புயல் பாடும் பாட்டு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
புயல் பாடும் பாட்டு
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புமுரசொலி செல்வம்
திரைக்கதைமு. கருணாநிதி
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஏ. சபாபதி
படத்தொகுப்புபி. வெங்கடேசுவர இராவ்
கலையகம்பூம்புகார் புரொடக்சன்சு
வெளியீடு21 அக்டோபர் 1987 (1987-10-21)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புயல் பாடும் பாட்டு (Puyal Paadum Paattu) என்பது 1987 இல் மணிவண்ணன் இயக்கத்திலும் மு. கருணாநிதியின் எழுத்திலும் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் 1986 இல் மலையாளத்தில் வெளிவந்த பிரணமம் திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.[1] இத்திரைப்படத்தில் இராதிகா ரகுவரன் ஆகியோர் நடித்திருந்தனர். வினு சக்ரவர்த்தி, முரளி, மாஸ்டர் ஹாஜா ஷெரிப் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் 1987 அக்டோபர் 21 அன்று வெளியிடப்பட்டது.

நடிகர்கள்

கருப்பொருள்

படத்தின் முக்கியக் கருப்பொருள்களில் ஒன்று போதைக்கு அடிமையாவது. [2]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3][4] "வேல் முருகனுக்கு" என்ற பாடல் மோகன இராகத்தில் அமைந்தது.[5][6]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "வேல் முருகனுக்கு மொட்ட"  புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன்  
2. "கண்ணான கண்ணே"  புலமைப்பித்தன்கே. எஸ். சித்ரா  
3. "ஒழுங்கா படிக்க விடாம"  கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
4. "புயல் ஒரு பாட்டு"  புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன்  
5. "அன்னாடம்"  கங்கை அமரன்மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா  

வெளியீடும் வரவேற்பும்

புயல் பாடும் பாட்டு 1987 அக்டோபர் 21 தீபாவளியன்று[7] வெளியிடப்பட்டது.[8][9] இந்தியன் எக்சுபிரசு இவ்வாறு எழுதியது, "வளாகக் காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நல்ல நடனக் கலைஞர்களின் துள்ளல், கவர்ச்சியான உடைகள், பாடல்களில் பயன்படுத்தப்படும் கவர்ச்சியான இசை, தாளங்கள், இளமை துடிப்பின் பொதுவான வேகம் ஆகியவை அழகாக வருகின்றன".[10] இடைவேளைக்குப் பிறகு, படம் வேகத்தையும் அமைதியையும் கொண்டிருக்கவில்லை என்பதால் கல்கியின் ஜெயமன்மதன், இத்திரைப்படத்தை அவசரம் என்று உணர்ந்தார்.[11]

மேற்கோள்கள்

  1. "இயக்குநர் மணிவண்ணன்: நிழல்கள் முதல் நாகராஜசோழன் வரை". Hindu Tamil Thisai. 31 July 2020. Archived from the original on 3 July 2021. பார்க்கப்பட்ட நாள் 9 May 2024.
  2. "Puyal Paadum Paatu Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 30 ஏப்பிரல் 2024. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2024. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Puyal Paadum Paattu (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 1 January 1989. Archived from the original on 9 மே 2024. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2024.
  4. "இளையராஜா 75". தினமணி. 16 சூன் 2018. Archived from the original on 30 ஏப்பிரல் 2024. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2024. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 167. இணையக் கணினி நூலக மைய எண் 295034757.
  6. "Puyal Padum Pattu ( 1987 )". Cinesouth. Archived from the original on 14 September 2004. பார்க்கப்பட்ட நாள் 9 May 2024.
  7. "Journalist travails". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 30 October 1987. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19871030&printsec=frontpage&hl=en. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=புயல்_பாடும்_பாட்டு&oldid=35738" இருந்து மீள்விக்கப்பட்டது