மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
சுருக்கக்குறிமதிமுக
நிறுவனர்வைகோ
பொதுச் செயலாளர்வைகோ
மாநிலங்களவைத் தலைவர்வைகோ
தொடக்கம்மே 6, 1994
தலைமையகம்தாயகம், எழும்பூர், சென்னை
தொழிலாளர் அமைப்புமறுமலர்ச்சி தொழிலாளர் முன்னனி
கொள்கைசமூக சனநாயகம்
கூட்டணி1)மதிமுக : சொந்த கூட்டணி மக்கள் ஜனநாயக முன்னணி (1996–1998) & மக்கள் நலக் கூட்டணி (2015–2016)
2)பாரதிய ஜனதா கட்சி : (தேஜகூ) (1998–2004 & 2014–2014)
3)அதிமுக : ஜனநாயக மக்கள் கூட்டணி (2006–2009)
4)அதிமுகசிபிஎம் : (ஐதேமுகூ) (2009–2011)
5)திமுககாங்கிரஸ் : (ஐமுகூ) (2004–2007) & (2019–தொடர் கூட்டணி)
6)திமுக : (மமுகூ) (2021–தற்போது வரை)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 543
(தற்போது 543 உறுப்பினர்கள்)
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 245
(தற்போது 242 உறுப்பினர்கள்)
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(தமிழ்நாடு சட்டப் பேரவை)
4 / 234
தேர்தல் சின்னம்
Indian Election Symbol Matchbox.png
இணையதளம்
mdmk.org.in

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ( ம. தி. மு. க., Marumalarchi Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். 1993 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ உட்பட சிலர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து,‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். 1994 ஆம் ஆண்டு மே 6 ஆம் நாள், சென்னை, தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய பொதுக்குழு, புதிய அமைப்பின் கொடி, கொள்கை, குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்தது.

தேர்தல் பங்களிப்பு

தேர்தல் வெற்றிகள்

வரிசை எண் நாடாளுமன்றத் தேர்தல் ஆண்டு தொகுதிகள்
1 1998 சிவகாசி, திண்டிவனம், பழநி
2 1999 சிவகாசி, திண்டிவனம், பொள்ளாச்சி, திருச்செங்கோடு
3 2004 சிவகாசி, வந்தவாசி, பொள்ளாச்சி, திருச்சி
4 2009 ஈரோடு
5 2019 ஈரோடு
6 2024 திருச்சிராப்பள்ளி
வரிசை எண் 2006 சட்டமன்றத் தேர்தல் 2021 சட்டமன்றத் தேர்தல்
1 சிவகாசி சாத்தூர்
2 விருதுநகர் வாசுதேவநல்லூர்
3 வாசுதேவநல்லூர் மதுரை தெற்கு
4 திருமங்கலம் அரியலூர்
5 கம்பம்
6 தொண்டாமுத்தூர்

ஒன்றிய அமைச்சரவையில் பங்கு

மூன்றாவது வாச்பாய் அரசு (13 அக்டோபர் 1999 - 22 மே 2004)
அமைச்சர் அமைச்சர் பதவி பதவிக் காலம்
செஞ்சி என். இராமச்சந்திரன் நிதி 30 செப்டம்பர் 2000 - 1 யூலை 2002
செஞ்சி என். இராமச்சந்திரன் நிதி & பெருநிறுவன விவகாரம் 1 யூலை 2002 - 24 மே 2003
செஞ்சி என். இராமச்சந்திரன் நெசவு (டெக்சுடைல்) 13 அக்டோபர் 1999 - 30 செப்டம்பர் 2000
செஞ்சி என். இராமச்சந்திரன் நெசவு (டெக்சுடைல்) 8 செப்டம்பர் 2003 - 30 டிசம்பர் 2003
மு. கண்ணப்பன் மரபுசாரா எரிசக்தி 13 அக்டோபர் 1999 - 30 டிசம்பர் 2003

தேர்தல் சின்னம்

Indian Election Symbol Umberlla.png 1996 ஆம் ஆண்டில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இக்கட்சிக்கு குடை சின்னம் வழங்கப்பட்டது.

Indian Election Symbol Top.png சூலை 29, 2010 ஆணையில் இந்தியத் தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சிக்கான விதிகளை மதிமுக பெறாததால் மதிமுக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்தது. ஆனால் இக்கட்சி பம்பரம் சின்னத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் எனக் கூறியது.[1][2]

Indian Election Symbol Matchbox.png 2024 நாடாளுமன்ற தேர்தலில், தேர்தல் ஆணையம் மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னத்தை திருச்சி மக்களவைத் தொகுதிக்கு ஒதுக்கியுள்ளது.

முக்கிய மதிமுக அரசியல்வாதிகள்

பதவி பெயர்
நிறுவன பொதுச்செயலாளர் வைகோ
அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ்
முதன்மை செயலாளர் துரை வைகோ
துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா
செஞ்சி ஏ. கே. மணி
ஆடுதுறை முருகன்
ரொகையா பீவி சேக் அகமது
தி. மு.இராசேந்திரன்
கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தியத்தேவன்
பொருளாளர் நெய்வேலி செந்திலதிபன்
மாணவர் அணி மாநில செயலாளர் பால.சசிகுமார்
அமைப்புச்செயலாளர் பிரியக்குமார்
செய்தி தொடர்பு செயலாளர் நன்மாறன்

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-02. பார்க்கப்பட்ட நாள் 2010-07-31.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2010-07-31.

வெளி இணைப்புகள்