மதுரை தொடருந்து கோட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மதுரை தொடருந்து கோட்டம்
Madurai Junction.jpg
மதுரை சந்திப்பின் முகப்புத் தோற்றம்
கண்ணோட்டம்
தலைமையகம்மதுரை
வட்டாரம்தமிழ்நாடு, இந்தியா
செயல்பாட்டின் தேதிகள்1956; 68 ஆண்டுகளுக்கு முன்னர் (1956)
முந்தியவைதென்னக இரயில்வே
தொழில்நுட்பம்
தட அளவிவார்ப்புரு:Railgauge
முந்தைய அளவிவார்ப்புரு:Railgauge
நீளம்1,356 km (843 mi)
Other
இணையதளம்Madurai railway division

மதுரை தொடருந்து கோட்டம் (Madurai railway division) என்பது இந்தியாவின் இந்திய இரயில்வேயின், தென்னக இரயில்வே மண்டலத்தின் ஒரு தொடருந்து கோட்டமாகும். இந்தக் கோட்டம் அதிகாரப்பூர்வமாக 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 1,356 கிமீ (843 மைல்) நீளத்துக்கு மேல் பரவியுள்ளது, இது தென்னக இரயில்வேயின் மிகப்பெரிய தொடருந்து கோட்டமாகும்.[1] திருவனந்தபுரம் தொடருந்து கோட்டம் உருவாவதற்கு முன்பு, இது நாட்டிலேயே மிகப்பெரிய தொடருந்து கோட்டங்களில் ஒன்றாக இருந்தது. தற்போது இது தமிழ்நாட்டின் பன்னிரண்டு மாவட்டங்களையும், கேரளத்தின் ஒரு மாவட்டத்தையும் உள்ளடக்கியது. இதன் தலைமையகம் மதுரையில் உள்ளது.

இந்க் கோட்டத்தில் முக்கிய வருவாய் ஈட்டும் சந்திப்புகளாக மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய சந்திப்புகள் உள்ளது. இந்த நிலையங்களில் பயணிகள் மிகுதியாக வந்து செல்கின்றனர்.[சான்று தேவை]

வரலாறு - தோற்றம்

தென்னிந்திய ரயில்வே இம்பீரியல் கெசட் ஆஃப் இந்தியா 1909 இல் உள்ள வரைபடம்

இப் பகுதியில் முதல் தொடருந்து பாதை 1857 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. அது மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளி வழியாக திண்டுக்கல்லை இணைக்கும் வகையில் உருவாக்கப்படிருந்தது. அடுத்த ஆண்டு, மதுரையில் இருந்து துறைமுக நகரான தூத்துக்குடிக்கு தொடருந்து பாதை போடும்பணி நிறைவடைந்தது. அதே ஆண்டில், மணியாச்சியிலிருந்து திருநெல்வேலிவரை பிரிந்து செல்லும் மற்றொரு பாதை திறக்கப்பட்டது.[1]

மற்ற தற்போதைய பாதைகளில் பெரும்பாலானவை இருபதாம் நூற்றாண்டில் முடிக்கப்பட்டவை. அவை பின்வருமாறு:[1]

  • 1902 இல் மதுரை-மண்டபம் வழித்தடம்
  • 1902ல் திருநெல்வேலி-கல்லிடைக்குறிச்சி வழித்தடம்
  • 1902 இல் மானாமதுரை-சிவகங்கை வழித்தடம்
  • 1903-ல் கல்லிடைக்குறிச்சி-செங்கோட்டை வழித்தடம்
  • 1904 இல் கொல்லம்-புனலூர் வழித்தடம்
  • 1904 இல் புனலூர்-செங்கோட்டை வழித்தடம்
  • 1906ல் பாம்பன்-ராமேஸ்வரம் பாதை
  • 1908 இல் பாம்பன்-தனுஷ்கோடி வழித்தடம்
  • 1914 இல் மண்டபம்-பாம்பன் வழித்தடம்
  • 1927ல் விருதுநகர்-தென்காசி வழித்தடம்
  • 1928-ல் திண்டுக்கல்-பொள்ளாச்சி வழித்தடம்
  • 1929ல் திருச்சிராப்பள்ளி-புதுக்கோட்டை வழித்தடம்
  • 1930 இல் புதுக்கோட்டை-சிவகங்கை வழித்தடம்
  • 1963 இல் விருதுநகர்-அருப்புக்கோட்டை வழித்தடம்
  • 1964 இல் அருப்புக்கோட்டை-மானாமதுரை வழித்தடம்

