சிவகங்கை தொடருந்து நிலையம்
சிவகங்கை | |
---|---|
தொடருந்து நிலையம் | |
சிவகங்கை தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | இரயில்வே நிலையம் சாலை, சிவகங்கை, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு இந்தியா |
ஆள்கூறுகள் | 9°51′20″N 78°30′03″E / 9.855427°N 78.500853°E |
ஏற்றம் | 103.5 மீட்டர்கள் (340 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | தென்னக இரயில்வே |
தடங்கள் | மானாமதுரை - காரைக்குடி வழித்தடம் |
நடைமேடை | 3 |
இருப்புப் பாதைகள் | 3 |
இணைப்புக்கள் | வாடகையுந்து நிறுத்தம், ஆட்டோ ரிக்சா நிறுத்தம் |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் |
தரிப்பிடம் | உண்டு |
மாற்றுத்திறனாளி அணுகல் | உள்ளது |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயங்குகிறது |
நிலையக் குறியீடு | SVGA |
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே |
கோட்டம்(கள்) | மதுரை |
வரலாறு | |
திறக்கப்பட்டது | சூலை 1, 1930 |
மறுநிர்மாணம் | 2008 |
மின்சாரமயம் | இல்லை |
சிவகங்கை தொடருந்து நிலையம் (Sivaganga railway station, நிலையக் குறியீடு:SVGA) இந்தியாவின், தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின், மதுரை கோட்டத்தின் கீழ் இயங்குகிறது.[1]
அமைவிடம்
சிவகங்கை தொடருந்து நிலையம் ஆனது, சிவகங்கை நகரத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையம், மானாமதுரை - காரைக்குடி வழித்தடத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இயக்கப்படும் விரைவுத் தொடருந்துகளும் மற்றும் நீண்ட தூரம் செல்லும் விரைவுத் தொடருந்துகளும், இந்நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன.
சிவகங்கை மதுரை கோட்டத்தில் உள்ள முக்கியமான தொடருந்து நிலையங்களில் ஒன்றாக இருந்தாலும், இந்நிலையத்தில் 3 நடைமேடைகள் மட்டுமே உள்ளன.
இந்நிலையத்திற்கு அருகிலுள்ள வானூர்தி நிலையமான, மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம், இந்நகரிலிருந்து 50 கி.மீ தொலைவில் மேற்கே அமைந்துள்ளது.[2] இந்நிலையத்திற்கு தெற்கே மேலக்கொன்னக்குளம் தொடருந்து நிலையமும், வடக்கு பனங்குடி தொடருந்து நிலையமும் அமைந்துள்ளது.
படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- சிவகங்கை தொடருந்து நிலையம் Indiarailinfo.