சிறீதர் (நடன அமைப்பாளர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிறீதர்
பிறப்புசென்னை, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடன அமைப்பாளர், தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி நடுவர், நடிகர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2001–தற்போது வரை

சிறீதர் (Sridhar (choreographer)) என்பவர் ஒரு இந்திய நடன இயக்குநர் ஆவார். இவர் இந்தியாவின் பல மொழி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் ஒரு நடிகராக பொய் (2006) படத்தின் வழியாக அறிமுகமானார். மேலும் இவர் திரைப்பட பாடல்களில் சிறப்புத் தோற்றங்களில் தோன்றியுள்ளார்.

தொழில்

கே. பாலச்சந்தரின் பொய் (2006) திரைப்படத்தில் சிறீதர் முழுமையான நடிகராக அறிமுகமானார். அப்பட்டதில் இவர் ஒரு துணை வேடத்தில் தோன்றினார்.[1] காதலில் விழுந்தேன் (2008) படத்தில் "நாக்க முக்கா " பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். பிலபலமான பாடலான இதை திரையில் நன்றாக காட்டுவதை உறுதி செய்யும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. இதன் விளைவாக சிறீதர் "அதற்கு சில அதிரடியான நடன அசைவுகளைக் கொடுத்தார்.[2] சிறீதர் பிரபுதேவாவின் எங்கேயும் காதல் (2011) படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியதற்காக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார். அப்படத்தில் இவர் நான்கு பாடல்களுக்கு நடன இயக்கம் செய்தார்.[3] நாதஸ்வரம் என்ற தொலைக்காட்சி தொடரின் தலைப்பு பாடலிலும் நடனமாடினார்.

2015 ஆம் ஆண்டில், ராகவ் மாதேஷ் இயக்கிய போக்கிரி மன்னன் என்ற அதிரடி நாடகப்படத்தில் முன்னணி நடிகராக முதல் முறையாக நடித்தார். சிறிய அளவு விளம்பரத்துடன் வெளியான இப்படம் விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[4] நவ்ரன்னிங்.காம் இதை ஒரு "சாதாரண படம்" என்றும் "திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவம் சித்தரவதையானது" என்றும் குறிப்பிட்டது, சிறீதர் "கடந்து செல்லக்கூடிய அறிமுகம்" என்றும் குறிப்பிட்டது.[5][6]

இவர் 2016 ஆம் ஆண்டில், சவாடி படத்திற்கு இயக்குநரானார்.[7]

திரைப்படவியல்

  • குறிப்பில் குறிப்பிடப்படாத, எல்லா படங்களும் தமிழ் படங்களாகும்.

நடன இயக்குனர்

படங்கள்
ஆண்டு படம் குறிப்பு
2002 ஏழுமலை
2002 ராஜா
2002 யுனிவர்சிடி சிறீதர்
2003 அலாவுதீன்
2003 சூரி
2004 வர்ணஜாலம்
2004 4 ஸ்டூடண்ட்ஸ்
2004 அரசாட்சி
2004 காதல்
2005 மந்திரன்
2006 கோடம்பாக்கம்
2006 அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
2006 பொய்
2007 போக்கிரி
2007 மருதமலை
2007 வேகம்
2008 முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு
2008 காதலில் விழுந்தேன்
2008 பச்சை நிறமே
2008 திண்டுக்கல் சாரதி
2009 வில்லு
2010 அம்பாசமுத்திரம் அம்பானி
2011 எங்கேயும் காதல்
2011 புலிவேசம்
2011 வெடி
2011 வித்தகன்
2012 எப்படி மனசுக்குள் வந்தாய்
2012 துப்பாக்கி
2013 சந்தமாமா
2013 தலைவா
2013 ரகளபுரம்
2014 ஜில்லா
2015 போக்கிரி மன்னன்
2015 புலி
2015 10 எண்றதுக்குள்ள
2015 பிரவாகயா சிங்கள திரைப்படம்
2016 தெறி
2016 24
2017 போகன்
2018 கோலிசோடா 2
2018 பாஸ்கர் ஒரு ராஸ்கல்
2018 ஜூங்கா
2018 சார்லி சாப்ளின் 2
2018 சர்கார்
2018 எங் மங் சங்
TBA வணங்காமுடி
தொலைக்காட்சி
ஆண்டு தொடர் மொழி
2000 மணிகூண்டு தமிழ்
2010 நாதஸ்வரம் தமிழ்