துவக்கம்

திருநெல்வேலியையும் உள்ளடக்கிய கோட்டத்தின் தலைமையகத்தை மதுரையில் அமைக்க அரசு முடிவு செய்தது. எர்ணாகுளம்-திருவனந்தபுரம் வழித்தடம், திருவனந்தபுரம்-நாகர்கோவில்-திருநெல்வேலி-மதுரை வழித்தடம், கொல்லம்-செங்கோட்டை-திருநெல்வேலி வழித்தடம், ராமேஸ்வரம்-மானாமதுரை - மதுரை வழித்தடம், மானாமதுரை-காரைக்குடி-திருச்சி வழித்தடம், மதுரை-திண்டுக்கல்-பொள்ளாச்சி வழித்தடம், காரைக்குடி-திருத்துறைப்பூண்டி-திருவாரூர் வழித்தடம், மதுரை-போடிநாயக்கனூர் வழித்தடம் ஆகியவற்றை உள்ளடக்கிய மதுரை ரயில்வே கோட்டம் 1956 இல் உருவாக்கப்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து வழித்தடங்களும் அகலப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன.

1979 ஆம் ஆண்டில், திருவனந்தபுரம் தொடருந்து கோட்டத்தை உருவாக்க இந்தக் கோட்டம் மறு சீரமைக்கப்பட்டது. மதுரை கோட்டத்தின் மீட்டர் கேஜ் பாதைகள் தக்கவைக்கப்பட்ட நிலையில், மதுரை கோட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அனைத்து அகலப் பாதை வழித்தடங்களும் திருவனந்தபுரம் கோட்டத்திற்கு மாற்றப்பட்டன. இதனால், திருவனந்தபுரம்-நாகர்கோவில்-கன்னியாகுமரி அகலப்பாதை வழித்தடம் மற்றும் கட்டுமானத்தில் இருந்த திருநெல்வேலி-நாகர்கோவில் அகலப்பாதை வழித்தடம் ஆகியவை திருவனந்தபுரம் கோட்டத்திற்கு மாற்றப்பட்டன. இதனால் மதுரைக் கோட்டத்தின் அதிகார வரம்பு 1356 கி.மீ. என குறைந்தது.[2] அப்போது, ​​திருநெல்வேலி-மதுரை வழித்தடத்தை அகலப் பாதையாக மாற்றும் போது, ​​கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள் மீண்டும் மதுரை கோட்டத்திற்கு மாற்றப்படும் என குறிப்பிடப்பட்டது. திருநெல்வேலி-மதுரை வழித்தடம் 8-4-1981 அன்று அகலப் பாதையாக மாற்றப்பட்டது.[3]

நிர்வாகமும் அதிகார வரம்பும்

இந்தக் கோட்டமானது தமிழ்நாடு, கேரளம் என இரு மாநிலங்களில் பரவியுள்ளது. தமிழ்நாட்டில் இது கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய பன்னிரண்டு மாவட்டங்களுக்கு சேவை செய்கிறது:. கேரளத்தில், இந்தக் கோட்டமானது கொல்லம் மாவட்டம் கிளிகொல்லூர் தொடருந்து நிலையம் வரை தன் எல்லையைக் கொண்டுள்ளது.[4]

நிலையங்களின் வகைப்பாடு

இந்த பட்டியலில் மதுரை தொடருந்து கோட்டத்தின் கீழ் உள்ள நிலையங்கள் மற்றும் அவற்றின் நிலைய வகைப்பாடு ஆகியவை அடங்கும்.[5][6][7]

நிலையத்தின் வகை நிலையங்களின் எண்ணிக்கை நிலையத்தின் பெயர்
NSG-1 வகை 0
NSG-2 வகை 1

மதுரை சந்திப்பு, திருநெல்வேலி சந்திப்பு

NSG-3 வகை 4

தூத்துக்குடி, இராமேசுவரம், திண்டுக்கல் சந்திப்பு முதலியன.

