கோவை - 59
| கோவை - 59 CO - 59 |
|---|
| வேளாண் பெயர் |
| CO - 59 |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| வெள்ளைப் பொன்னி / APO[1] |
| காலம் |
| 130 - 135 நாட்கள் |
| மகசூல் |
| 5867 கிலோ / எக்டேர்[1] |
| வெளியீடு |
| 2025[2] |
| வெளியீட்டு நிறுவனம் |
| TNAU, கோவை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
கோவை - 59 (CO - 59) என்பது, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி இரகத்தையும், APO என்ற நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் நெல் வகையாகும். அதிக மகசூல் தரும் நெல் இரகமாக கருதப்படும் இது, வெள்ளை முதுகு கொண்ட தாவர தத்துப்பூச்சி, இலை மடிப்பான் மற்றும் குலைநோய்க்கும் மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.[1]
வெளியீடு
தமிழ்நாட்டின் கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 2025 ஆம் ஆண்டு, இந்நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]
மகசூல்
130 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய கோ 59 நெல் வகை, சராசரியாக தானிய மகசூல், ஒரு எக்டேருக்கு 5867 கிலோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது (இது BPT 5204 நெல் இரக்கத்தை விட 15 விழுக்காடு கூடுதலாகும். மேலும் சம்பா, பின் சம்பா, மற்றும் தாளடி போன்ற மத்திய, மற்றும் நீண்டகாலப் பருவங்களில் பயிரிட ஏற்ற நெல் இரகமாக கூறப்படுகிறது.[1]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Tamil Nadu Agricultural University New Crop Varieties 2025" (PDF). www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © 2025. Retrieved 2025-06-24.
- ↑ 2.0 2.1 "TNAU releases 19 new crop varieties for 2025". www.thehindu.com (ஆங்கிலம்) -© February 07, 2025. Retrieved 2025-06-24.