கிருமி (தமிழ்த் திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கிருமி
இயக்கம்அனுசரண்
தயாரிப்பு
  • கே. ஜெயராம்
  • எல்/ பிரிதிவிராஜ்
  • எம். ஜெயராமன்
  • எஸ். ராஜேந்திரன்
கதை
இசைகே
நடிப்பு
ஒளிப்பதிவுஅருள் வின்சென்ட்
படத்தொகுப்புஅனுசரண்
கலையகம்ஜேபிஆர் பிலிம்ஸ்[1]
விநியோகம்எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்[2]
வெளியீடு24 செப்டம்பர் 2015 (2015-09-24)
ஓட்டம்104 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கிருமி (Kirumi) 2015இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். படத்தொகுப்பு மற்றும் இயக்கியவர் அனுசரண். இது இவருக்கு அறிமுகப்படமாகும்.[3][4] எம்.மணிகண்டனுடன் இப்படத்தை எழுதியுள்ளார். ஜே. பி. ஆர் பிலிம்ஸ் தயாரித்திருந்தனர். கதிர் (நடிகர்) மற்றும் ரேஷ்மி மேனன் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கே இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவை அருள் வின்சென்ட் மேற்கொண்டுள்ளார். 2015 செப்டம்பர் 24ந் தேதி வெளியிடப்பட்டது.

கதைச்சுருக்கம்

கதீர் தனது தகுதிக்கேற்ப வேலை தேடி வரும் ஓர் இளைஞன். திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் இவன் நல்ல ஒரு வேலைக்காக காத்திருக்கிறான். இதற்கிடையில், அவரது மனைவி அனிதா குடும்பத்தின் செலவுகளை கவனித்து வருகிறார். அவனது தந்தையை போலவே பக்கத்து வீட்டிலிருக்கும் காவலரான பிரபாகர் என்பவரிடம் நட்புடன் உள்ளான். அவர் மூலம் காவல்துறைக்கு தகவல் அளிக்கும் பணிக்குச் செல்லுகிறான். இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சூதாட்ட விடுதி உரிமையாளரைப் பற்றி தகவல் அளிக்கிறான். ஒரு இரவு, பிரபாகர் சில குண்டர்களால் கொல்லப்படுகிறார், கதிர் இதை கண்டு பயப்படுகிறான். இதன் பிறகு நடக்கும் ஒரு சில சம்பவங்களால், தனது அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் விலகி இறுதியில், அவனது மனைவியின் ஆடைத் தொழிற்சாலையில் குறைந்த ஊதியம் பெறும் பணியில் சேர்கிறான். ஆனால் சரியான பாதையை தேர்ந்தெடுத்து ஒரு நேர்மையான வாழ்வை வாழ்கிறான்.

நடிப்பு

கதிராக கதிர் (நடிகர்)
அனிதாவாக ரேஷ்மி மேனன்
பிரபாகராக சார்லி
யோகி பாபு
மதியரசுவாக ஜி. மாரிமுத்து
தென்னவன்
வனிதா கிருஷ்ணசந்திரன்
டேவிட் சாலமன் ராஜா
பாக்சர் தீனா
சத்யா
தமிழ்ச்செல்வி
தஞ்சை மகேந்திரன்
விஜயமுத்து
வினோத்
சூப்பர்குட் சுப்ரமணி
மோகன்
ரவி வெங்கட்ராமன்
ஜெமினி மணி

தயாரிப்பு

ஆஸ்திரேலியாவில் பல குறும்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இசைக் காணொளிகளை எடுத்துவரும் அனுசரண் தனது சகோதரியின் திருமணத்திற்கு சென்னை வரும் போது இவரது நண்பர் காக்கா முட்டை (திரைப்படம்) பட இயக்குனர் மணிகண்டன் மற்றும் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் ஆகிய இருவரும் சேர்ந்து "கிருமி" யின் கதையை கேட்டு இவரையே இயக்க ஊக்கப்படுத்தியுள்ளனர்.[5] மணிகண்டன் இவரை தயாரிப்பாளர் ஜெயராமனிடம் அறிமுகப்படுத்த, அவரும் இக்கதையைக் கேட்டு விரும்பி தயாரித்துள்ளார்..[6] 90 சதவிகித இப்படத்தின் படபிடிப்பு புதுச்சேரி மற்றும் கோவளம் போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இதன் இயக்குனர் அனுசரண் தி நியூ இந்தியன் எக்சுபிரசு க்கு ஒரு பேட்டியில் ஆறு மாத காலத்தில் இதன் படபிடிப்பு முடிவடைந்தெனெ கூறுகிறார்"[7][8]

ஒலித்தொகுப்பு

கிருமி
Soundtrack
வெளியீடு22 ஜூலை 2015
இசைப் பாணிFeature film soundtrack
நீளம்21:08
மொழிTamil
இசைத்தட்டு நிறுவனம்Think Music India
இசைத் தயாரிப்பாளர்K
K காலவரிசை
Kallappadam
(2015)
கிருமி
(2015)
Kammatipaadam
(2016)

