சாய் தீனா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சாய் தீனா
பிறப்புஎம். ஜி. சாய் தீனா
மற்ற பெயர்கள்தீனா, பாக்சர் தீனா, ஸ்டண்ட் தீனா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்போது வரை

சாய் தீனா (Sai Dheena) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2004 முதல் தமிழ் படங்களில் நடித்துவருகிறார்.[1][2] இவர் திமிரு புடிச்சவன் (2018), வாண்டு (2019) ஆகிய படங்களில் எதிர்நாயகன் பாத்திரத்தில் நடித்தார்.[3][4]

தொழில்

சாய் தீனா ஒரு விளம்பரப்பலகை கலைஞராக பணியாற்றினார். படங்களில் துணை வேடங்களில் நடித்த இவர் பின்னர் அடியாள் வேடங்களில் நடித்தார்.[5] கமல்ஹாசனின் விருமாண்டி (2004) திரைப்படத்தில் அடியாள் பாத்திரத்தில் நடிக்க வந்த இவரை கமல்ஹாசன் சிறை வார்டனாக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு இவர் ஷங்கரின் எந்திரன் (2010), அட்லீயில் தெறி (2016), வெற்றிமாறனின் வட சென்னை (2018) உள்ளிட்ட படங்களில் நடித்தார்.[2][6] திமிரு புடிச்சவன் (2018) படத்ததில் எதிர்நாயபனாக நடித்தார்.[7] நியூ இந்தியன் எக்ஸ்பிரசில் சாகா (2019) திரைப்படம் குறித்து எழுதிய ஒர, விமர்சகர் "அவர் இந்த பாத்திரத்தில் மிகச்சிறப்பாகவும், தீவிரத்துடனும் நடித்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை

காதல் (2004) படத்தில் நடித்த விருச்சககாந்த்த் சென்னையில் உள்ள கோயில்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் 2017 இல், அவருக்கு பண உதவி செய்ததற்காக தீனா ஊடகங்க கவனம் பெற்றார். தீனா, நடிகர்கள் அபிசரவணன், மோகன் ஆகியோருடன் சேர்ந்து விருச்சக்காந்துக்கு உதவினார்.[8] கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது, தீனா 250 குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கொடுத்து உதவியது செய்தியானது.[9]

திரைப்படவியல்

  • குறிப்புகள் ஏதும் குறிக்கப்படாவிடாத, எல்லா படங்களும் தமிழ் படங்களாகும்.
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2004 விருமாண்டி சிறை வார்டன்
2006 புதுப்பேட்டை அன்புவின் உதவியாளர்
2010 எந்திரன்
கற்றது களவு பொட்டு
ஆரண்ய காண்டம் கஜபதி
2014 பர்மா தரகர் ரவி
2015 கொம்பன் சந்தனக்கலை
இன்று நேற்று நாளை மார்த்தண்டத்தின் அடியாள்
கிருமி சங்கர்
வாலு தீனா
பூலோகம்
2016 ஜில்.ஜங்.ஜக் அட்டாக் ஆல்பர்ட் [10]
கணிதன் பாய்
தேறி ரோகு (புலிப்பு)
2017 மாநகரம் பி. கே. பாண்டியனின் அடியாள்
தேரு நாய்கள்
ஹரஹர மஹாதேவகி
மெர்சல் கைதி
கொடிவீரன் காவல்துறை அதிகாரி
மாயவன் தீனா
2018 மன்னர் வகையறா
பக்கா
செயல் சேவா
அண்ணனுக்கு ஜே செல்வா
வட சென்னை "ஜாவா" பழனி [11]
திமிரு புடிச்சவன் மீசை பத்மா
துப்பாக்கி முனை பிரம்மராஜாவின் அடியாள்
2019 வாண்டு தீனா
சகா சிறை வார்டன்
பிகில் தீனா
2020 பல்லு படாம பாத்துக்க
2021 மாஸ்டர் சிறார் பள்ளி வார்டன்
கபடதாரி மெக்கானிக் பாபு
ரிபப்லிக் தெலுங்கு படம்
கால் டாக்சி குற்றவாளி

குறிப்புகள்

 

  1. Karikalan, R. Senthil. "'அவங்க ஏமாத்திட்டாங்க... அதான் ஜெயிச்சேன்..!' - 'ஸ்டன்ட்' தீனாவின் தன்னம்பிக்கை" (in ta). https://www.vikatan.com/oddities/miscellaneous/152883-story-about-actor-stunt-dheenas-fitness-secret. 
  2. 2.0 2.1 "Sai Dheena: அனாதையாக இருந்த எங்களுக்கு வாழ்வு கொடுத்தார் விஜய்: வில்லன் நடிகர்!" (in ta). https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-sai-dheena-talks-about-thalapathy-vijays-helping-mind/articleshow/71011196.cms. 
  3. S, Srivatsan (16 November 2018). "'Thimiru Pudichavan' review: a tedious and almost forgettable film". https://www.thehindu.com/entertainment/movies/thimiru-pudichavan-review-a-tedious-and-almost-forgettable-film/article25518762.ece. 
  4. Subramanian, Anupama (26 January 2019). "A film on street fights". https://www.deccanchronicle.com/entertainment/kollywood/260119/a-film-on-street-fights.html. 
  5. "How to make Simbu angry? - Stunt Dheena's Exclusive interview" (in ta). 26 October 2016. https://www.youtube.com/watch?v=fGYLtD_EMTk. 
  6. "അന്ന് ആ പെണ്‍കുട്ടി പ്രണയാഭ്യര്‍ഥന നിരസിച്ചതിനാല്‍ ഇന്ന് ഞാനൊരു നടനായി" (in Malayalam). https://www.mathrubhumi.com/movies-music/news/love-failure-helped-actor-sai-dheena-to-become-an-actor-vada-chennai-theri-villain-1.3668410. 
  7. Subramanian, Anupama (17 November 2018). "Thimiru Pudichavan movie review: Could be an engaging thriller, if more thoughtful". https://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/171118/thimiru-pudichavan-movie-review-could-be-an-engaging-thriller-if-mor.html. 
  8. "பிச்சை எடுத்த காமெடியனுக்கு உதவி செய்து ஹீரோவாக உயர்ந்த வில்லன்! - Samayam Tamil" (in ta). 1 July 2017. https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-sai-dheena-helps-to-comedian-viruchagakanth/articleshow/59399322.cms. 
  9. "250 குடும்பங்களுக்கு உதவிய நடிகர் சாய் தீனா" (in ta). 1 April 2020. https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/04/01151231/1383684/Sai-deena-helps-250-families.vpf. 
  10. Subramanian, Anupama (13 February 2016). "Jil Jung Juk movie review: Enjoyable only in parts". https://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/130216/jil-jung-juk-movie-review-enjoyable-only-in-parts.html. 
  11. Subramanian, Anupama (19 October 2018). "Vada Chennai movie review: Dhanush shines in an author-backed role". https://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/191018/vada-chennai-movie-review-dhanush-shines-in-an-author-backed-role.html. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சாய்_தீனா&oldid=21752" இருந்து மீள்விக்கப்பட்டது