பாண்டி ரவி
பாண்டி ரவி (Pondy Ravi) என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் பணியாற்றுகிறார். இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1]
தொழில்
பாண்டி ரவி மின்சார கனவு (1997) படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.[2] அலைபாயுதே (2000), மின்னலே (2001), காக்க காக்க (2003) உள்ளிட்ட பல படங்களில் இவர் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர் ஆங் லீயின் லைஃப் ஆஃப் பை (2013) க்கான கலைக்காணலுக்குச் சென்றார்.[3] படத்தில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அமைதியான போலீஸ் அதிகாரியாக நடித்தார்.[1] வஜ்ரம் (2015) படத்தில் பணத்திற்காக ஊழல் அமைச்சர் சார்பாக செயல்படும் காவல் அதிகாரி பாத்திரத்தில் ரவி நடித்தார்.[4] செம்பி என்ற பெயரில் சாமிதா (2008) என்ற படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்; படம் குறைந்த அரங்குகளில் வெளியானது.[5][6]
நடிப்பு தொழில் அல்லாமல், ரவி ஒரு காணொளி ஆய்வகத்தை நிர்வகிக்கிறார். இது புதுச்சேரியில் படமாக்கப்படும் படங்களுக்கு பயன்படுகிறது.[1][7][8]
தனிப்பட்ட வாழ்க்கை
இவரது தந்தை நெய்வேலியில் நாடகக் கலைஞராக இருந்தவர்.[1]
திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1999 | ஜோடி | பத்திரிகையாளர் | |
2000 | அலைபாயுதே | காவல்துறை அதிகாரி | |
2001 | தீனா | ||
மின்னலே | ரவி | ||
சிட்டிசன் | |||
2002 | ரமணா | ||
2003 | சேனா | பாண்டி | |
காக்க காக்க | காவல்துறை அதிகாரி | ||
சூரி | சூர்யாவின் நண்பர் | ||
2004 | கில்லி | ||
மச்சி | நாராயணனின் அனியாள் | ||
2008 | சாமிடா | சாமி | செம்பி என்று குறிப்படப்பட்டுள்ளது |
2012 | லைப் ஆப் பை | போக்குவரத்து போலீஸ் அதிகாரி | ஆங்கில படம் |
2013 | தகராறு | காவல்துறை அதிகாரி | |
2014 | ஜில்லா | காவல்துறை அதிகாரி | |
பூஜை | அண்ணா தாண்டவத்தின் அடியாள் | ||
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா | காவல்துறை அதிகாரி | ||
மீகாமன் | யாகுப் | ||
2015 | என்னை அறிந்தால் | ||
வஜ்ரம் | காவல்துறை அதிகாரி | ||
2016 | தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் | ||
2018 | காலக்கூத்து | ||
2019 | சத்யா | வீரசிங்கம் | தொலைக்காட்சித் தொடர்; இவருக்கு பதிலாக 'பொராலி' திலீபன் |
நட்பே துணை | அப்துல் மரக்காயர் | ||
சங்கத்தமிழன் | சஞ்சயின் உதவியாளர் | ||
2020 | தீர்ப்புகள் விற்கப்படும் | அறிவிக்கப்படும் |
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 Ramakrishnan, Deepa (14 March 2013). "Cop in!" இம் மூலத்தில் இருந்து 18 March 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130318065004/http://www.thehindu.com/features/cinema/cop-in/article4508374.ece.Ramakrishnan, Deepa (14 March 2013). "Cop in!". The Hindu. Archived from the original on 18 March 2013.
- ↑ "கோலிவுட், பாலிவுட், பாண்டிவுட்!" (in ta). https://cinema.vikatan.com/tamil-cinema/102324-.
- ↑ ""லைப் ஆப் பை படக்குழுவினரைபாராட்ட முதல்வரிடம் கோரிக்கை" (in ta). 27 February 2013. https://www.dinamalar.com/news_detail.asp?id=656289.
- ↑ Subramanian, Anupama (1 March 2015). "Movie review 'Vajram': Ramesh Selvan has gone a little overboard with violence". https://www.deccanchronicle.com/150228/entertainment-movie-review/article/movie-review-vajram-ramesh-selvan-has-gone-little.
- ↑ "Saamida". https://www.sify.com/movies/saamida-review-tamil-pclwPHhbchceh.html.
- ↑ "Threat to Naan Kadavul - Behindwoods.com". http://www.behindwoods.com/tamil-movie-news-1/nov-08-01/naan-kadavul-08-11-08.html.
- ↑ "கார் கவிழ்ந்தது பாண்டி ரவி படுகாயம்" (in ta). https://dinakaran5.rssing.com/browser.php?indx=15038440&item=824.
- ↑ "ஒரு நாள் ஜெயிப்பேன்!" (in ta). https://www.vikatan.com/oddities/miscellaneous/9029--2.