மகாமுனி
மகாமுனி (Magamuni) என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் குற்றவியல், பரபரப்பூட்டும் நாடகத் திரைப்படம் ஆகும். சாந்தகுமார் எழுதி இயக்கிய இந்த படத்தில் ஆர்யா இரட்டை வேடங்களில் இந்துஜா ரவிச்சந்திரன், மகிமா நம்பியார் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். காளி வெங்கட், ரோகிணி, ஜெயபிரகாஷ், இளவரசு, அருள்தாஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். எஸ். தமன் இந்த படத்திற்கு இசையமைத்தள்ளார். படத்தொகுப்பை விஜே சாபு ஜோசப் செய்துள்ளார். படத்தின் முதன்மை படப்பிடிப்பு 2018 நவம்பரில் தொடங்கியது. 2019 செப்டம்பர் 6 அன்று தருண் பிக்சர்சால் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து மிகவும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[1][2] மகாமுனி உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.[3]
மகாமுனி | |
---|---|
Theatrical release poster | |
இயக்கம் | சாந்தகுமார் |
தயாரிப்பு | கே. இ. ஞானவேல் ராஜா |
கதை | சாந்தகுமார் |
இசை | தமன் (இசையமைப்பாளர்) |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | அருண் பத்மநாபன் |
படத்தொகுப்பு | வி. ஜே. சாபு ஜோசப் |
கலையகம் | ஸ்டுடியோ கிரீன் |
விநியோகம் | தருன் பிக்சர்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 6, 2019 |
ஓட்டம் | 156 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
இப்படமானது இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே முன்னும் பின்னுமாக பயணிக்கிறது. மகாதேவன் ( ஆர்யா ) சென்னையில் ஒரு வாகன ஓட்டுநர். இவர் முத்துராஜ் (இளவரசு) என்ற ஊழல் அரசியல்வாதியின் குண்டராக பணியாற்றுகிறார். முனிராஜ் (ஆர்யா) சுவாமி விவேகானந்தரின் போதனைகளை ஏற்று, தமிழ் இலக்கிய உலகில் திளைத்து, ஈரோடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழும் ஒரு ஒரு நல்ல சமானியர் மற்றும் இயற்கை விவசாயி. முனி யோகாசனம் செய்து இந்து சமயத்தில் பற்று கொண்டவராக இருக்கும் போது மாகா ஒரு நாத்திகர் என்பது தெளிவாகிறது.
மகா தன் மனைவி விஜி (இந்துஜா ரவிச்சந்திரன்) மற்றும் ஐந்து வயது மகனின் எதிர்காலத்தை நினைக்கிறார். அவர் தன் குற்ற உலகை விட்டு வெளியேறி புதிய வாழ்வை மேற்கொள்ள முயற்சிக்கிறார். மறுபுறம், முனி தனது அன்புத் தாயுடன் (ரோகிணி) மகிழ்ச்சியாக வாழ்கிறார். அவர் ஒரு "நித்ய பிரம்மச்சாரி" ஆக விரும்புகிறார். அதே நேரத்தில், மாணவர்களுக்கு கல்வியை போதிக்கிறார். தீபா (மகிமா நம்பியார்) ஒரு ஊடகவியல் மாணவி மற்றும் ஜெயராமன் (ஜெயப்பிரகாசு) என்ற உள்ளூர் நில உடமையாளரின் மகள். தீபா சாந்தமான குணம் கொண்ட முனியை பார்த்து பிரமிப்பு கொண்டவர். முத்துராஜின் தொழில் எதிரிகளில் ஒருவரான குரு நாராயணன் (அருள்தாஸ்), முத்துராஜால் ஏவி முன்பு செய்யப்பட்ட கொலைக்காக பழிவாங்க முயலும்போது மகாவுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. முத்துராஜ், தன்னையும் அவரது மைத்துனனையும் காப்பாற்றுவதற்றிக் கொள்வதற்காக, காவல் துறையினருடன் இணங்கி, மகாவை கெட்டவனாக்க ஆக்குகிறார். அதே சமயம், ஜெயராமன் தனது மகள் தாழ்த்தப்பட்டவரான முனியுடன் பழகுவதை விரும்பவில்லை. இதனால் முனியை கொல்ல விரும்புகிறார்.
