ஜில்லா (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜில்லா
இயக்கம்இரா.தி. நேசன்
தயாரிப்புஆர்.பி. செளத்ரி
கதைஇரா.தி. நேசன்
இசைடி. இமான்
நடிப்புMohanlal
Vijay
Kajal Agarwal
ஒளிப்பதிவுகணேஷ் ராஜவேலு
படத்தொகுப்புடான் மேக்ஸ்
கலையகம்சூப்பர்குட் பிலிம்ஸ்
வெளியீடு10.01.2014
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு55 crores
மொத்த வருவாய்88 crores

ஜில்லா (Jilla) 2014ல் திரைக்கு வந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். மோகன்லால், விஜய், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்து வெளிவந்த இப்படத்திற்கு[1], டி. இமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை எழுதி இயக்கியவர் இரா.தி நேசன் ஆவார்.[2] இப்படம் 2014 சனவரி 10 ஆம் திகதி தைப்பொங்கல் வெளியீடாக வெளிவந்தது.[3]

நடிப்பு

கதைச்சுருக்கம்

மோகன்லால் (சிவா) மதுரையின் பெரிய தாதா (குற்றச்செயல் புரிபவர்களின் தலைவர்) விஜய்யின் (சக்தி) அப்பா அவரிடம் வேலை செய்கிறார். மோகன்லாலின் மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது மோகன்லால் குடும்பத்தை கொல்ல அவரின் எதிரிகள் முயலும் போது விஜய்யின் அப்பா காவல்துறை அதிகாரி ஒருவரால் கொல்லப்படுகிறார். மோகன்லால் விஜய்யை தன் குழந்தையாக வளர்க்கிறார். அதை பார்த்ததிலிருந்து விஜய்க்கு காவல்துறை என்றாலே வெறுப்பு. அவர் சாலையில் பார்த்த பெண்ணின் (காஜல் அகர்வால்) மீது காதல் கொள்கிறார். காஜல் அகர்வால் ஒரு காவல்துறை அதிகாரி. மோகன்லாலை காவல்துறை அதிகாரி ஒருவர் அசிங்கப்படுத்தி விடுவதால் அவர் விஜயை காவல்துறை அதிகாரி ஆக்குகிறார். விஜய் மோகன்லாலின் குற்றச்செயல்களுக்கு உதவுகிறார். ஓர் குற்றச்செயலின் போது குழந்தைகள் நிறைய பேர் இறந்ததை தொடர்ந்து விஜய் குற்றச்செயல்களுக்கு எதிராக திரும்புகிறார். மோகன்லாலை குற்றச்செயல்கள் புரியக்கூடாது என்கிறார். அதனால் இருவருக்கும் மோதல் வருகிறது. மோகன்லாலின் கடைகளை தீவைத்து அழித்து அதை விஜய்யின் மீது ஓர் கும்பல் பழி போடுகிறது. அவர்களால் மோகன்லாலின் சொந்த மகன் கொல்லப்படுகிறார். அதை விஜய்யின் மீது சுமத்துகிறார்கள். அதை மோகன்லால் நம்பினாரா, விஜய் மோகன்லாலுடன் இணைந்தாரா? எப்படி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து விஜய் அழிக்கிறார் என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக சொல்லியுள்ளார். பின்னர் அவர் அந்த நேரத்தில்

மேற்கோள்கள்

Commons logo
இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :ஜில்லா (திரைப்படம்)
"https://tamilar.wiki/index.php?title=ஜில்லா_(திரைப்படம்)&oldid=37998" இருந்து மீள்விக்கப்பட்டது