மசினகுடி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மசினகுடி, தமிழ்நாடு மாநிலத்தின் நீலகிரி மாவட்டத்தில், கூடலூர் வட்டத்தின், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில், மசினகுடி ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.

ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மாநில எல்லைகள் சந்திக்கும் இடத்தில் மசினகுடி சிற்றூர் அமைந்துள்ளது. இதனருகில் மசினகுடி முதுமலை தேசியப் பூங்கா உள்ளது. மசினகுடி வாழ் மக்களில் பெரும்பாலானவர்கள் மலைவாழ் பழங்குடி மக்களே. முதுமலை தேசியப் பூங்கா மற்றும் யானைகளை பராமரிக்கும் தெப்பக்காடு யானைகள் முகாம் மசினகுடி அருகே உள்ளது. மாயார் நீர் மின் திட்டப்பணியாளர்களின் குடியிருப்புகளுக்கு மசினகுடி மையமாக உள்ளது. மசினகுடியின் தட்பவெப்பம் ஆண்டு முழுவதும், குறைந்த வெப்பமும், குறைந்த குளிரும் கொண்டது.

மசினகுடியில் காப்புக்காடுகள் சட்டத்தை மீறி யாணைகளின் வழித்தடத்தை மறித்துக் கட்டப்பட்ட 11 ரிசார்ட்டுகள் மற்றும் உணவு விடுதிகளை மூடி முத்திரையிட 8 ஆகஸ்டு 2018 அன்று தமிழக அரசுக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்து. [1]

மக்கள்தொகை பரவல்

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2,393 வீடுகள் கொண்ட மசினகுடி சிற்றூரின் மக்கள்தொகை 8,783 ஆகும். மக்கள்தொகையில் பட்டியல் சமுகத்தினர் 25.86 % ஆகவும்; பட்டியல் பழங்குடி மக்கள் 20.46 % ஆகவுள்ளது. எழுத்தறிவு 76.11 % ஆக உள்ளது. [2]

போக்குவரத்து

மசினகுடியிலிருந்து அருகில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் செல்ல பேருந்து வசதி மட்டுமே உள்ளது. மசினகுடியிலிருந்து

ஊட்டி - 29 கிமீ
கூடலூர் -26 கிமீ
மைசூர் - 97 கிமீ[3]
வயநாடு - 81. கிமீ
கோயம்புத்தூர் - 116 கிமீ
சத்தியமங்கலம் - 150 கிமீ
பெங்களூர் - 239 கிமீ
மசினகுடியிலிருந்து ஊட்டி செல்லும் சாலையானது ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட அபாயகாரமான மலைச்சரிவுகளில் உள்ளதால் வெளியூர் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப் படுவதில்லை. ஊட்டி மற்றும் கோயம்புத்தூர் செல்லும் வாகனங்கள் கூடலூர் வழியாகவே செல்ல வேண்டும்.

சுற்றுலாத் தலங்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மசினகுடி&oldid=41808" இருந்து மீள்விக்கப்பட்டது