மலேசிய மாநிலங்களின் தமிழ்ப்பள்ளிகள்
2020-ஆம் ஆண்டு சனவரி மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 527 தமிழ் தொடக்கப் பள்ளிகள் செயல்பாட்டில் இருந்தன. அந்தப் பள்ளிகளில் 80,569 மாணவர்கள் கல்வி பயின்றார்கள்.[1] இந்தப் பள்ளிகளில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த இரு பள்ளிகள் மூடப்பட்டு இட மாற்ற பட்டியலில் உள்ளன.
2020-ஆம் ஆண்டு சூன் மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 528 தமிழ் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 79,309 மாணவர்கள் பயில்கின்றனர்.[2]
2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 528 தமிழ் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 77,693 மாணவர்கள் பயில்கின்றனர். 2022-ஆம் ஆண்டிற்கும் 2023-ஆம் ஆண்டிற்கும் இடையில், ஈராண்டுகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை 1616-ஆக குறைந்து விட்டது. ஒவ்வோர் ஆண்டும் தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.[3]
மலேசியாவில் இட மாற்றத்திற்குக் காத்து இருக்கும் தமிழ்ப்பள்ளிகள் (2022-ஆம் ஆண்டு)
- புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (சிலாங்கூர்) (SJKT Ladang Bukit Ijok, Selangor).
- மின்யாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (சிலாங்கூர்) (SJKT Ladang Minyak, Selangor).
மலேசியாவில் புதிதாகத் திறக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகள் (2022-ஆம் ஆண்டு)
- தாமான் கெலாடி தமிழ்ப்பள்ளி (கெடா) (SJKT Taman Keladi, Kedah).
- பண்டார் சிறீ ஆலாம் தமிழ்ப்பள்ளி (ஜொகூர்) (SJKT Bandar Seri Alam, Johor).
மலேசியாவில் மூடப்பட்ட தமிழ்ப்பள்ளிகள் (2022-ஆம் ஆண்டு)[4]
- சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பேராக்) (SJKT Ladang Sungai Timah, Perak).
- பெடனோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (கெடா) (SJKT Ladang Badenoch, Kedah).
புள்ளிவிவரங்கள்
|
|
|
ஆண்டு | மாணவர்கள் |
---|---|
சனவரி 2018 [5] | 81,488
|
ஏப்ரல் 2018 [6] | 81,635
|
சனவரி 2019 [7] | 81,321
|
மே 2019 [8] | 81,447
|
சனவரி 2020 [1] | 80,569
|
சூன் 2020 [9] | 80,743
|
சூன் 2021[10] | 80,569
|
சனவரி 2021 | 80,434
|
சூன் 2022 [4] | 79,309
|
செப்டம்பர் 2023 [3] | 77,693
|
மலேசிய மாநிலங்களின் தமிழ்ப்பள்ளிகள் - 2020
மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் - 2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்
மாநிலம் கூட்டரசுப் பிரதேசம் |
மாணவர் சனவரி 2020 |
பள்ளிகள் | ஆசிரியர்கள் | மாணவர் (சனவரி 2019) |
Δ% |
---|---|---|---|---|---|
ஜொகூர் | 12,335 | 70 | 1,145 | 12,165 | 1.4 |
கெடா | 7,518 | 59+1 | 899 | 7,783 | 3.5 |
கிளாந்தான் | 36 | 1 | 9 | 8 | 28.6 |
மலாக்கா | 2,375 | 21 | 332 | 2,436 | 2.6 |
நெகிரி செம்பிலான் | 8,648 | 61 | 1,097 | 8,754 | 1.2 |
பகாங் | 2,599 | 37 | 422 | 2,641 | 1.6 |
பேராக் | 11,645 | 134 | 1,679 | 11,884 | 2.1 |
பெர்லிஸ் | 67 | 1 | 11 | 65 | 3.1 |
பினாங்கு | 5,397 | 28 | 554 | 5,478 | 1.5 |
சிலாங்கூர் | 26,506 | 97+2 | 2,155 | 26,591 | 0.3 |
கோலாலம்பூர் | 3,443 | 15 | 335 | 3,496 | 1.5 |
மொத்தம் | 80,569 | 527 | 8,638 | 81,321 | 0.9 |
மலேசிய மாநிலங்களின் தமிழ்ப்பள்ளிகள் - 2022
மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் - 2022-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்[11]
மாநிலம் கூட்டரசுப் பிரதேசம் |
மாணவர் சூன் 2022[4] |
பள்ளிகள் | ஆசிரியர்கள் | மாணவர் சூன் 2021[10] |
Δ% |
---|---|---|---|---|---|
