சுபா பூஞ்சா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சுபா பூஞ்சா
Shubha Poonja (1).jpg
சுபா பூஞ்சா
பிறப்புஇந்திய ஒன்றியம், கருநாடகம், மங்களூர்
பணிநடிகர், வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்போது வரை

சுபா பூஞ்சா (Shubha Poonja) என்பவர் ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் வடிவழகர் ஆவார். இவர் பெரும்பாலும் கன்னடம், தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். கன்னடத்தில் மொக்கின மனசு படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்று மிகவும் பிரபலமானவர். மேலும் இவர் அண்மையில் கன்னட தொலைக்காட்சி உண்மை நிலை நிகழ்ச்சியான பிக் பாஸ் கன்னடத்தில் (பருவம் 8) நுழைந்தார்.

தொழில்

சுபா பூஞ்சா மங்களூரை பூர்வீகமாக கொண்ட துளு சமூகத்தைச் சேர்ந்தவர். [1] பெங்களூரில் வளர்ந்த இவர் பெங்களூர் ஜெயநகர் கார்மல் கான்வென்ட் பள்ளியில் பயின்றார். தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றிய இவர் பின்னர் வழிவழகியாக ஆனார். [2] [3] இதற்கிடையில், இவர் "மிஸ் சென்னை-டாப் மாடல் 2003" பட்டத்தை வென்றார். [4] அதைத் தொடர்ந்து, இவர் தமிழ் திரையுலகில் நுழைந்தார், தமிழ் திரைப்பட இயக்குனர் கே. எஸ். வசந்தகுமார் இவரது ஒளிப்படங்களைப் பார்த்து தனது மச்சி படத்தில் முன்னணி பெண் பாத்திரத்தில் நடிக்க இவரை அணுகினார். [5] அடுத்த மாதங்களில் திருடிய இதயத்தை மற்றும் சண்முகா போன்ற தமிழ் படங்களில் நடித்த பிறகு, 2006 ஆம் ஆண்டு ஜாக்பாட் திரைப்படத்தின் வழியாக கன்னட திரையுலகில் நுழைந்தார்.  பின்னர், இவர் சாந்தா, மொக்கின மனசு, சேரி பாலா உள்ளிட்ட பல கன்னட படங்களில் தோன்றினார். சமீபத்தில், 2008 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான அஞ்சாதேவின் கன்னட மறுஆக்கமான அஞ்சாதிரு மற்றும் தக்கத் ஆகிய படங்களில் தோன்றினார். 

திரைப்படவியல்

ஆண்டு தலைப்பு பாத்திரம் மொழி குறிப்புகள்
2004 மச்சி ரக்ஷிதா தமிழ்
2005 திருடிய இதயத்தை ஹரிதா தமிழ்
2006 ஜாக்பாட் ப்ரீத்தி கன்னடம்
ஒரு பொண்ணு ஒரு பையன் சுபா தமிழ்
2007 சாந்தா ஸ்வப்னா கன்னடம்
2008 மொகின மனசு ரேணுகா கன்னடம் வெற்றியாளர், சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது - கன்னடம்
சேரி பாலா துனியா விஜயா கன்னடம்
சுட்ட பழம் வந்தனா தமிழ்
2009 அஞ்சதிரு உத்தரா கன்னடம்
தகத் பாக்யா (பாகீரதி) கன்னடம்
2010 ப்ரீத்தி ஹங்காமா கீதா கன்னடம்
நாரி அடா கன்னடம்
2011 கண்டீரவா இந்திரா கன்னடம்
நானல்லா பவ்யா கன்னடம்
2012 கோல்மால் பிரீத்தி கன்னடம்
2013 பராரி உர்மிலா கன்னடம்
2014 சிராயு கன்னடம்
2015 கோட்டிகாண்ட் ல்ல் ஸ்டோரி கன்னடம்
2016 டார்லே நான் மக்லு கன்னடம்
ஜெய் மருதி 800 ஸ்மிதா கன்னடம்
சிகண்டூர் சவுடேஸ்வரி மகிமே கன்னடம்
2017 மீனாட்சி மீனாட்சி கன்னடம்
2018 கூகல் நந்தினி கன்னடம்
2020 நரகுந்த பந்தய கன்னடம்
டி.பி.ஏ. சமோசா கன்னடம் தாமதமாக

குறிப்புகள்

 

  1. "Shooting of Kannada film "Chirayu" at padubidri beach". Padubidri News.com. Archived from the original on 2018-07-01. பார்க்கப்பட்ட நாள் 2017-07-21.
  2. "Shuba - The new girl!". சிஃபி. Archived from the original on 2012-07-15. பார்க்கப்பட்ட நாள் 2009-05-27.
  3. "Mangalorean Actress Shuba Punja Hits 'Jackpot'". mangalorean.com. Archived from the original on 2012-10-11. பார்க்கப்பட்ட நாள் 2009-05-27.
  4. "Mangalorean Actress Shuba Punja Hits 'Jackpot'". mangalorean.com. Archived from the original on 2012-10-11. பார்க்கப்பட்ட நாள் 2009-05-27.
  5. "Shuba Punja: Sreedevi is my role model". indiaglitz.com. Archived from the original on 2005-04-22. பார்க்கப்பட்ட நாள் 2009-05-27.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சுபா_பூஞ்சா&oldid=22799" இருந்து மீள்விக்கப்பட்டது