ஜோ மல்லூரி
ஜோ மல்லூரி | |
---|---|
பிறப்பு | 23 திசம்பர் 1964 |
தேசியம் | இந்தியன் |
பணி | எழுத்தாளர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2012–தற்போது |
ஜோ மல்லூரி என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதன்முறையாக பிரபு சாலமன்' அவர்களின் கும்கி (2012) படத்தில் நடித்துள்ளார்.அதில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான நாயகியின் தந்தையாகவும், ஊர்தலைவராகவும் நடித்து புகழ்பெற்றார்.[1]
தொழில்
ஜோ மல்லூரி தமிழ் எழுத்தாளராக அறியப்படுகிறார். இவருடைய பாடல்கள், ஆவணங்கள் ஆகியவை முக்கியமானவையாகும்.[2] இவர் விலை மகளின் நாட்குறிப்பு எனும் நாவலை எழுதியுள்ளார். தமிழாரம் எழும் நூலை எழுதிக்கொண்டுள்ளார். [3]
இவர் பிரபு சாலமன் அவர்களின் கும்கி (2012) திரைப்படத்தில் முதன்முதலாக நடித்துள்ளார். நாயகியின் தந்தையாகவும் மலைவாழ் மக்களின் தலைவராகவும் நடித்து இருந்தார். அவருடைய நடிப்பினை அனைவரும் பாராட்டினர்."[4] முதல் திரைப்படம் கொடுத்த நற்பெயர் காரணமாக ஜில்லா (திரைப்படம்) and ரம்மி பல படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2012 | கும்கி | மாதையன் | |
2013 | வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்) | காவல் அதிகாரி | |
2013 | ஜன்னல் ஓரம் | ||
2014 | ஜில்லா (திரைப்படம்) | வீரபாண்டி | |
2014 | ரம்மி | ||
2014 | தெனாலிராமன் | ||
2014 | அஞ்சான் | க்ரீம் பாய் | |
2014 | இரும்புக் குதிரை | ரூபன் | |
2014 | மொசக்குட்டி | விருமாண்டி | |
2014 | அப்புச்சி கிராமம் | ||
2015 | காக்கா முட்டை (திரைப்படம்) | பழரசம் | |
2015 | ஸ்ட்ராபெரி | டிசோசா | |
2015 | புலி | மூலிகை மருத்துவர் | |
2016 | திருநாள் (திரைப்படம்) | நாயகியின் தந்தை | |
2016 | விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் | விருமாண்டி | |
2016 | பறந்து செல்ல வா | டக்ளஸ் | |
2017 | சி3 (திரைப்படம்) | ஆசிரியர் | |
2017 | சரவணன் இருக்க பயமேன் | ||
2020 | மீண்டும் ஒரு மரியாதை | ||
2021 | வேலன் | தில்லையார் | |
2021 | ஆனந்தம் விளையாடும் வீடு | பெரியாம்பள | |
2022 | பன்றிக்கு நன்றி சொல்லி | சண்முக பாண்டியன் | |
2023 | ரன் பேபி ரன் | பிரான்சிஸ் ராஜா | |
2023 | பத்து தல | சபரி |
இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
- ↑ "UltimateCine.com".
- ↑ "The Hindu : Tamil Nadu News : Classical Tamil introduced as subject". www.hindu.com. Archived from the original on 27 February 2014. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
- ↑ https://m.dinamalar.com/detail-amp.php?id=1704827
- ↑ "Kumki: Close encounters - The Hindu". 15 December 2012. http://www.thehindu.com/features/cinema/kumki-close-encounters/article4203420.ece.