ஜொகூர் | 11,951 | 71 | 1,145 | 12,183 | 1.9 |
கெடா | 7,095 | 59+1 | 899 | 7,379 | 3.8 |
கிளாந்தான் | 36 | 1 | 9 | 36 | 0.0 |
மலாக்கா | 2,319 | 21 | 332 | 2,304 | 0.7 |
நெகிரி செம்பிலான் | 8,744 | 61 | 1,097 | 8,732 | 0.1 |
பகாங் | 2,531 | 37 | 422 | 2,559 | 1.1 |
பேராக் | 11,231 | 133+1 | 1,679 | 11,541 | 2.7 |
பெர்லிஸ் | 66 | 1 | 11 | 73 | 9.6 |
பினாங்கு | 5,382 | 28 | 554 | 5,437 | 1.0 |
சிலாங்கூர் | 26,393 | 97+2 | 2,155 | 26,664 | 1.0 |
கோலாலம்பூர் | 3,561 | 15 | 335 | 3,526 | 1.0 |
மொத்தம் | 79,309 | 524+4 | 8,638 | 80,434 | 1.4 |
மலேசிய மாநிலங்கள் மற்றும் மலேசியக் கூட்டரசுப் பிரதேசங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் விவரங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவற்றுள் திரங்கானு, சபா, சரவாக் மாநிலங்களிலும்; லாபுவான்; புத்திராஜெயா கூட்டரசுப் பிரதேசங்களிலும் தற்போது தமிழ்ப்பள்ளிகள் இல்லை.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/3295-senarai-sekolah-rendah-dan-menengah-jan-2020/file. பார்த்த நாள்: 2020-02-19.
- ↑ "Perak school ceases operations due to lack of pupils" (in en). The Star. 2020-10-24. https://www.thestar.com.my/news/nation/2020/10/24/perak-school-ceases-operations-due-to-lack-of-pupils.
- ↑ 3.0 3.1 "SenaraiSekolah_SEP2023". www.moe.gov.my. https://moegovmy-my.sharepoint.com/:x:/g/personal/admindashboardkpm_moe_gov_my/ESgIW2SfgJZKggpUY9-9FL8B7PjwDFKMAEOEg6EUSQsfgw?e=bO2n7p. பார்த்த நாள்: 2023-10-07.
- ↑ 4.0 4.1 4.2 "Senarai Sekolah Rendah dan Menengah 30 Jun 2022". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/5341-senarai-sekolah-rendah-dan-menengah-jun-2022/file. பார்த்த நாள்: 2022-09-02.
- ↑ "Senarai Sekolah 31 Januari 2018". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/566-senarai-sekolah-31-januari-2018/file. பார்த்த நாள்: 2020-02-19.
- ↑ "Senarai Sekolah 30 April 2018". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/565-senarai-sekolah-30-april-2018/file. பார்த்த நாள்: 2020-02-19.
- ↑ "Senarai Sekolah Mengikut Kumpulan Jenis Dan Negeri - Kementerian Pendidikan Malaysia (KPM)". www.moe.gov.my இம் மூலத்தில் இருந்து 2018-07-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180710100827/http://moe.gov.my/index.php/my/statistik-kpm/bilangan-sekolah-mengikut-kumpulan-jenis-dan-negeri. பார்த்த நாள்: 2019-03-09.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah 31 Mei 2019". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/2620-senarai-sekolah-rendah-dan-menengah-31-mei-2019/file. பார்த்த நாள்: 2020-02-19.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah 30 Jun 2020". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/3547-senarai-sekolah-rendah-dan-menengah-jun-2020/file. பார்த்த நாள்: 2020-08-09.
- ↑ 10.0 10.1 "Senarai Sekolah Rendah dan Menengah 30 Jun 2021". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/4808-senarai-sekolah-rendah-dan-menengah-jun-2021/file. பார்த்த நாள்: 2021-12-09.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jun 2022". Kementerian Pendidikan Malaysia. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/5341-senarai-sekolah-rendah-dan-menengah-jun-2022/file. பார்த்த நாள்: 3 December 2023.