அஜய் ராஜ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அஜய் ராஜ்
இயற்பெயர்/
அறியும் பெயர்
அஜய் ராஜ்
பிறப்புபெயர் நாகராஜன்
பிறந்ததிகதி 21 பெப்ரவரி 1982
பிறந்தஇடம் சென்னை
பணி நடிகர், இயக்குநர், எழுத்தாளர், நடன இயக்குநர்
செயற்பட்ட ஆண்டுகள் 1998–தற்போது வரை
செயற்பட்ட ஆண்டுகள் 1998–தற்போது வரை

அஜய் ராஜ் (Ajay Raj) இந்திய நடிகராகவும் நடன இயக்குநராகவும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். நடன இயக்குநராக பணிபுரியும் போது, அஜய் அகத்தியனின் செல்வம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். சென்னை 600028 (2007) இல் நடிப்பதற்கு முன்பு, இயக்குநர் வெங்கட் பிரபுவின் குழுவினருடன் தொடர்புடைய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார்.[1][2][3]

தொழில்

நடன இயக்குநராக பணிபுரியும் போது, அஜய் அகத்தியனின் செல்வம் (2005) திரைப்படத்தில் நந்தா நடித்த முக்கியக் கதாபாத்திரத்தின் நண்பராக நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானார். வெங்கட் பிரபுவுடனான அவரது நட்பின் காரணமாக, இவர் சென்னை 600028 (2007) இல் சார்க்ஸ் அணிக்கான துடுப்பாட்ட விளையாட்டின் போது அவசர ஊர்து ஓட்டுநராக நடித்தார். பின்னர் இவர் இயக்குநர் வெங்கட் பிரபுவின் குழுவினருடன் தொடர்புடைய சரோஜா (2008), தோழா (2008) போன்றத் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார். அஜய் தியாகராஜன் குமாரராஜாவின் நியோ-நோயர் கேங்ஸ்டர் திரைப்படமான ஆரண்ய காண்டம் (2010) இல் ஜாக்கி செராப் நடித்த கேங்க்ஸ்டரின் உதவியாளராக ஒரு துணை வேடத்தில் நடித்தார்.[4][5][6]

2016 இல், நடிகர் நிதின் சத்யா தயாரிப்பாளராகவிருந்த முதற்படத்தில் அஜய் ராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று அறிவித்தார்.[7]

திரைப்படவியல்

நடிகராக

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2002 ஜங்சன் நடனமாடுபவர் சிறப்புத் தோற்றம்
2005 செல்வம் சுப்ரமணியம்
2007 சென்னை 600028 ஏழுமலை
2008 வெள்ளித்திரை திலீப்காந்தின் படக்குழு உறுப்பினர்
2008 தோழா வேலு
2008 சரோஜா விருந்தினர் தோற்றம்
2010 கோவா விருந்தினர் தோற்றம்
2011 ஆரண்ய காண்டம் சிட்டு
2014 வடகறி தயாளன்
2014 தெரியாம உன்ன காதலிச்சிட்டேன் சிறப்புத் தோற்றம்
2016 சென்னை 600028 II ஏழுமலை
2019 குப்பத்து ராஜா
2024 தளபதி 68 [8]

நடன இயக்குநராக

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அஜய்_ராஜ்&oldid=21452" இருந்து மீள்விக்கப்பட்டது