மைனாவதி (நடிகை)
மைனாவதி | |
---|---|
பிறப்பு | எம். மைனாவதி 26 சூலை 1935 பத்கல், வட கன்னடம் |
இறப்பு | 10 நவம்பர் 2012 பெங்களூர், கருநாடகம் | (அகவை 77)
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1955–2012 |
வாழ்க்கைத் துணை | டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணா |
பிள்ளைகள் | 3 |
உறவினர்கள் | பண்டரிபாய் (அக்காள்) |
மைனாவதி (Mynavathi, 26 யூலை 1935 - 10 நவம்பர் 2012) என்பவர் ஒரு இந்திய நடிகையாவார். இவர் 1955 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான சாந்தா சாகுவில் நடிகையாக அறிமுகமானார். 100 இக்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ள இவர் பிரபல நடிகையான பண்டரி பாயின் தங்கை ஆவார். 1959 ஆம் ஆண்டு கன்னடத் திரைப்படமான அப்பா ஆ ஹுடுகி படத்தில் நடித்தப் பிறகு இவர் பிரபலமானார். அதில் ராஜ்குமார் மற்றும் இவரது சகோதரி பண்டரி பாயுடன் இணைந்து நடித்ததிருந்தார். எச். எல். என். சிம்கா இயக்கிய அப்படத்தில் ஆண்களை வெறுக்கும் எதேச்சதிகார பெண்ணாக இவர் நடித்தார். அப்படம் வில்லியம் ஷேக்ஸ்பியரின் தி டேமிங் ஆஃப் தி ஷ்ரூ நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.
தொழில்
1955 இல் அறிமுகமான பிறகு, மைனாவதி ராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பக்த விஜயா, ஹரி பக்தா மற்றும் ராயர சொசே ஆகிய படங்களில் நடித்தார். மேலும் இவர் கல்யாண் குமார் மற்றும் உதய்குமார் போன்ற கன்னட சினிமாவின் மற்ற பிரபலங்களுடன் நடித்துள்ளார். கச்ச தேவயானி, நானே பாக்யவதி, அனுராதா, அன்னபூர்ணா, சர்வஜனமூர்த்தி, அம்மா, முத்தைத பாக்யா, ஒப்பாரிகிந்தா ஒப்பரு ஆகியவை இவர் நடித்த சில பிரபலமான கன்னடப் படங்கள் ஆகும். தமிழில் சிவாஜி கணேசனுடன் நடித்துள்ளார். 1980 களில் தனது மகன்களுடன் இணைந்து "யந்த்ரா மீடியா" என்ற நிறுவனத்தைத் தொடங்கி, தொலைக்காட்சி துறையில் நுழைந்தார். இவர் அம்மா, மனேதானா, மகாயக்ஞம், சுமங்கலி ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.[1]
இறப்பு
மைனாவதி 10 நவம்பர் 2012 அன்று பெங்களூரில் உள்ள பிஜிஎஸ் குளோபல் மருத்துவமனையில் மாரடைப்பால் இறந்தார்.
திரைப்படவியல்
கன்னடம்
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1956 | பக்த விஜயா | ||
1956 | ஹரி பக்த | ||
1956 | முத்தைதே பாக்யா | வித்யாவதி | |
1956 | கச்ச தேவயானி | ||
1957 | பெட்டத கள்ளா | ||
1957 | ராயர சொசெ | லட்சுமி | |
1958 | பொம்மலபெள்ளி | கண்ணம்மா | |
1959 | அப்பா ஆ ஹுடுகி | ஷர்மிஷ்தா | |
1959 | மனேகே பந்த மஹாலட்சுமி | ||
1964 | அன்னபூர்ணா | ஆஷாதேவி | |
1964 | நவஜீவன | ||
1965 | சர்வஞான மூர்த்தி | ||
1965 | மஹாசதி அனசூயா | சிறப்புத் தோற்றம் | |
1967 | ஸ்ரீ புரந்தரதாசரு | வட்டரங்கப் பெண் | சிறப்புத் தோற்றம் |
1967 | அனுராதா | அனுராதா | |
1968 | நானே பாக்யவதி | ||
1968 | கௌரி காந்தா | ||
1968 | அம்மா | ||
1969 | கண்டொந்து ஹென்னெரடு | சீதை | |
1970 | ஸ்ரீ கிருஷ்ணதேவராயா | ||
1970 | முரு முத்துகளு | ||
1970 | அலியா கெலயா | ||
1976 | முகியத கதே | ||
1977 | பாக்யவந்தரு | குண்டு ராவின் மனைவி | |
1992 | மன மெச்சித சொசே | சாவித்திரி | |
1992 | பிரேம சங்கம | ||
1993 | பகவான் ஸ்ரீ சாய்பாபா | பண்டரிபாய் |
தமிழ்
மேற்கோள்கள்
- ↑ "Actor Mynavathi passes away". The Hindu இம் மூலத்தில் இருந்து 12 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201012063251/https://www.thehindu.com/todays-paper/tp-national/actor-mynavathi-passes-away/article4086807.ece. பார்த்த நாள்: 2012-11-13.