோகினி
- திருப்புகழ் சாமியார்
புதினங்கள்
- ரவிச்சந்திரிகா
- கடல் கண்ட கனவு
- நந்தவனம்
- வெண்ணிலவுப் பெண்ணரசி
- எந்தையும் தாயும்
கட்டுரைகள்
- கார்த்திகேயனி
- ஐந்தருவி
- பிள்ளையார் சாட்சி
- நீங்காத நினைவுகள்
- சித்தர் இலக்கியம் ( 3 பகுதிகள் )
- நமது செல்வம்
- அக்கரைச் சீமையில் ஆறு மாதங்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
- புதுமைப்பித்தன் சிறுகதைகள் (நூல்)
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 சங்கீத சங்கதிகள், கல்கி
- ↑ Kay, Ernest (1972). International who's who in poetry. p. 395. ISBN 9780900332197.
- ↑ Lal, Mohan (2006). The Encyclopaedia Of Indian Literature (Volume Five (Sasay To Zorgot), Volume 5. சாகித்திய அகாதமி. p. 4136. ISBN 9788126012213.
- ↑ Tamil Sahitya Akademi Awards 1955-2007 பரணிடப்பட்டது 2010-01-24 at the வந்தவழி இயந்திரம் சாகித்திய அகாதமி Official website.
- ↑ Dutt, Kartik Chandra (1999). Who's who of Indian Writers, 1999: A-M. Sahitya Akademi. p. 1291. ISBN 9788126008735.
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 15 June 2024.
வெளி இணைப்புகள்
- மீ.ப.சோமுவின் சில படைப்புகள்
- ‘சித்தர் இலக்கியச் செம்மல்’ மீ.ப.சோமு, திருப்பூர் கிருஷ்ணன் தினமணிக் கட்டுரை, 1 மே, 2011.
- மீ. ப. சோமு, தென்றல், சனவரி 2016
