பரசுராம் (2003 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பரசுராம்
இயக்கம்அர்ஜுன்
தயாரிப்புகே. பிரபாகரன்
கதைஅர்ஜுன்
இசைஏ. ஆர். ரகுமான் (பாடல்கள்)
பிரவீண் மணி (பின்னணி இசை)
நடிப்புஅர்ஜுன்
அப்பாஸ்
கிரண் ராத்தோட்
காயத்திரி ரகுராம்
கவுண்டமணி
இராகுல் தேவ்
ஒளிப்பதிவுகே. எஸ். செல்வராஜ்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்அன்பாலயா பிலிம்ஸ்
வெளியீடுமே 30, 2003 (2003-05-30)
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

பரசுராம் (Parasuram) என்பது 2003ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். அர்ஜுன் இயக்கி, நடித்த இப்படத்தில், அப்பாஸ், கவுண்டமணி, கிரண் ராத்தோட், காயத்திரி ரகுராம், ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் 2003 மே 30 அன்று வெளியிடப்பட்டது.

கதை

ஆகாஷ் தலைமையிலான ஒரு நிழலுலக பயங்கரவாதக் குழுவானது வேலையில்லாத இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை பாக்கித்தானுக்கு அனுப்பி தற்கொலைக் குண்டுதாரிகளாக மாற்றுகிறது. இந்த வழக்கு உதவி காவல் ஆணையர் பரசுராமினம் ( அர்ஜுன் ) ஒப்படைக்கப்படுகிறது. அவர் எப்படி அந்த கும்பலை ஒழிக்கிறார் என்பதே கதை.

நடிப்பு

தயாரிப்பு

இந்த படம் துவக்கத்தில் அசோகா என்ற பெயரில் சாஜி கைலாஸ் இயக்குவதாகவும், சம்யுக்தா வர்மாவும், அர்ஜுனும் முன்னணி பாத்திரங்களில் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டது. பின்னர் படைப்பு வேறுபாடுகள் காரணமாக சாஜி படத்திலிருந்து விலகினார், அர்ஜுன் தானே இயக்குனராக பொறுப்பேற்றார்.[1][2]

வரவேற்பு

Sify.com, இந்த திரைப்படத்தை "பரிதாபம்" என்று அழைத்தது.[3]

இசை

இப்படத்தின் படல்களுக்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்க, பின்னணி இசையை ரகுமானின் உதவியாளர் பிரவின் மணி அமைத்தார். இதில் ரகுமானின் இசையானது சராசரி ரகமாக கருதப்படுகிறது.[4]

பாடல் பாடகர் (கள்) காலம் பாடல் வரிகள்
"டோல்னா டோல்னா" ஹரிஹரன், சுஜாதா மோகன் 5:25 பா. விஜய்
"காதல் வெட்டுக்கிளி" கார்த்திக், சாதனா சர்கம் 5:58 கபிலன்
"சிட்டுக்குருவி" சுவர்ணலதா, அர்ஜுன், ஸ்ரீராம் பார்த்தசாரதி 5:48 பழனி பாரதி
"முப்பது நிமிடம்" உன்னிகிருஷ்ணன், சுஜாதா மோகன் 4:32 வைரமுத்து
"ஜாக் அண்ட் ஜில்" சுர்ஜோ பட்டாச்சார்யா, நித்யஸ்ரீ மகாதேவன், மாதங்கி 5:57 பழனி பாரதி

குறிப்புகள்

 

  1. https://web.archive.org/web/20021031210049/http://in.movies.yahoo.com/020914/113/1v7ot.html
  2. https://web.archive.org/web/20010906025311/http://www.screenindia.com/20010810/rtam4.html
  3. "Review : (2003)". www.sify.com. Archived from the original on 2017-07-07. பார்க்கப்பட்ட நாள் 2021-08-07.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-09-19. பார்க்கப்பட்ட நாள் 2021-08-07.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பரசுராம்_(2003_திரைப்படம்)&oldid=35263" இருந்து மீள்விக்கப்பட்டது