மச்சி (திரைப்படம்)
மச்சி | |
---|---|
இயக்கம் | கே. எஸ். வசந்தகுமார் |
தயாரிப்பு | எஸ். கே. கிருஷ்ணகாந்த் |
கதை | கே. எஸ். வசந்தகுமார் |
இசை | ஏ. ஆர். ரைஹானா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஆர். மதி |
படத்தொகுப்பு | பி. எஸ். வாசு சலீம் |
கலையகம் | இந்தியன் தியேட்டர் புரொடக்சன்ஸ் |
வெளியீடு | சூன் 25, 2004 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மச்சி 2004 ஆம் ஆண்டு துஷ்யந்த் மற்றும் சுபா பூஞ்சா நடிப்பில், அறிமுக இயக்குனர் கே. எஸ். வசந்தகுமார் இயக்கத்தில், ஏ. ஆர். ரைஹானா இசையில், எஸ். கே. கிருஷ்ணகாந்த் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3]
கதைச்சுருக்கம்
மும்பையில் வளரும் பணக்காரனான கார்த்திக் (துஷ்யந்த்) இளம்வயதிலேயே பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையானவனாக இருப்பதால் அவன் தந்தை மோகன்ராம் (பானுச்சந்தர்) அவனை நினைத்து வருத்தப்படுகிறார். அவனைக் கட்டாயப்படுத்தி கோயமுத்தூரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் சேர்க்கிறார். கல்லூரியில் அவன் வகுப்புத் தோழர்கள் பாண்டி (எஸ். ஆர். பிரகாஷ்), பாபு (சதிஷ்), வாசு (ரஞ்சன்) மற்றும் மோசஸ் (வி. சங்கர்) ஆகியோர். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இவர்களின் குடும்பச்சூழலை சுட்டிக்காட்டி கேலிசெய்கிறான் கார்த்திக். ஆனால் அவர்கள் கார்த்திக்கை தங்கள் நண்பனாகவே எண்ணி பழகுகின்றனர்.
ஒரு நாள் விபத்தில் சிக்கும் கார்த்திக்கை அந்த நால்வரும் மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றுகின்றனர். அவர்களின் நல்ல குணத்தை அறிந்துகொள்ளும் கார்த்திக் தன் தீய குணங்களை விட்டு அவர்களோடு நண்பனாகிறான். ரக்சிதாவைக் காதலிக்கிறான் கார்த்திக். கோவிந்த் (கூல் சுரேஷ்) என்பவனுக்கும் கார்த்திக் மற்றும் அவனது நண்பர்களுக்கும் ஏற்படும் சண்டையில் கோவிந்த் முகத்தின் மீது அமிலம் பட்டு படுகாயமடைகிறான்.
கோவிந்த் அரசியல்வாதி நாராயணனின் (பசுபதி) ஒரே மகன். தன் மகன் படுகாயமுற்றதை அறியும் நாராயணன் அதற்குக் காரணமான கார்த்திக் மற்றும் அவனது நான்கு நண்பர்களைக் கொன்று பழிதீர்க்க முடிவுசெய்கிறான். அவனிடமிருந்து கார்த்திக்கும் மற்றவர்களும் தப்பினார்களா? என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
- துஷ்யந்த் - கார்த்திக்
- சுபா பூஞ்சா - ரக்சிதா
- பசுபதி - நாராயணன்
- பானுசந்தர் - மோகன்ராம்
- சுலக்சனா - தங்கமணி
- எஸ். ஆர். பிரகாஷ் - பாண்டி
- சதிஷ் - பாபு
- ரஞ்சன் - வாசு
- வி. சங்கர் - மோசஸ்
- எம். எஸ். பாஸ்கர்
- மோகன் வைத்யா - ரக்சிதா தந்தை
- கூல் சுரேஷ் - நாராயணனின் மகன்
- பாபூஸ் - காவலர்
- பாண்டி ரவி
- அஞ்சலிதேவி - நாராயணன் மனைவி
தயாரிப்பு
படத்தின் நாயகன் துஷ்யந்த், நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் பேரன் ஆவார். 2003 இல் அவர் நாயகனாக நடித்து வெளியான சக்ஸஸ் படத்தை அடுத்து இப்படம் இரண்டாவதாக வெளியானது[4].
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானின் சகோதரி ஏ. ஆர். ரைஹானா இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[5][6]
படத்தின் நாயகி சுபா பூஞ்சா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
படத்தில் நடித்த அனைவரும் 45 நாட்கள் ஒத்திகை எடுத்துக்கொண்டது தமிழ் திரையுலகில் இப்படத்திற்கே முதல் முறை.[7]
இசை
படத்தின் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரைஹானா. பாடலாசிரியர்கள் கலைக்குமார், கபிலன் மற்றும் அண்ணாமலை.[8][9]
வ. எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | கும்மாங்கோ | கானா உலகநாதன் | 3:06 |
2 | கும்மாங்கோ | சங்கர் மகாதேவன் | 3:05 |
3 | ஹாலிடே | தேவன் ஏகாம்பரம், போனி | 3:42 |
4 | மனமே | ஹரிஹரன் | 2:44 |
5 | போடா போடா | கிருஷ்ணராஜ் , சம்சுதீன், ஸ்ரீவித்யா, ஏ. ஆர். ரைஹானா | 3:39 |
6 | தாக்க தாக்க | பாலக்காடு ஸ்ரீராம் | 2:07 |
7 | தொடு தொடு | சுஜாதா மோகன் | 3:30 |
மேற்கோள்கள்
- ↑ "மச்சி". Archived from the original on 2004-11-22. பார்க்கப்பட்ட நாள் 2019-02-26.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "மச்சி". Archived from the original on 2009-09-10. பார்க்கப்பட்ட நாள் 2019-02-26.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "மச்சி".
- ↑ "ஜூனியர் சிவாஜி". Archived from the original on 2004-04-28. பார்க்கப்பட்ட நாள் 2019-02-26.
- ↑ "ஏ. ஆர். ரைஹானா".
- ↑ "ஏ. ஆர். ரைஹானா".
- ↑ "45 நாள் ஒத்திகை".
- ↑ "மச்சி பாடல்கள்".
- ↑ "பாடல்கள்". Archived from the original on 2014-07-07. பார்க்கப்பட்ட நாள் 2019-02-26.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)