ஜெயராமன் தனது பண்ணைக்கு முனியை வரவழைத்து பாம்புக் கடி மூலம் அவரைக் கொல்ல திட்டமிட்டுகிறார். இருப்பினும், தீபாவால் முனி காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இதற்கிடையில், குரு நாராயணனின் சகோதரர் சூர்ய நாராயணனின் (கிருஷ்ணமூர்த்தி) கொலைக்காக மகா காவல் துறையினரால் தேடப்படுகிறார். மகா தனது குடும்பத்துடன் விசாகபட்டினத்திற்கு தப்பிச் சென்று ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ திட்டமிடுகிறார். முத்துராஜ் தனக்கு தரவேண்டிய பாக்கி பணத்தைக் கொடுக்குமாறு மகா கேட்டுவருகிறான். இதனால் முத்துராஜ் மகாவைப் பற்றி காவல்துறைக்கும், குரு நாராயணனுக்கும் துப்பு கொடுத்து துரோகம் செய்கிறார். இதை எல்லாம் அறியாமல் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க மகா முயல்கிறார். மகா முத்துராஜை சந்திக்க செல்லும் வழியில், அவரை போலீசார் துரத்திச் சென்று சுடுகின்றனர். மாகாவுக்கு, குண்டு காயம் ஏற்பட்ட போதிலும், சரக்கு தொடருந்தில் ஏறி அந்த இடத்திலிருந்து தப்பிக்கிறார்.
அவரது செல்பேசி சமிக்ஞையைப் பயன்படுத்தி மாகாவின் இருப்பிடத்தை காவல்துறையினர் கண்காணிக்கிறனர். அவர் ஈரோட்டுக்கு அருகில் இருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர். மகா முத்துராஜை மீண்டும் தொடர்பு கொண்டு உதவி கோருகிறார். முத்துராஜ், ஈரோட்டில் உள்ள தன் நண்பர் ஜெயராமனைச் சந்திக்கும்படி மகாவுக்கு கூறுகிறார். இதற்கிடையில், ஈரோட்டைச் சுற்றியுள்ள மருத்துவமனையில் மகாவுக்கு ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறலாம் என காவல் துறையினர் சந்தேகம் கொள்கின்றனர். அதனால் அப்பகுதி மருத்துவமனைகளில் காவல்துறையினர் மகாவை தேடி வருகின்றனர். கடைசியாக, முனி ஒரு மருத்துவமனையில் (பாம்புக் கடிக்கு அனுமதிக்கப்பட்டதால்) காவல்துறையினர் அவரை மகா என்று கருதி கைது செய்கின்றனர். இதற்கிடையில், மாகா ஜெயராமனின் வீட்டிற்கு உதவி கேட்டு செல்கிறார். அங்கு, குடிபோதையில் இருந்த ஜெயராமன், மகாவைக் கண்டு அதிர்ச்சியடைந்து, பழிவாங்க வந்துள்ள முனி என்று தவறாக நினைக்கிறார். ஜெயராமன் மாகாவைத் தாக்க முயல்கிறார். ஆனால் மாகா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஜெயராமனை கொல்கிறார்.
மகாவின் நண்பர்கள் முத்துராஜின் துரோகத்தைக் கண்டறிந்து மகாவுக்குத் தெரிவிக்கிறனர். முத்துராஜால் காட்டிக்கொடுக்கப்பட்டதால் மக கோபம் கொள்கிறார். மறுபுறம், முனி குரு நாராயணனிடம் ஊழல்வாதியான காவல் ஆய்வாளரால் ( ஜி. எம். சுந்தர் ) ஒப்படைக்கப்படுகிறார். குரு நாராயணனின் அடியாட்கள் முனியை மகா என்று நம்பி வெட்டுகிறார்கள். முனி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். விஜியையும், அவரது மகனையும் போலீசார் கைது செய்கின்றனர். மகா இறந்துவிட்டதாக காவல் ஆய்வாளர் கூறியதைக் கேட்டு விஜி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள். மாகா தன் நண்பர்கள் வழியாக முனியைப் பற்றி அறிந்து கொள்கிறார். மருத்துவமனையில் அவரைப் பார்க்க விரைகிறார். முனி தன் இரட்டை சகோதரர் என்பதை மகா புரிந்து கொள்கிறார். மகா மற்றும் முனியின் சிறுவயது பருவத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட அவர்களது தாயார் பற்றி ஒரு சிறிய பின்னோக்கிய சில காட்சிகள் காட்டப்படுகிறன. அதில் அவரின் தாய் இரண்டு குழந்தைகளையும் காலியான தொடருந்து நடைபாதையில் தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டது காட்டப்படுகிறது. மகா ஒரு அனாதை இல்லத்தில் வளர்க்கப்படுகிறார், அதே நேரத்தில் முனி ஒரு விதவையால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்.
