ஜோக்கர் துளசி
ஜோக்கர் துளசி | |
---|---|
பிறப்பு | துளசி சென்னை |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1976-2004 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மருது பாண்டி உடன் பிறப்பு தமிழச்சி இளைஞர் அணி அவதார புருஷன் |
சொந்த ஊர் | சென்னை |
தொலைக்காட்சி | கோலங்கள், வாணி ராணி, கேளடி கண்மணி |
ஜோக்கர் துளசி (Joker Thulasi) என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றி வருகிறார். 11 ஏப்ரல் 1976 இல் வெளியான தேவராஜ்-மோகன் இயக்கிய தமிழ் திரைப்படமான “உங்களில் ஒருத்தி” படத்தில் துளசி அறிமுகமானார். ஒரு மூத்த நடக நடிகராகவும், திரைப்பட நடிகராகவும் பல தசாப்தங்களாக இருந்துவருகிறார். இவர் கீழ்கண்ட நன்கு அறியப்பட்ட திரைப்படங்களில் தோன்றியுள்ளார்; தமிழச்சி, இளைஞர் அணி, உடன் பிறப்பு, அவதார புருஷன் மற்றும் மண்ணைத் தொட்டு கும்பிடனும் . பல படங்களில் இவரது நடிப்பு குறிப்பாக " திருமதி பழனிச்சாமி " இல் பாராட்டப்பட்டது, இது 1992 ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் அது ஒன்றாகும்.[1][2]
ஆரம்ப கால வாழ்க்கை
இவர் தமிழ்நாட்டின், சென்னையில் பிறந்தார். ஆரம்ப நாட்களில், இவர் நாடக நடிகராக இருந்தார். சென்னையில் உள்ள கண்மணி நாடகக் குழுவின் முதல் நடிகர் இவர் ஆவார். பின்னர், இவர் உங்களில் ஒருதி திரைப்படத்தில் திரைப்பட நடிகராக அறிமுகமாகி நடித்து வருகிறார்.
திரைப்பட வாழ்க்கை
மனோஜ் குமார் இயக்கிய ராம்கி மற்றும் சீதா ஆகியோருடன் தமிழ் திரைப்படமான “ மருது பாண்டி ” படத்தில் துளசி முன்னணி நடிகராக நடிகராக அறிமுகமானார்.[3]
தொலைக்காட்சி வாழ்க்கை
துளசி தற்போது தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் துணை வேடங்களில் நடித்து வருகிறார். அவரது குறிப்பிடத்தக்க தொடர்கள்
- கோலங்கள்
- வாணி ராணி
- கேளடி கண்மணி
- முத்தராம்
- கஸ்தூரி
- நாணல்
- மாதவி
- அழகு
திரைப்படவியல்
இது ஒரு பகுதி திரைப்படவியல் மட்டுமே. நீங்கள் இதை விரிவாக்கலாம்.
ஆண்டு | படம் | பாத்ததிரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1976 | உங்களில் ஒருத்தி | ||
1976 | மன்மத லீலை | ||
1982 | பட்டணத்து ராஜாக்கள் | ||
1987 | இது ஒரு தொடர்கதை | ||
1988 | ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் | பைத்தியக்காரன் | |
1990 | நம்ம ஊரு பூவாத்தா | ||
1990 | மருது பாண்டி | ||
1990 | நாங்கள் புதியவர்கள் | ||
1991 | சித்திரைப் பூக்கள் | ||
1991 | மரிக்கொழுந்து | ||
1992 | திருமதி பழனிச்சாமி | ||
1992 | சாமுண்டி | ||
1993 | மறவன் | ||
1993 | உடன் பிறப்பு | பிச்சைக்காரன் | |
1993 | உள்ளே வெளியே | ||
1994 | இளைஞர் அணி | ||
1994 | செவத்த பொண்ணு | ||
1995 | தமிழச்சி | ||
1995 | சின்ன மணி | ||
1995 | சிந்துபாத் | ||
1995 | நீலக்குயில் | ||
1995 | மண்ணைத் தொட்டு கும்பிடணும் | ||
1996 | கட்டபஞ்சாயத்து | ||
1996 | அவதார புருஷன் | ||
1996 | வாழ்க ஜனநாயகம் | ||
1996 | புருஷன் பொண்டட்டி | ||
1997 | காலமெல்லாம் காத்திருப்பேன் | ||
1997 | ரட்சகன் | ||
1998 | மூவேந்தர் | ||
1998 | புதுமைப்பித்தன் | ||
1999 | அடுத்தக் கட்டம் | ||
2000 | நீ எந்தன் வானம் | ||
2004 | ஏய் |
குறிப்புகள்
- ↑ "Joker Thulasi". Onenov (in English). 2018-07-06. Archived from the original on 2020-02-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-04.
- ↑ "Telugu Tv Actor Joker Thulasi Biography, News, Photos, Videos". nettv4u (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-02-04.
- ↑ kalyani (2017-06-11). "Joker Thulasi [Comedian]". Antru Kanda Mugam (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-02-04.