இயக்குனர்

ஆண்டு படம் குறிப்புகள்
2018 சவாடி

நடிகர்

படங்கள்
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2000 டபுள்ஸ் பிரபுவின் நண்பர்
2002 யுனிவர்சிடி சிறீதர்
2003 சூரி அவராகவே "பிரிவெல்லாம்" பாடலில் சிறப்பு தோற்றம்
2004 வர்ணஜாலம் அவராகவே "மாதா மாதா" பாடலில் சிறப்பு தோற்றம்
2004 மதுர அவரே "மச்சன் பேரு" பாடலில் சிறப்பு தோற்றம்
2004 காதல் அவராகவே "புரா கூண்டு" பாடலில் சிறப்புத் தோற்றம்
2005 டிசம்பர் மலையாள படம்; "டம் டுமா" பாடலில் சிறப்பு தோற்றம்
2006 கோடம்பாக்கம் அவராகவே "ஓ பப்பா" பாடலில் சிறப்பு தோற்றம்
2006 பொய் ரோஷன்
2007 புலி வருது அவராகவே "தேரு வருது" பாடலில் சிறப்புத் தோற்றம்
2007 வேகம்
2008 காதலில் விழுந்தேன் அவராகவே "நக்க முக்கா" பாடலில் சிறப்பு தோற்றம்
2010 அம்பாசமுத்திரம் அம்பானி அவரே "பூ பூக்கும் தருணம்" பாடலில் சிறப்புத் தோற்றம்
2011 புலிவேசம் அவரே "டாப் கிளாஸ்" பாடலில் சிறப்பு தோற்றம்
2013 தலைவா அவரே "தமிழ் பசங்க" பாடலில் சிறப்புத் தோற்றம்
2013 சந்தமாமா அவராகவே "நாராயணா நாராயணா" பாடலில் சிறப்பு தோற்றம்
2013 ரகளபுரம் அவரே "ஒபாமாவும்" பாடலில் சிறப்பு தோற்றம்
2014 ஜில்லா அவராகவே "எப்ப மாமா ட்ரீட்டு" பாடலில் சிறப்புத் தோற்றம்
2015 போக்கிரி மன்னன்
2015 10 எண்றதுக்குள்ள அவராகவே "வ்ரூம் வ்ரூம்" பாடலில் சிறப்பு தோற்றம்
2016 நட்பதிகாரம் 79 அவரே "செல்லம்மா" பாடலில் சிறப்பு தோற்றம்
2017 சக்க போடு போடு ராஜா அவரே "கலக்கு மச்சான்" பாடலில் சிறப்புத் தோற்றம்
2018 கோலிசோடா 2 அவரே "பொண்டாட்டி" பாடலில் சிறப்பு தோற்றம்
2018 ஜுங்கா அவரே "அம்மா மேல சத்தியம்" பாடலில் சிறப்பு தோற்றம்
தொலைக்காட்சி
ஆண்டு படம் பாத்திரம் மொழி
2005 ராஜ ராஜேஸ்வரி "சாகலகலா வள்ளியே" என்ற தலைப்பு பாடலில் சிறப்புத் தோற்றம் தமிழ்
2010 நாதஸ்வரம் "நாதஸ்வரம்" என்ற தலைப்பு பாடலில் சிறப்புத் தோற்றம் தமிழ்

நடனமாடுபவர்

ஆண்டு படம் குறிப்புகள்
1995 கூலி "ஏன் ரம்மு" பாடலில் நடனக் கலைஞர்
1997 அருணாச்சலம்
1997 தினமும் என்னை கவனி
1997 ரட்சகன்
2000 தை பொறந்தாச்சு
2000 குஷி
2000 பெண்ணின் மனதைத் தொட்டு
2000 பார்த்தேன் ரசித்தேன் "புடிக்கல" பாடலில் நடனக் கலைஞர்
2000 ரிதம் "தனியே" பாடலில் நடனக் கலைஞர்
2001 மின்னலே "அழகிய தீ" பாடலில் நடனக் கலைஞர்
2001 பிரஜ "சந்தணமணி" பாடலில் நடனக் கலைஞர்
2001 வேதம்
2001 சமுத்திரம்
2001 12 பி "சரியா தவறா" பாடலில் நடனக் கலைஞர்
2001 ஷாஜகான்
2001 மஜ்னு "மெர்குரி மேலே" பாடலில் நடனக் கலைஞர்
2002 ரெட் "கண்ணை கசக்கும்" பாடலில் நடனக் கலைஞர்
2002 தமிழன்
2002 யூத் "ஆல்தோட்ட பூபதி" பாடலில் நடனக் கலைஞர்
2004 உதயா "பூக்கும் மலரை" பாடலில் நடனக் கலைஞர்

குறிப்புகள்

  1. "The Hindu : Tamil Nadu / Chennai News : At 75, Balachander is still at it". www.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 11 August 2018.
  2. "Kadhalil Vizhunthen - Signature Dance Moves". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 11 August 2018.
  3. "Prabhu Deva gave me freedom: Sridhar". sify.com. பார்க்கப்பட்ட நாள் 11 August 2018.
  4. "Pokkiri Mannan Movie Review {1/5}: Critic Review of Pokkiri Mannan by Times of India". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 11 August 2018.
  5. "Pokkiri Mannan Review - Tamil Movie Pokkiri Mannan Review". nowrunning.com. Archived from the original on 12 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 August 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Chronicle Today Network - Daily News". www.chronicletodaynetwork.com. Archived from the original on 22 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 August 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-28. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
"https://tamilar.wiki/index.php?title=சிறீதர்_(நடன_அமைப்பாளர்)&oldid=21789" இருந்து மீள்விக்கப்பட்டது