தென்காசி சந்திப்பு தொடருந்து நிலையம்
தென்காசி சந்திப்பு | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | இரயில்வே நிலைய சாலை, தென்காசி, தென்காசி மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 8°57′51″N 77°18′19″E / 8.9641°N 77.3053°ECoordinates: 8°57′51″N 77°18′19″E / 8.9641°N 77.3053°E | ||||
ஏற்றம் | 158 மீட்டர்கள் (518 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | தென்காசி – விருதுநகர் வழித்தடம் தென்காசி - கொல்லம் வழித்தடம் தென்காசி - திருநெல்வேலி வழித்தடம் | ||||
நடைமேடை | 4 | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயக்கத்தில் | ||||
நிலையக் குறியீடு | TSI[1] | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | மதுரை | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | இல்லை | ||||
|
தென்காசி சந்திப்பு தொடருந்து நிலையம் (Tenkasi railway station, நிலைய குறியீடு:TSI), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், தென்காசி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது தெற்கு ரயில்வே மண்டலத்தின் ஒரு பகுதியான மதுரை தொடருந்து பிரிவு நிர்வாகத்தின் கீழ் வருகிறது.[2]
இடம் மற்றும் அமைப்பு
இந்த தொடருந்து நிலையம் தென்காசி நகரில் இரயில்வே நிலையச் சாலையின் மீது அமைந்துள்ளது. இதன் அருகில் தென்காசி நகரின் பேருந்து நிலையம் உள்ளது. இதனருகில் 72 கிலோமீட்டர்கள் (45 mi) தொலைவில் திருவனந்தபுரம் விமான நிலையம் அமைந்துள்ளது.
இணைப்புகள்
இந்த நிலையம் ஒரு மைய புள்ளியாக சென்னை, மதுரை சந்திப்பு, திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம், கோயம்புத்தூர் சந்தி, இராமேஸ்வரம் போன்றவற்றினை இணைக்கிறது.
- வடக்கு நோக்கி செல்லும் அகலப் பாதை – இராஜபாளையம் வழியாக விருதுநகர் சந்திப்பு.
- கிழக்கு நோக்கி செல்லும் அகலப் பாதை – அம்பாசமுத்திரம் வழியாக திருநெல்வேலி சந்திப்பு.
- மேற்கு நோக்கி செல்லும் அகலப் பாதை – புனலூர் வழியாக கொல்லம் சந்திப்பு.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[3][4][5]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் தென்காசி ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[6]
[7][8][9]
தென்காசி சந்திப்பு வழியாக செல்லும் தொடருந்துகள்
பயணிகள் தொடருந்து
கீழ்கண்ட பயணிகள் தொடருந்து கொரானா பெருந்தெற்று காரணமாக 22.மார்ச் 2020 அன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
- 56732/56731 - செங்கோட்டை - மதுரை சந்திப்பு. - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)
- 56734/56733 - செங்கோட்டை - மதுரை சந்திப்பு - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)
- 56735/56736 - செங்கோட்டை - மதுரை சந்திப்பு - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)
- 56796/56797 - செங்கோட்டை - திருநெல்வேலி சந்திப்பு - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)
- 56798/56799 - செங்கோட்டை - திருநெல்வேலி சந்திப்பு - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)
- 56800/56801 - செங்கோட்டை - திருநெல்வேலி சந்திப்பு - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)
- 56802/56803 - செங்கோட்டை - திருநெல்வேலி சந்திப்பு - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)
விரைவு /அதிவிரைவு பயணிகள் தொடருந்து
- 16101/16102 - கொல்லம் சந்திப்பு - தென்காசி சந்திப்பு - சென்னை எழும்பூர் - தென்காசி சந்திப்பு - கொல்லம் சந்திப்பு கொல்லம் விரைவு வண்டி (தினசரி)
- 20681 - சென்னை எழும்பூர் - தென்காசி சந்திப்பு - செங்கோட்டை சிலம்பு அதி விரைவு வண்டி (ஞாயிறு வியாழன் சனி நாட்கள் மட்டும் )
- 20682 - செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - சென்னை எழும்பூர் சிலம்பு அதி விரைவு வண்டி (ஞாயிறு வியாழன் சனி நாட்கள் மட்டும் )
