மங்கொம்பு - 20
| மங்கொம்பு - 20 MO 20 - Gouri |
|---|
| வேளாண் பெயர் |
| கௌரி (Gouri) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| மங்கொம்பு - 4 X Cul. 25331 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 115-120 நாட்கள் |
| வெளியீடு |
| 2002 |
| வெளியீட்டு நிறுவனம் |
| நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
மங்கொம்பு - 20 (MO 20 - Gouri) எனப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையாகும். மங்கொம்பு - 4 மற்றும் Cul. 25331 ஆகிய நெல் இரகங்களை பரம்பரைத் தேர்வு முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட இது, ஒரு கலப்பின புதிய நெல் இரகமாகும்.[1] இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகை, கௌரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[2]
பின்னணி
நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 115 – 120 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. இந்நெல் இரகத்தின் அரிசி, நடுத்தர மற்றும் தடித்த, சிவப்பு நிறமாகும்.[3] நடுத்தர உயரத்தில் வளரக்கூடிய இதன் நெற்பயிர், சாய்ந்து விடாமல் நிற்கக்கூடியது, மேலும் இலையுரை கருகல் நோயை மிதமாக எதிர்க்கும் தன்மையுடைய இது, குட்டநாட்டின் புஞ்சா மற்றும் கூடுதல் பயிர் பருவங்களுக்கு ஏற்றதாக கருதப்படும் இந்நெல் இரகம், கரி நிலங்களில் முண்டகன் (குளிர்காலம்) பருவத்தில் இரட்டை பயிர் செய்யப்படும் ஈரமான நிலங்களில் முதல் மற்றும் இரண்டாவது பயிர் பருவங்களுக்கும் உகந்ததாக உள்ளது.[1]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 "Rice Variety information Kole lands Medium duration Gouri (MO-20):". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-07.
- ↑ "MONCOMPU Rice Research Station, Kerala Agricultural University Kerala Varieties released/ identified MO 20" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-07.
- ↑ Kerala Agricultural University (KAU) Medium Duration - Gouri (MO-20)