திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில்
திருவெள்ளக்குளம் | |
---|---|
படிமம்:Annan koil.jpeg | |
ஆள்கூறுகள்: | 11°10′39″N 79°46′45″E / 11.17750°N 79.77917°ECoordinates: 11°10′39″N 79°46′45″E / 11.17750°N 79.77917°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | அண்ணன் கோயில் |
பெயர்: | திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
அமைவு: | திருநாங்கூருக்கு அருகில் |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கட்டிடக்கலை |
திருவெள்ளக்குளம் அல்லது அண்ணன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் சீர்காழி - தரங்கம்பாடிச் சாலையில் அமைந்துள்ளது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று.
பெயர் வரலாறு
திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணி தீர்த்தத்தால் உண்டாயிற்று. வடமொழியில் ஸ்வேதம் என்றால் வெண்மை. எனவே ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக்குளமாகி, வெள்ளக்குளமாயிற்று.[1] திருமங்கையாழ்வார் இத்தலத்து இறைவனை அண்ணா என அழைத்துப் பாடியமையால் இது அண்ணன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
சிறப்பு
திருமங்கையாழ்வாரால் மட்டும் பத்துப் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். பிள்ளைப் பெருமாளையங்காரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார். அழகிய மணவாள மாமுனிக்கு இறைவன் இங்கு காட்சி கொடுத்ததாக நம்பிக்கை. 108 வைணவத் திருத்தலங்களில் திருமலையில் வழங்கப்படும் இறைவனின் அதே பெயர்களால் (ஸ்ரீநிவாசன் - அலர்மேல் மங்கைத் தாயார்) வழங்கப்படும் ஒரே தலம் இது ஒன்றே ஆகும். திருவேங்கடத்தானுக்கு வெள்ளக்குளத்தான் அண்ணன் என்பது நம்பிக்கையாதலால் திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதலை இங்கே செலுத்துவது ஒரு மரபாகவே விளங்கி வருகிறது. எனவே இதனைத் தென்திருப்பதி என்றும் அழைப்பர். திருமங்கையாழ்வார் மணந்த குமுதவல்லியின் அவதாரத் தலமும் நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கையாழ்வாரை ஆழ்வாராக மாற்றிய தலம் இதுவாகும். ஒரு மங்கையால் ஆழ்வாராக மாறினமையால் மங்கையாழ்வாராகி திருமங்கை ஆழ்வாரானார்.[1]
விவரம் | பெயர் |
---|---|
இறைவன் | கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அண்ணன் பெருமாள் எனப்படும் ஸ்ரீநிவாசன் |
இறைவி | அலர்மேல் மங்கை |
தீர்த்தம் | ஸ்வேத புஷ்கரணி |
விமானம் | தத்வத் யோதக விமானம் |
படத்தொகுப்பு
- Annan perumal.jpg
உற்சவர்
- Madava Battachar Annan KOil.jpg
அண்ணன் பெருமாள்
- Annan KOil.jpg
கருடசேவை