அட்லீ

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அட்லீ
Atleeawrd.jpg
2014 விஜய் விருதுகளுடன் அட்லீ
பிறப்புஅருண் குமார்
செப்டம்பர் 21, 1986 (1986-09-21) (அகவை 38)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
பணிஇயக்குநர், திரைக்கதை எழுதுநர்
செயற்பாட்டுக்
காலம்
2010-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
கிருஷ்ணா பிரியா (m. 2014)
வலைத்தளம்
அதிகாரபூர்வ பக்கம்

அட்லீ (பிறப்பு: செப்டம்பர் 21, 1986) ஒரு தமிழ் திரைப்பட இயக்குநர் ஆவார். அட்லீ இயக்குநர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து விட்டு "ராஜா ராணி (2013)" திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் . இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் "முகப்புத்தகம்" என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார் . பின்னர் இவர் இயக்கிய தெறி திரைப்படத்திற்காக விஜய் விருது வென்றுள்ளார். இவர் இயக்கி, விஜய் நடித்த மெர்சல் படமானது தீபாவளிப் பண்டிகை அன்று வெளியானது மற்றும் பிகில் என்ற திரைப்படம் மீண்டும் நடிகர் விஜய்யுடன் தீபாவளி 2019-இல் வெளிவந்தது .[1] ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ள அட்லீ, இந்திய அளவில் பேசப்படும் இயக்குநராக வளர்ந்துள்ளார்.[2]

மேற்கோள்கள்

  1. "8th Annual Vijay Awards a grand success". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.
  2. "அட்லீ: வெறும் 5 படங்களில் உச்சம் தொட்ட இவர் யார்?", BBC News தமிழ், 2023-09-12, பார்க்கப்பட்ட நாள் 2024-05-11

புற இணைப்புகள்

Mlogo.png
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/index.php?title=அட்லீ&oldid=20753" இருந்து மீள்விக்கப்பட்டது