இப்படத்திற்கு இசையமைப்பாளர் K இசையமைத்திருந்தார். ஞானகரவேல் என்பவர் இதன் அனைத்துப் பாடல்களையும் எழுத ஜி. வி. பிரகாஷ் குமார், கானா பாலா, யாஸின் நசீர், ஜனனி. எஸ். வி. மற்றும் கே ஆகியோர் பாடியுள்ளனர்.[9]

பாடல் விவரம்
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "ஓசி சோறு"  கானா பாலா 2:38
2. "நாணல் போல"  ஜனனி. எச். வி. , கே 2:52
3. "நா பார்க்க"  ஜி. வி. பிரகாஷ் குமார் 3:35
4. "வால் வீசும் வாழ்க்கை"  கானா பாலா 4:55
5. "பூம் பூம் பூதம்"  யாஸின் நசீர் 4:00
6. "ஒராயிரம் ஓட்டைகள்"  கே 3:08

வெளியீடு

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் சார்பில் இந்தியாவெங்கும் 2015 செப்டம்பரில் வெளியிடப்பட்டது. அன்று தியாகத் திருநாள் திருவிழா ஆகும்[10] 19வது டொரன்டோ ரீல் ஏசியன் இன்டர்னேஷனல் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[11]

விமர்சனங்கள்

பரத்வாஜ் ரங்கன் என்பவர் தி இந்து பத்திரிக்கையில் அனுசரணை நன்கு பாராட்டி எழுதியிருந்தார்.[12] தி டைம்ஸ் ஆஃப் இந்தியா குற்றம் நடந்த பின்னணியில் எடுக்கப்பட்ட மற்ற படங்களிலுருந்து இது விலகி நிற்கிறது, அதில் குறைகள் குறைவாகவே உள்ளது. மற்றும் வேகமாகவும், புத்துணர்ச்சி மாற்றம் பல சுவாரசியமான விஷயங்கள் போன்ற இப்படம் வைத்திருக்கிறது என எழுதியது [13][14][15]

மேற்கோள்கள்

  1. "Kirumi (aka) Kirumi photos stills & images". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-19.
  2. "TOP 10 ALBUMS #10.TOP 10 ALBUMS". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-19.
  3. Raghavan, Nikhil (23 January 2015). "Etcetera". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/etcetera/article6812700.ece. பார்த்த நாள்: 10 September 2015t. 
  4. "Kirumi Tamil Movie - Preview, Trailers, Gallery, Review, Events, Synopsis". Now Running. 5 September 2015. Archived from the original on 29 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 27 ஜனவரி 2019. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. "'I Aim to Make Simple Movies'". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 2014-09-29. http://www.newindianexpress.com/entertainment/tamil/I-Aim-to-Make-Simple-Movies/2014/09/29/article2453724.ece. பார்த்த நாள்: 2016-12-19. 
  6. "Rajinikanth's 'super' advice to his former assistant". Deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-19.
  7. தி நியூ இந்தியன் எக்சுபிரசு staff (29 September 2014). "Anucharan: 'Kirumi' is realistic drama with Psychological Thriller Elements". India West இம் மூலத்தில் இருந்து 30 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140930171150/http://www.indiawest.com/entertainment/south_indian/anucharan-kirumi-is-realistic-drama-with-psychological-thriller-elements/article_d3529f1e-4839-11e4-aff0-77b6e8dabcac.html. பார்த்த நாள்: 10 September 2014. 
  8. Express features staff (15 January 2015). "Kirumi Shooting Complete". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/entertainment/tamil/Kirumi-Shooting-Complete/2015/01/15/article2619672.ece. பார்த்த நாள்: 10 September 2015. 
  9. Srinivasa, Karthik (1 August 2015). "'Naanal Poovaai', Kirumi (Tamil)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/hitman/article7489162.ece. பார்த்த நாள்: 10 September 2015. 
  10. "Cost-cutting in Kollywood". தி இந்து. 2015-09-26. http://www.thehindu.com/features/cinema/costcutting-in-kollywood-the-financial-crisis-has-necessitated-outofthebox-thinking/article7692442.ece. பார்த்த நாள்: 2016-12-19. 
  11. "Kirumi starring Kathir to have international premiere in Toronto!". Behindwoods.com. 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2016-12-19.
  12. Baradwaj Rangan. "Kirumi: A superb, low-key character study masquerading as a thriller". The Hindu.
  13. "Movie Reviews". The Times of India.
  14. "Movie Review: Kirumi". Bangalore Mirror.
  15. Moviebuzz. "Kirumi Review". Sify.com. Archived from the original on 2015-09-26. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.

வெளிப்புற இணைப்பு