தம்பட்டி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தம்பட்டி

தம்பட்டி (Thambatty) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உதகமண்டத்திலிருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ள ஒரு மலைக் கிராமமாகும். இது மலைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. நல்ல பயிர்களைக் கொண்ட தேயிலைத் தோட்டங்கள், செம்புற்று வயல்கள் மற்றும் காய்கறி சாகுபடி தோட்டங்கள் இந்த கிராமத்தில் உள்ளன. இயற்கைக்கு அழகு மிகுந்த இங்குத் திரைப்பட படப்பிடிப்புகள் பல நடந்துள்ளன.[1]

கிராமத்தின் மையப்பகுதியில் கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தம்பட்டியில் வசந்தகால திருவிழாவான மாரியம்மன் கோவிலில் ஹப்பாவைக் கொண்டாடுகிறார்கள்.[2] கல்வி மற்றும் வேலைக்காக இந்தியாவிலும் உலகிலும் சிதறிக்கிடந்த தம்பட்டியினர் இந்த திருவிழாவைக் கொண்டாடத் திரும்புகின்றனர். வழிபாடு மற்றும் கடவுளின் ஆசீர்வாதங்களுக்குப் பிறகு, இந்த ஹப்பா படுகா பாடல்கள், மசுதி படகா நடனம், படகா நாடகம், சுவையான உணவு மற்றும் பானங்கள் மற்றும் சமுதாய விழாவாகக் கொண்டாடுகின்றனர். வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளான "துபடிட்டு" (மைதா மற்றும் நெய்யில் தயாரிக்கப்படும் "ரவா லட்டு", கலவை, வடை பாயசம் போன்றவை) இந்த திருவிழாவின் போது சிறப்பு வாய்ந்தவை.

கல்வி

  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=தம்பட்டி&oldid=41796" இருந்து மீள்விக்கப்பட்டது