திருநின்றியூர் மகாலட்சுமீசர் கோயில்
(திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
தேவாரம் பாடல் பெற்ற திருநின்றியூர் மகாலட்சுமீசர் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | திருநின்றியூர் மகாலட்சுமீசர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருநின்றியூர் |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | லட்சுமிபுரீசுவரர், மகாலட்சுமீசர்[1] |
தாயார்: | உலக நாயகியம்மை,லோகநாயகி |
தல விருட்சம்: | விளாமரம் |
தீர்த்தம்: | இலட்சுமி தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கோச்செங்கட்சோழன் அமைத்த மாட அமைப்பு (முன்னர்) [2] |
வரலாறு | |
அமைத்தவர்: | கோச்செங்கட்சோழன். [ மீள்கட்டுமானம் = 1899ஆம் ஆண்டு நாட்டுக்கோட்டை நகரத்தார் ] [2] |
திருநின்றியூர் மகாலட்சுமீசர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 19வது சிவத்தலமாகும். இத்தலத்தின்மேல் சம்பந்தர் ஒரு பதிகமும் நாவுக்கரசர் ஒரு பதிகமும் சுந்தரர் இரு பதிகங்களும் பாடியுள்ளனர்.மொத்தம் நான்கு பதிகங்கள் உள்ளன. இத்தலத்து இறைவனார் சுயம்பு மூர்த்தி. சிவபெருமானாரின் லிங்க வடிவின் உச்சியில் குழியுள்ளது.[2]
அகத்தியர், பரசுராமர் மற்றும் திருமகள் வழிபட்ட திருத்தலம்.[1][2] இக்கோயில் தருமையாதீனக் கோயில்.[2]
அமைவிடம்
இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறைக்கு வடகிழக்கே எட்டு கி.மீ தொலைவிலுள்ளது.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- கோயில் பற்றிய தகவல்கள் பரணிடப்பட்டது 2007-10-18 at the வந்தவழி இயந்திரம்
திருநின்றியூர் மகாலட்சுமீசர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருக்கடைமுடி |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருப்புன்கூர் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 19 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 19 |