அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில்
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற அட்டபுயக்கரம் | |
---|---|
படிமம்:Ashtabhujakaram (8).jpg | |
புவியியல் ஆள்கூற்று: | 12°49′22″N 79°42′39″E / 12.822681°N 79.710813°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | அஷ்டபுஜகரம், அஷ்டபுயகரம் |
பெயர்: | அட்டபுயக்கரம் |
அமைவிடம் | |
ஊர்: | காஞ்சிபுரம் ஹாட்சன் பேட்டை அருகில் |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஆதிகேசவப் பெருமாள் (நின்ற திருக்கோலம்) |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் |
மங்களாசாசனம் செய்தவர்கள்: | திருமங்கையாழ்வார் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கல்வெட்டுகள்: | உண்டு |
அட்டபுயக்கரம்அல்லது அஷ்டபுஜகரம் அல்லது திருவட்டபுயங்கம் [1] என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[2] திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது.ரங்கசாமி குளத்திற்கு தெற்கோ அமைந்துள்ளது. ஹாட்சன் பேட்டை என்னுமிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 103 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°49'21.7"N, 79°42'38.9"E (அதாவது, 12.822681°N, 79.710813°E) ஆகும்.
மரபு வரலாறு
ஒரு சமயம் பிரம்மன் செய்யும் யாகத்தை நிலைநிறுத்த திருமால் உதவி புரிந்தபோது யாகத்தைத் தடுக்க எண்ணிய கலைமகள் காளியைப் படைத்து அவளுடன் கொடிய அரக்கர்களை அனுப்பி அதைக் கலைக்க முற்பட்டாள். திருமால் எட்டு கரங்களுடன் தோன்றி காளியை அடக்கி அரக்கர்களை அழித்தார். எனவே இறைவன் அட்டபுயக்கரத்தோன் ஆனார். இவ்விடத்தில் ஆதிகேசவப் பெருமாள் என்னும் பெயரில் பெருமாள் எழுந்தருளியிருந்ததாகவும் அவரே அட்ட புயக்கரமாக வந்தாரென்றும் ஒரு வரலாறும் உண்டு. மேலும் இத்தலத்திலே தான் கஜேந்திரனுக்கு முக்தி அளிக்க எட்டுகைகளுடன் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. வைரமேகன் என்னும் தொண்டை நாட்டு மன்னன் இப்பெருமாளுக்கு தொண்டு புரியும் பொருட்டு தற்போதுள்ள வடிவமைப்பில் இக்கோவிலைக்கட்டினான் என்றும் அறியமுடிகிறது.[3]
மூலவர்
மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் வலப்புறம் நான்கு கைகளுடனும் இடப்புறம் நான்கு கைகளுடனும் காட்சி தருகிறார். ஆதிகேசவப் பெருமாள், கஜேந்திரவரதன் என்பன இறைவனின் பெயர்கள் திருமங்கையாழ்வாரின் பாடல் பெற்ற பிறகு அட்டபுயக்கரத்தான் ஆனார்.
இறைவி
அலர்மேல் மங்கை, பத்மாசனி
தீர்த்தம்
கஜேந்திர புஷ்கரணி
விமானம்
இக்கோயிலின் விமானம் உத்திரகோட்டி விமானம், சக்ராக்ருதி விமானமென்றும், வியோமாகர விமானமென்றும் அழைக்கப்படுகிறது.
சிறப்புகள்
108 வைணவத் திருத்தலங்களில் இங்கு மட்டுமே திருமால் எட்டுக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். வலப்புறமுள்ள கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு ஆகியவற்றையும் இடப்புறாம் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் ஆகியவற்றையும் தாங்கியுள்ளார். இத்தலத்தின் தலவரலாறு படி சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று பெருமாள் காளியை இவ்விடத்தே அடக்கினார். இதற்குச் சான்றாக இச்சன்னதியின் அருகே கருங்காளியம்மன் கோவிலொன்றுள்ளது. தொண்டை மண்டலத்து வைணவத் திருத்தலங்களில் இங்கு மட்டுமே பரமபத வாயில் உள்ளது. திருமங்கையாழ்வாராலும், பேயாழ்வாராலும் பாடல் பெற்றது இத்தலம். மணவாள மாமுனிகளும், சுவாமி தேசிகனும் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.
மேற்கோள்கள்
- ↑ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி, பாடல் 75
- ↑ 108 Vaishnavite Divya Desams: Divya desams in Pandya Nadu. M. S. Ramesh, Tirumalai-Tirupati Devasthanam.
- ↑ ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link)