மண்ணைத் தொட்டு கும்பிடணும்
மண்ணைத் தொட்டு கும்பிடணும் | |
---|---|
இயக்கம் | ஆர். உமாசங்கர் |
தயாரிப்பு | செல்வி சிவகுரு |
கதை | ஆர். உமாசங்கர் |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எம். கேசவன் |
படத்தொகுப்பு | எம். கதிர்வேல் |
கலையகம் | ஸ்ரீ ரேணுகாம்பாள் மூவிஸ் |
வெளியீடு | திசம்பர் 16, 1995 |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மண்ணைத் தொட்டு கும்பிடணும் (Mannai Thottu Kumbidanum) என்பது 1995 ஆம் ஆண்டய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்தின் இயக்குநர். ஆர். உமாசங்கர் ஆவார். இவர் இதற்கு முன்பு தம்பி ஊருக்கு புதுசு (1991) படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் செல்வா மற்றும் கீர்த்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் ராஜேஷ், ராக்கி, கவுண்டமணி, செந்தில், வடிவுக்கரசி, கமலா காமேஷ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். செல்வி சிவகுரு தயாரித்த இப்படத்திற்கு, தேவா இசை அமைத்துள்ளார். இப்படமானது 1995 திசம்பர் 16 அன்று வெளியிடப்பட்டது.[1][2][3]
கதை
சத்தியமூர்த்தி ( ராஜேஷ் ) ஒரு கனிவான கிராமத் தலைவராவார். அவர் கிராமத்திலுள்ள ஏழை மக்களுக்கு உதவுபவராவார். அதே சமயம் நல்லதம்பி (ராக்கி) இரக்கமற்ற பணக்கார நில உரிமையாளராக உள்ளார். இவரது மகன் ராமச்சந்திரனும் ( செல்வா ) ராசதியும் ஒருவருக்கொருவர் காதலிக்கிறார்கள். சத்தியமூர்த்தி முடங்குவாதத்தால் பாதிக்கப்படுகிறார். இதைப் பயன்படுத்தி ராமச்சந்திரன் கிராமத்தின் புதிய தலைவராகிறார். இதற்கிடையில், சத்தியமூர்த்தியின் குடும்பத்தையே அழிக்க நல்லதம்பி விரும்பி செயல்படுகிறார். அடுத்தது நடப்பது என்ன என்பதே கதையின் முடிவு.
நடிகர்கள்
- செல்வா இராமச்சந்திரனாக
- கீர்த்தனா இராசாத்தியாக
- ராஜேஷ் சத்தியமூர்த்தியாக
- ராக்கி நல்லதம்பியாக
- கவுண்டமணி தேசிங்குவாக
- செந்தில் டயராக (ராஜாதி ராஜ ராஜ மார்தாண்ட ராஜ கம்பீர ராஜ குலோத்துங்க கத்தவராய கிருஷ்ண காமராஜ்)
- வடிவுக்கரசி
- கமலா காமேஷ் நல்லதம்பியின் தாயாக
- வரலட்சுமி இராஜாத்தியின் தாயாக
- திடீர் கண்ணையா மன்னாராக
- பயில்வான் ரங்கநாதன்
- பிரேமி
- தேவிசிறீ
- சர்மிலி
- கவிதாசிறீ
- வசந்த்
- ஜோக்கர் துளசி
இசை
படத்தற்கான பின்னணி இசை பாடல்களுக்கான இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் தேவா மேற்கொண்டார். 1995 ஆம் ஆண்டில் வெளியான இந்த படத்தின் பாடல் பதிவில், வாலி, பிறைசூடன், காளிதாசன் ஆகியோரால் எழுதப்பட்ட பாடல் வரிகளைக் கொண்டு ஐந்து பாடல்கள் உள்ளன.[4]
டெண் | பாடல் | பாடகர் (கள்) | பாடல் வரிகள் | காலம் |
---|---|---|---|---|
1 | 'ஆத்தா முத்து மாரியம்மா' | சித்ரா, குழுவினர் | வாலி | 4:38 |
2 | 'எனக்கு இன்று தீபாவளி' | எஸ். குழந்தைவேலு, மின்மினி | காளிதாசன் | 4:56 |
3 | 'எப்போ மாமா கச்சேரி' | மனோ, சுவர்ணலதா | வாலி | 4:30 |
4 | 'மண்ண தொட்டு கும்பிடனும்' | மலேசியா வாசுதேவன், குழுவினர் | பிறைசூடன் | 4:36 |
5 | 'சீதையின் கைகள்' | கே.எஸ் சித்ரா, ஸ்வர்ணலதா | வாலி | 5:08 |
மேற்கோள்கள்
- ↑ "Find Tamil Movie Mannai Thottu Kumbidanum". jointscene.com இம் மூலத்தில் இருந்து 2010-07-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100711050043/http://www.jointscene.com/movies/kollywood/Mannai_Thottu_Kumbidanum/8099.
- ↑ "Filmography of mannathottu kumbidanum". cinesouth.com இம் மூலத்தில் இருந்து 2004-12-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041217165537/http://www.cinesouth.com/films/cast/newfilmdb/mannathottu%20kumbidanum.html.
- ↑ "Mannai Thottu Kumbidanum (1995) Tamil Movie". spicyonion.com. http://spicyonion.com/movie/mannai-thottu-kumbidanum/.
- ↑ "Mannai Thottu Kumbidanum Songs". play.raaga.com. http://play.raaga.com/tamil/album/Mannai-Thottu-Kumbidanum-songs-T0001075.