தெறி (திரைப்படம்)
தெறி | |
---|---|
இயக்கம் | அட்லீ |
தயாரிப்பு | கலைப்புலி எசு. தாணு |
கதை | அட்லீ |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | விஜய் ஏமி ஜாக்சன் சமந்தா ராதிகா சரத்குமார் பிரபு |
ஒளிப்பதிவு | ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் |
படத்தொகுப்பு | ஆண்டனி எல். ரூபன் |
கலையகம் | வி. கிரியேசன்சு |
விநியோகம் | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் |
வெளியீடு | ஏப்ரல் 14, 2016[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹65 கோடி (US$8.1 மில்லியன்)[2] |
மொத்த வருவாய் | ₹158 கோடி (US$20 மில்லியன்) |
தெறி (Theri) 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இதில் விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு முதலியோர் நடித்துள்ளனர்.[3] அட்லீ இயக்கிய இத்திரைப்படத்தை கலைப்புலி எசு. தாணு தயாரித்தார்.[4] இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தார்.[5] இப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இத் திரைப்படத்தில் நடிகை சமந்தா தனது சொந்தக்குரலிலேயே வசனம் பேசியுள்ளார். [6]
நடிகர்கள்
- விஜய் - விஜய் குமார் மற்றும் ஜோசெப் குருவில்லா
- ஏமி ஜாக்சன் - அனி
- சமந்தா - மித்ரா
- பிரபு
- ராதிகா சரத்குமார்[3]
- மகேந்திரன்[7]
- ராஜேந்திரன்
- நைனிகா
- சுனைனா(சிறப்புத் தோற்றம்)
- ஸ்ரீ குமார் (சிறப்புத் தோற்றம்)
பாடல்கள்
பாடல்களுக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
எண். | பாடல் | பாடல் வரிகள் | பாடகர்கள் | நீளம் |
---|---|---|---|---|
1. | "ஜித்து ஜில்லாடி" | ரோகேஷ் | தேவா, பாலச்சந்திரன் | 4:49 |
2. | "என் ஜீவன்" (சமஸ்கிருத வரிகள் ஆர். தியாகராஜன்) | நா.முத்துகுமார் | ஹரிஹரன், சைந்தவி, வைக்கம் விஜயலட்சுமி | 5:21 |
3. | "ஈனா மீனா தீக்கா" (ராப் பாடல் வரிகள் அருண்ராஜா காமராஜ்) | பா.விஜய் | ஜி.வி.பிரகாஷ் குமார், உத்தாரா உன்னிகிருஷ்ணன் | 4:06 |
4. | "செல்ல குட்டி" | கபிலன் | விஜய், நீதி மோகன் | 4:50 |
5. | "தாய்மை" | புலமைபித்தன் | பாம்பே ஜெயஸ்ரீ | 2:46 |
6. | "ராங்கு" | கபிலன் | டி.ராஜேந்தர், ஜி.வி.பிரகாஷ் குமார், சோனு கக்கர் | 3:53 |
7. | "டப் தெறி படி"(Dub Theri Step) | அருண்ராஜா காமராஜ் | அருண்ராஜா காமராஜ் | 1:59 |
8. | "ஹே ஆஸ்மான்" (இந்தியில் போனஸ் டிராக்) | விஷால் சந்திரசேகர் | யாஷ் கோல்சா | 1:44 |
9. | "என் ஜீவன்" (திரைப்பட பதிப்பு) | நா.முத்துகுமார் | ஜி.வி.பிரகாஷ்குமார், சைந்தவி, வைக்கம் விஜயலட்சுமி | 5:21 |
முழு நீளம் | 29:37 |
வெளியீடு
இப்படம் 14 ஏப்ரல் 2016 அன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் 350 திரைகள், கேரளாவில் 200 திரைகள், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 150 திரைகள், மற்றும் கர்நாடகாவில் 70 திரைகள் என உலகம் முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. மேலும், வெளிநாட்டு மையங்களில் 400 திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. யுனைடெட் ஸ்டேட்ஸ் முழுவதும் 144 திரைகளுடன். அமெரிக்காவில் படத்தை விநியோகித்த CineGalaxy Inc, இது "சமீபத்திய ஆண்டுகளில் விஜய்-படத்தின் மிகப்பெரிய வெளியீடு" என்று கூறியது.
தயாரிப்பு
இத்திரைப்படத்தை கலைப்புலி. எஸ்.தாணு தயாரித்துள்ளார்..
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Maggie Davis (26 நவம்பர் 2015). "Theri poster: Vijay all set to impress his fans in triple avatar Theri slated to release on January 14, 2016". India. http://www.india.com/showbiz/theri-poster-vijay-all-set-to-impress-his-fans-in-triple-avatar-738000/. பார்த்த நாள்: 27 நவம்பர் 2015.
- ↑ Nicy V. P (30 சூன் 2015). "Atlee's 'Vijay 59' to be Made with a Budget of ₹65 Crore". International Business Times. http://www.ibtimes.co.in/atlees-vijay-59-be-made-budget-100-crore-637553. பார்த்த நாள்: 27 நவம்பர் 2015.
- ↑ 3.0 3.1 DN (25 நவம்பர் 2015). "விஜய்-அட்லீ பட டைட்டில், முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!". தினமணி. http://www.dinamani.com/cinema/2015/11/25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D---%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/article3146354.ece. பார்த்த நாள்: 27 நவம்பர் 2015.
- ↑ "விஜய்யின் புதிய படம் ‘தெறி’". மாலைச்சுடர். 26 நவம்பர் 2015 இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304214857/http://www.maalaisudar.com/newsindex.php?id=49706%20&%20section=1. பார்த்த நாள்: 27 நவம்பர் 2015.
- ↑ ஸ்கிரீனன் (25 நவம்பர் 2015). "விஜய்-அட்லீ படத்துக்கு தலைப்பு 'தெறி'". தி இந்து. http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/article7915875.ece. பார்த்த நாள்: 27 நவம்பர் 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303134429/http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=3635.
- ↑ "பாகுபலி'யுடன் கனெக்ஷன் ஆகும் விஜய்யின் 'தெறி'". IndiaGlitz. 26 நவம்பர் 2015. http://www.indiaglitz.com/vijay-theri-connection-with-baahubali-tamil-news-147595.html. பார்த்த நாள்: 27 நவம்பர் 2015.
- ↑ "எஸ். தாணு தயாரிப்பில் விஜய் நடிக்கும் 59வது படத்தின் பெயர், ’தெறி’". தினத்தந்தி. 25 நவம்பர் 2015. http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2015/11/25170330/vijay-59-movie-title.vpf. பார்த்த நாள்: 27 நவம்பர் 2015.