மீண்டும் ஒரு மரியாதை

மீண்டும் ஒரு மரியாதை (Meendum Oru Mariyathai) பாரதிராஜா எழுதி, இயக்கி 2020இல் வெளியான இந்திய தமிழ் திரைப்படம் .[1] பாரதிராஜா, நட்சத்திரா, ஜோ மல்லூரி மற்றும் மௌனிகா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இந்தப்படத்தை மனோஜ் குமார் தனது மனோஜ் கிரியேஷன்ஸ் என்னும் படவுருவாக்க நிறுவனத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கான இசையை என்.ஆர்.ரகுநந்தன் அமைத்துள்ளார், பின்னணி இசையை சபேஷ்-முரளியும், ஒளிப்பதிவை சலாய் சாகதேவனும் மேற்கொண்டுள்ளனர். ஊட்டியில் நடைபெற்ற 2018இல் தெற்காசிய குறும்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.[2][3][4]

மீண்டும் ஒரு மரியாதை
Theatrical release poster
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புபாரதிராஜா
இசைபாடல்கள்:
என்.ஆர். இரகுநாதன்
சரண் சூரியா
யுவன் சங்கர் ராஜா
பின்னணியிசை:'
சபேஷ்-முரளி
நடிப்புபாரதிராஜா
நக்சத்திரா
ஜோ மல்லூரி
மௌனிகா
ஒளிப்பதிவுசாலை சகாதேவன்
படத்தொகுப்புகேஎம்கே. பாலைவேல்
கலையகம்மனோச் கிரியேசன்சு
வெளியீடு21 பிப்ரவரி 2020
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

முன் பணிகள்

ஓம் என்ற படத்தில் பி.பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று 2014 நவம்பரில் அறிவிக்கப்பட்டது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்து நிர்மல்குமார் இப்படத்தை இயக்குகிறார் என்று கூறப்பட்டது. தலைப்பு "ஓல்ட் மேன்" என்பதன் சுருக்கமாகும்.[5] இருப்பினும், சில காரணங்களால், நிரதிய்குமார் இந்த திட்டத்தை இடையில் விட்டுவிட்டார்.[6][7] செயலற்ற ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு, படத்தின் தலைப்பு ஓம் இலிருந்து மீண்டும் ஓரு மரியாதை என அக்டோபர் 2019இல் மாற்றப்பட்டது.[8]

மீண்டும் ஒரு மரியாதை
Soundtrack
என். ஆர். இரகு நந்தன், யுவன் சங்கர் ராஜா,சரண் சூரியா
வெளியீடு18 ஆகத்து 2018
இசைப் பாணிபியூச்சர் பிலிம் சவுண்டு டிராக்கு
நீளம்35:31
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சரிகம
வார்ப்புரு:External media

இப்படத்தின் ஒலிப்பதி என்.ஆர்.ரகுநந்தன், ஷரன் சூர்யா இரண்டு பாடல்களையும், யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலையும் இசையமைத்துள்ளனர். சரிகம என்ற பெயரில் இசை வெளியிடப்பட்டது.[9][10]

தடவரிசை
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "அன்புள்ள காதலா"  அபய் சோத்புர்கார்! அலிசா தாமசு 3:20
2. "ஆசை வெச்சேன்"  பிரியா கிமேசு 3:48
3. "இளமையில் காட்டில்"  சத்தியப்பிரகாசு, வைசாலி 4:23
4. "இதயத்தின் திரையிலே"  அபய் சோத்புர்கார்! அலிசா தாமசு 1:09
5. "தூவா மழை"  வந்தனா சீனிவாசன், சரத் சந்தோசு 4:45
6. "சனனமும் (சுலோகன்)"  மது பாலகிருட்டிணன், பார்வதி 2:27
7. "கொடி கொடியாய்"  விசய் ஏசுதாசு, வைசாலி 3:52
8. "பேபி"  ரிச்சர்டு 1:58
9. "கொழுந்தன் பெரு"  வேல்முருகன், பிரியா கிமேசு 3:48
10. "சாட்டையின் முனையில் (நீ செய்த நீரோடை)"  பிரியா கிமேசு, சாய் சரவணன் 4:18
11. "சலமலே"  திவ்யா பிரசாத் 0:38
12. "முன்றிலில் சிலம்பரசன் (சுத்தும் இந்த கம்பா)"  சரண் சூரியா திவ்யா பிரசாத் 0:55
மொத்த நீளம்:
35:31

அதே மாதத்தில் முதல் முன்னோட்டப் படிமம் வெளியான பின்னர் படத்தின் அதிகாரப்பூர்வ குறு முன்னோட்டம் 21 சூலை 2018 அன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் கதைக்களம் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றியது என்று ஊகிக்கப்படுகிறது.[11]

மேற்கோள்கள்

  1. Guru (14 September 2018). "Om Tamil Movie (2019) | Cast | Songs | Teaser | Trailer | Release Date" (in en-US). https://www.newsbugz.com/om-tamil-movie/amp/. 
  2. ஆர்.டி.சிவசங்கர். "ஊட்டி திரைப்பட விழா: விருதை வென்ற இத்தாலிக் குறும்படம்!" (in ta). https://tamil.thehindu.com/cinema/cinema-others/article25740674.ece. 
  3. "ஊட்டி திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘ஓம்‘!" (in ta). 8 December 2018. https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/director-bharathirajaas-om-movie-will-be-screened-at-ooty-film-festival/articleshow/67002200.cms. 
  4. ஆர்.டி.சிவசங்கர். "ஊட்டி திரைப்பட விழா: ஊட்டியில் பாரதிராஜாவின் ‘ஓம்’" (in ta). https://tamil.thehindu.com/cinema/cinema-others/article25679997.ece. 
  5. "In ‘OM’, Bharathiraja Plays A Young Girl’s Knight In Shining Armour". 22 July 2018. https://silverscreen.in/news/in-om-bharathiraja-plays-a-young-girls-knight-in-shining-armour/. 
  6. "After 34 years, Bharathiraja is back as hero" இம் மூலத்தில் இருந்து 2018-12-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181231195623/http://www.sify.com/movies/after-34-years-bharathiraja-is-back-as-hero-news-tamil-ol1p9bddabbeg.html. 
  7. Shankar (28 November 2014). "34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக பாரதிராஜா". https://tamil.filmibeat.com/news/bharathiraja-plays-lead-role-after-34-years-032045.html. 
  8. https://www.cinemaexpress.com/stories/news/2019/oct/28/bharathirajas-old-man-is-meendum-oru-mariyathai-15168.html
  9. "Om (Original Motion Picture Soundtrack) by N. R. Raghunanthan, Yuvan Shankar Raja & Sharran Surya". https://music.apple.com/in/album/om-original-motion-picture-soundtrack/1429790421. 
  10. Array. "OM – All Songs – Download or Listen Free – JioSaavn". https://www.jiosaavn.com/album/om/VTLnAlOJvxU_. 
  11. "om official teaser: bharathiraja om tamil movie official teaser released - ஓம் - ஓல்டு மேன் பாரதிராஜாவின் ஓம் பட டீசர் வெளியானது!". https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/bharathiraja-om-tamil-movie-official-teaser-released/articleshow/65089460.cms. 
"https://tamilar.wiki/index.php?title=மீண்டும்_ஒரு_மரியாதை&oldid=36631" இருந்து மீள்விக்கப்பட்டது