பகுஜன் சமாஜ் கட்சி
பகுஜன் சமாஜ் கட்சி Bahujan Samaj Party | |
---|---|
தலைவர் | மாயாவதி |
தொடக்கம் | 1984 |
தலைமையகம் | 12, குருத்வாரா ராகப்காஞ் சாலை, புது தில்லி - 110001 |
மாணவர் அமைப்பு | பகுஜன் சமாஜ் மாணவர் பேரவை |
இளைஞர் அமைப்பு | பகுஜன் சமாஜ் யுவ மோர்ச்சா |
கொள்கை | தலித் சமவுடமை மதசார்பற்ற சமூக மாற்றம் |
அரசியல் நிலைப்பாடு | Centre |
நிறங்கள் | நீலம் |
இ.தே.ஆ நிலை | தேசிய அரசியல் கட்சி[1] |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 1 / 245 |
தேர்தல் சின்னம் | |
இணையதளம் | |
bspindia.org |
பகுஜன் சமாஜ் கட்சி (பகுசன் சமாச் கட்சி) ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். இது கான்ஷிராம் என்பவரால் ஏப்ரல் 1984இல் தோற்றுவிக்கப்பட்டது. இது தலித்துகள் எனப்படும் தாழ்த்தப்பட்டோரை பிரதிநிதிப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். இதன் சின்னம் யானை. 2001இல் கன்ஷிராம் தன்னுடைய அரசியல் வாரிசாக மாயாவதியை அறிவித்தார்.
13ஆவது மக்களவையில் (1999-2004) இதற்கு 14 இடங்கள் கிடைத்தது. 14வது மக்களவையில் 19 இடங்களை இக்கட்சி பெற்றது. இதன் தலைவராக மாயாவதி உள்ளார். இவர் உத்திர பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தார். இக்கட்சி மற்ற மாநிலங்களை விட உத்தரப் பிரதேசத்தில் பலமாக உள்ளது.
மக்களவைத் தேர்தல்
மக்களவைக் காலங்கள் | ஆண்டு | போட்டியிட்ட இடங்கள் |
வெற்றிகள் | +/- இடங்கள் | ஓட்டு% | +/- ஓட்டு% | மாநிலம் (சீட்டுகள்) |
---|---|---|---|---|---|---|---|
ஒன்பதாவது மக்களவை | 1989 இந்தியப் பொதுத் தேர்தல் | 245 | 4 / 543
|
4 | 2.07% | - | பஞ்சாப்(1) உபி(3)[2] |
பத்தாவது மக்களவை | 1991 இந்தியப் பொதுத் தேர்தல் | 231 | 3 / 543
|
▼ 1 | 1.61% | ▼ 0.46% | மபி (1) பஞ்சாப் (1) உபி (1)[3] |
பதினொராவது மக்களவை | 1996 இந்தியப் பொதுத் தேர்தல் | 210 | 11 / 543
|
8 | 4.02% | 2.41% | மபி (2) பஞ்சாப் (3) உபி(6) |
பன்னிரண்டாவது மக்களவை | 1998 இந்தியப் பொதுத் தேர்தல் | 251 | 5 / 543
|
▼ 6 | 4.67% | 0.65% | ஹரியானா(1) உபி(4) |
பதின்மூன்றாவது மக்களவை | 1999 இந்தியப் பொதுத் தேர்தல் | 225 | 14 / 543
|
9 | 4.16% | ▼ 0.49% | உபி(14) |
பதினான்காவது மக்களவை | 2004 இந்தியப் பொதுத் தேர்தல் | 435 | 19 / 543
|
5 | 5.33% | 1.17% | உபி(19) |
பதினைந்தாவது மக்களவை | 2009 இந்தியப் பொதுத் தேர்தல் | 500 | 21 / 543
|
2 | 6.17% | 0.84% | மபி(1) உபி(20) |
16வது மக்களவை | 2014 இந்தியப் பொதுத் தேர்தல் | 503 | 0 / 543
|
▼ 21 | 4.19% | ▼ 1.98% | பொருத்தமில்லை |
17வது மக்களவை | 2019 இந்தியப் பொதுத் தேர்தல் | 383 | 10 / 543
|
10 | 3.67% | ▼ 0.52% | உபி(10) |
18வது மக்களவை | 2024 இந்தியப் பொதுத் தேர்தல் | பொருத்தமில்லை | 0 / 543
|
▼ 10 | 2.07% | ▼ 1.6% | பொருத்தமில்லை |
தமிழகம்
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றுள்ளது. கு. செல்வப்பெருந்தகை இக்கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தார். பின்னர் 2012 முதல் 2024 வரை கி. ஆம்ஸ்ட்ராங் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.[4] 2024 முதல் ஆனந்தன் இதன் மாநிலத் தலைவராகவுள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
- ↑ "Members : Lok Sabha". IIS Windows Server. 2 May 2016. Archived from the original on 13 December 2018. பார்க்கப்பட்ட நாள் 2016-05-02.
- ↑ "Members : Lok Sabha". IIS Windows Server (in Jawa). 2 May 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-05-02.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Selvaperunthagai expelled as TN BSP chief". நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். https://www.newindianexpress.com/states/tamil-nadu/2010/Jul/05/selvaperunthagai-expelled-as-tn-bsp-chief-167212.html. பார்த்த நாள்: 17 August 2024.