NSG-4 வகை 7

விருதுநகர் சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு, கோவில்பட்டி, இராமநாதபுரம், முதலியன.

NSG-5 வகை 21

மானாமதுரை சந்திப்பு, இராஜபாளையம், புதுக்கோட்டை, சிவகாசி, சிவகங்கை, அருப்புக்கோட்டை முதலியன.

NSG-6 வகை 81 முதலியன.
HG - 1 வகை - -
HG - 2 வகை 11 -
HG - 3 வகை 10 -
மொத்தம் 135 -

நாட்டரசன்கோட்டை, கருப்பட்டி, நெடுகுளம், மானாமதுரை கிழக்கு, குளத்தூர், தொண்டைமாநல்லூர் மற்றும் சில தொடருந்து நிலையங்கள் பயணிகளுக்கு மூடப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டிற்கான மதுரை கோட்டத்தில் உள்ள நிலையங்கள் மற்றும் அதன் எம். எஸ். ஜி வகைகளின் பட்டியல்.[8]

செயல்திறனும் வருவாயும்

இந்தக் கோட்டம் 2013 ஆம் நிதியாண்டில் அதன் செயல்திறன் வருவாய் பிரிவுகளுக்கு இடையேயான ஒட்டுமொத்த செயல்திறன் - சிறந்த பிரிவு - விருதை வென்றது. 2013-14 ஆம் ஆண்டிற்கான மொத்த தொடக்க வருவாய் ரூ 576.29 கோடியாக உள்ளது, இது 2012-13 ஆம் ஆண்டின் வருவாயான ரூ 523.68 கோடியை ஒப்பிடிம்போது ஒட்டுமொத்த வருவாயில் 10% வளர்ச்சி என தெரிகிறது.[9]

செயல்பாடுகளும் சேவைகளும் - வழக்கமான தொடருந்துகள்

ஓடும் தொடருந்துகளின் எண்ணிக்கை தினசரி தினசரி அல்லாத
விரைவு 25 34
பயணிகள் 56 0

சிறப்பு தொடருந்துகள்

2011-12 2012-13 2013-14 (அக்டோபர் வரை)
1965 1848 700

நிலையங்கள்

பயணிகள் நிறுத்தங்கள் நிலையங்களின் எண்ணிக்கை
தொகுதி நிலையங்கள் 101
கொடி நிலையங்கள் 20
நிறுத்த நிலையங்கள் 16

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Southern Railways - Madurai railway division" (PDF). Southern Railways, India. பார்க்கப்பட்ட நாள் 10 June 2014.
  2. "Southern Railways - Thiruvananthapuram railway division". Southern Railways, India. பார்க்கப்பட்ட நாள் 10 June 2014.
  3. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 21 October 2013. பார்க்கப்பட்ட நாள் 10 June 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "Madurai Division System Map" (PDF). Southern Railway. பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
  5. "Statement showing Category-wise No.of stations in IR based on Pass. earning of 2011" (PDF). பார்க்கப்பட்ட நாள் 15 January 2016.
  6. "Passenger Amenities - Criteria for Categorisation of Stations" (PDF). Archived from the original (PDF) on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 15 January 2016.
  7. "Annual originating passengers and earnings for the year 2018-19 - Madurai Division". Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 10 June 2019.
  8. https://sr.indianrailways.gov.in/cris//uploads/files/1686913420595-MDU%20DIVISION%20-%20LIST%20OF%20STATIONS%20-2023.pdf[bare URL PDF]
  9. "Madurai division records growth in overall earnings". Times of India. 17 April 2014. http://timesofindia.indiatimes.com/city/madurai/Madurai-division-records-growth-in-overall-earnings/articleshow/33836218.cms. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மதுரை_தொடருந்து_கோட்டம்&oldid=42835" இருந்து மீள்விக்கப்பட்டது