ஏ. டி. கிருஷ்ணசாமி

ஏ. டி. கிருஷ்ணசாமி (A. T. Krishnaswamy, 1905 – திசம்பர் 24, 1987) தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரும், கதை வசன எழுத்தாளரும், தயாரிப்பாளரும் ஆவார். 1941 இல் வெளிவந்த சபாபதி திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது.[1]

ஏ. டி. கிருஷ்ணசாமி
ஏ. டி. கிருஷ்ணசாமி
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஏ. டி. கிருஷ்ணசாமி
பிறந்ததிகதி 1905
இறப்பு திசம்பர் 24, 1987 (அகவை 81–82)
பணி திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், கதை, வசன எழுத்தாளர்
தேசியம் இந்தியர்
அறியப்படுவது சபாபதி (1941 திரைப்படம்)
செயற்பட்ட ஆண்டுகள் 1930கள் - 1971
செயற்பட்ட ஆண்டுகள் 1930கள் - 1971

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்நாடு, வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி படிக்கும் போதே நாடகங்கள் எழுதுவதிலும் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டார். பம்மல் சம்பந்த முதலியாரின் சுகுண விலாச சபா நாடகக் கம்பனியில் இணைந்து நடித்தார்.[1]

கிருஷ்ணசுவாமி 1934-ஆம் ஆண்டிலேயே ஏ. வி. மெய்யப்பனின் தொடர்புகள் ஏற்பட்டது. அவரது சரசுவதி ஸ்டோர்சு என்ற இசைத்தட்டு நிறுவனம் வெளியிட்ட நாடக இசைத்தட்டுகளுக்கு வசனம் எழுதிக் கொடுத்தார்.[1] ஏவிஎம் நிறுவனம் தயாரித்த நந்தகுமார் (1938) திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம் பாடிய ‘யுக தர்ம முறையே' என்ற பாடலை எழுதினார்.[1] இதே படத்தில் லலிதா வெங்கடராமன் பின்னணி பாடிய ‘தீனதயாபரனே திவ்யனே' என்ற பாடலையும் இயற்றினார்.[1]

ஏவிஎம்மின் சபாபதி (1941) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[1] கன்னடத்தில் வெளியான சத்ய ஹரிச்சந்திரா என்ற வெற்றிப் படத்தை இயக்கினார். இது 1944 இல் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தது. தமிழ்ப் படத்திற்கு இவரே வசனங்களை எழுதினார்.[1] தொடர்ந்து வித்யாபதி (1946), மனம் ஒரு குரங்கு ஆகிய திரைப்படங்களை இயக்கினார். அறிவாளி இவரது மற்றுமொரு வெற்றிப் படம் ஆகும்.[2]

இயக்கிய திரைப்படங்கள்

திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஏ._டி._கிருஷ்ணசாமி&oldid=20860" இருந்து மீள்விக்கப்பட்டது