- 12661/12662 - செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - சென்னை எழும்பூர் - தென்காசி சந்திப்பு - செங்கோட்டை பொதிகை அதிவிரைவு வண்டி (தினசரி)
- 16791/16792 - திருநெல்வேலி சந்திப்பு - தென்காசி சந்திப்பு - பாலக்காடு சந்திப்பு - தென்காசி சந்திப்பு - திருநெல்வேலி சந்திப்பு செல்லும் பாலருவி விரைவு வண்டி
- 16848/16847 - செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - மயிலாடுதுறை சந்திப்பு - தென்காசி சந்திப்பு - செங்கோட்டை விரைவு தொடருந்து (தினசரி)
- 20683 - தாம்பரம் - தென்காசி சந்திப்பு - செங்கோட்டை அதிவிரைவு தொடருந்து (திங்கள் மட்டும்)
- 20684 - செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - தாம்பரம் அதிவிரைவு தொடருந்து (திங்கள் மட்டும்)
சிறப்பு விரைவு /அதிவிரைவு பயணிகள் தொடருந்து
- 06003 - திருநெல்வேலி சந்திப்பு - தென்காசி சந்திப்பு - தாம்பரம் விரைவு வண்டி (ஞாயிறு மட்டும்)
- 06004 - தாம்பரம் - தென்காசி சந்திப்பு - திருநெல்வேலி சந்திப்பு விரைவு வண்டி (செவ்வாய் மட்டும்)
- 06030 - திருநெல்வேலி சந்திப்பு - தென்காசி சந்திப்பு - மேட்டுப்பாளையம் விரைவு வண்டி (வியாழன் மட்டும்)
- 06029 - மேட்டுப்பாளையம் - தென்காசி சந்திப்பு - திருநெல்வேலி சந்திப்பு விரைவு வண்டி (சனி மட்டும்)
- 06036 - வேளாங்கன்னி - தென்காசி சந்திப்பு - எர்ணாக்குளம் விரைவு வண்டி (திங்கள் மட்டும்)
- 06035 - எர்ணாக்குளம் சந்திப்பு - தென்காசி சந்திப்பு - வேளாங்கன்னி விரைவு வண்டி (சனி மட்டும்)
- 06503/06504/06664/06663 - செங்கோட்டை - மதுரை சந்திப்பு -செங்கோட்டை விரைவு வண்டி (தினசரி)
- 06685/06686/06657/06682/06681/06658/06687/06684 - திருநெல்வேலி சந்திப்பு - செங்கோட்டை- திருநெல்வேலி சந்திப்பு விரைவு வண்டி (தினசரி)
வண்டிகளின் வரிசை
தென்காசியிலிருந்து செல்லும் இருப்புப் பாதைகள்
எண். | நோக்குமிடம் |
வழித்தடம் | இருப்புப் பாதையின் வகை | மின்மயம் | ஒருவழி/ இருவழி | குறிப்பு |
---|---|---|---|---|---|---|
1 | சென்னை எழும்பூர் | இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு | அகலப்பாதை | ஆம் | ஒருவழிப் பாதை | |
2 | திருநெல்வேலி சந்திப்பு | பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம் | அகலப்பாதை | ஆம் | ஒருவழிப் பாதை | |
3 | திருவனந்தபுரம் சென்ட்ரல் | கொல்லம் சந்திப்பு, செங்கோட்டை, புனலூர் | அகலப்பாதை | ஆம் | ஒருவழிப் பாதை |
தென்காசி நகர எல்லைக்குட்பட்ட தொடருந்து நிலையங்கள்
தொடருந்து நிலையம் | குறியீடு | கி.மீ |
---|---|---|
தென்காசி சந்திப்பு | TSI | 00 |
கீழப்புலியூர் | KYZ | 02 |
செங்கோட்டை | SCT | 07 |
படத்தொகுப்பு
சான்றுகள்
- ↑ "Tenkasi Railway Station". MustSeeIndia. Archived from the original on 27 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 13 July 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Madurai Division System Map" (PDF). பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
- ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
- ↑ https://tamil.samayam.com/latest-news/tirunelveli/pm-modi-allocating-funds-for-the-development-of-tenkasi-railway-station-and-laid-foundation-stone/articleshow/102474367.cms
- ↑ https://www.thehindu.com/news/cities/Madurai/pm-lays-foundation-stone-for-redevelopment-of-virudhunagar-tenkasi-railway-stations/article67164813.ece
- ↑ https://timesofindia.indiatimes.com/city/madurai/modi-to-lay-foundation-stone-for-redevelopment-of-13-amrith-bharat-railway-stations-in-madurai-today/articleshow/107997384.cms
- ↑ https://www.hindutamil.in/news/tamilnadu/1085225-amrit-bharat-railway-station-project-development-of-25-stations-on-southern-railway-at-a-cost-of-rs-616-crore-2.html
- ↑ https://etrain.info/in?STATION=TSI
வெளிப்புற இணைப்புகள்