புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அருள்மிகு வல்வில்ராமசாமி கோவில்
கோயில் இராச கோபுரம்
கோயில் இராச கோபுரம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:புள்ளபூதங்குடி, பாபநாசம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பாபநாசம்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:வல்வில்ராமர்
தாயார்:பொற்றாமறையாள்
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனி உத்திரம் பெருதிருவிழா, இராமநவமி
வரலாறு
கட்டிய நாள்:ஆறாம் நூற்றாண்டு[சான்று தேவை]

திருபுள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில் என்பது தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், புள்ளபூதங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1] இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். சோழ நாட்டு பத்தாவது திருத்தலம். திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்டது. சோழர் காலத்தில் கட்டிய கோவிலாகும்.[2]

அமைவிடம்

இது குடந்தையிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது. இது கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் சுவாமிமலைக்கு அருகில் உள்ளது.

வரலாறு

இக்கோயில் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

தல வரலாறு

இக்கோவிலில் வல்வில் ராமன் (சக்ரவர்த்திதிருமகன் ) என்ற பெயரிலும் தாயார் பொற்றாமறையாள் என்ற பெயரிலும் எழுந்தருளியுள்ளனர். இறைவன் வேறு எங்கும் காண முடியாத நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரதாரியாக சயன திருக்கோலத்தில் சோபன விமானத்தின் கீழ் ராமபிரான் காட்சி அளிக்கிறார். இராமாயண காவியத்தில் வரும் ஜடாயு மோட்சம் பெற்ற தலம். புள் என்றால் பறவை. பூதம் என்றால் உடல். உயிர் நீத்த ஜடாயுவிற்கு இராமபிரானே முறைப்படி ஈமகாரியங்கள் செய்தார். எனவே இவ்வூர் புள்ளபூதங்குடி ஆயிற்று. கோதண்டத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டு பெரியபிராட்டியை பிரிந்த நிலையில் பள்ளி கொண்டு சேவை சாதிக்கிறார். கம்ப இராமாயண கதையின் படி குடிலுக்குள் இருந்த சீதாதேவியை இராவணன் குடிலுடன் பெயர்த்து செல்வதை கண்ட ஜடாயு சீதாதேவியை மீட்க வான வெளியில் கடும் சண்டை நடந்தது. தனக்கிருக்கும் இறக்கைகளை கொண்டு தானே பறந்து பறந்து சண்டை செய்கிறாய் என இறக்கையை வெட்ட இராமா இராமா எனக் கூறிக்கொண்டே காட்டுக்குள் விழுந்தார் ஜடாயு. சீதையை தேடிய இராமன் இலட்சுமணனிடம் இராவணன் சீதையை தென்திசை நோக்கி தூக்கி செல்வதை கூறி உயிர் நீத்தார். ஜடாயு இராமனின் தந்தை தசரதனுக்கு உற்ற நண்பன். நட்பின்படி பார்த்தால் பெரிய தந்தை. எனவே கரும காரியங்களை செய்து கிழக்கே திருமுகம் காட்டி சயனம் கொண்டார். ஜடாயு மோட்சம் பெற்ற இடம் இதுவே. க்ருத்ர ராஜன் எனும் மன்னன் எம்பெருமானை நோக்கி கடும் தவம் செய்தான். வல்வில் ராமனாக புஜங்க சயனத்தில் பெருமானை தருசித்தான். எனவே இங்குள்ள ஒரு தீர்த்தம் க்ருத்ர தீர்த்தம் ஆயிற்று.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் வல்வில்ராமர், பொற்றாமறையாள் சன்னதிகளும், யோகநரசிம்மர், ஆழ்வார்கள், இராமனுஜர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் பெருதிருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் இராமநவமி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.