விஜியின் மரணம் பற்றி அறிந்த மகா கோபமடைந்து கெட்டவர்களை கொல்ல முடிவு செய்கிறார். அவர் முத்துராஜின் இடத்திற்கு சென்று அங்கு ஒன்றாக குடித்துக் கொண்டிருந்த முத்துராஜ், காவல் ஆய்வாளர், குரு நாராயணன் உட்பட அனைவரையும் கொல்கிறார். மாகாவும் முன்பு போலீசாரால் சுடப்பட்டதால், அவரும் முனி இருக்கும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றார். துரதிருஷ்டவசமாக, முனி இறந்துவிடுகிறார். முனியின் மரணத்தால் குற்ற உணர்வு ஏற்பட்டு, முனிவின் இலக்கியப் பாதையையும் மன அமைதியையும் மகா பின்பற்ற முடிவெடுத்து அவர்போலவே வாழ்கிறார். முனியின் கிராமத்திற்கு மகா வருவதாகக் காட்டப்படுகிறது. மகாவின் மகனை மீட்டு முனியின் வளர்ப்பு தாய் வளர்க்கிறார். படத்தின் இறுதியில் ஒருவர் மகாவிடம் அவருடைய பெயரைக் கேட்க, அவர் "மகாமுனி" என்று கூறுகிறார்.
நடிப்பு
- ஆர்யா மகாமேவன் மற்றும் முனிராஜ்
- இந்துஜா ரவிச்சந்திரன் - விஜாயாக
- மகிமா நம்பியார் - தீபாவாக
- காளி வெங்கட் - மரு. ரகுவாக
- ரோகினி - முனியின் தாயாக
- ஜெயப்பிரகாசு - ஜெயராமனாக
- இளவரசு - முத்துராஜாக
- அருள்தாஸ் - குரு நாராயணனாக
- மதன் குமார் - ஆதி நாராயணனாக
- பாலா சிங் - மாவட்டமாக
- ஜி. எம். சுந்தர் - ஊழல் காவல் ஆய்வாளராக
- கிருஷ்ணமூர்த்தி - சூரிய நாராணயணாக
- தீபா சங்கர் - முத்துராஜின் மனைவி கோமதியாக
- யோகி - முத்துராஜின் உதவியாளர் கோபாலாக
- சூப்பர்குட் சுப்பிரமணி - தெருமுனை திருமூர்த்தி
- செம்பருத்தி சஞ்சை - தீபாவின் தம்பி
- நக்கலைட்ஸ் செல்லா
- தங்கமணி பிரபு
தயாரிப்பு
சாந்தகுமார் இந்த படத்தை அறிவித்தார், அவர் 2011 இல் வெளியிடப்பட்டு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மௌன குரு படத்திற்காக பெயர் பெற்றவர். மகாமுனியின் படப்பிடிப்பு 2018 நவம்பர் 14 இல் தொடங்கியது. இது இயக்குனரின் இரண்டாவது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காஞ்சிபுரம், ஈரோட்டில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரட்டை வேடங்களில் நாயகனாக நடிக்க நடிகர் ஆர்யாவை திரைப்பட படைப்பாளிகள் ஒப்பந்தம் செய்தனர். இரெட்டயர்களில் ஒருவர் கொலைகாரர் மற்றொருவர் விவசாயி மற்றும் வள்ளலாரை பின்பற்றுபவர்.
வெளியீடு
இப்படமானது 2019 செப்டம்பர் 6 அன்று தருண் பிக்சர்சால் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இது 2021 பிப்ரவரியில் கோல்ட்மினஸ் டெலிஃபிலிம்சால் இந்தியில் மகாமுனி என மொழிமாற்றம் செய்யப்பட்டது.
திரைப்பட வணிகம்
படம் வெளியான முதல்வார இறுதியில் சென்னை வட்டாரத்தில் மகாமுனி ₹1 கோடி (US$1,30,000) வசூலை ஈட்டியது.[4]
இசை
இப்படத்திற்கு எஸ். எஸ். தமன் இசையமைத்தார். மௌன குருவுக்குப் பிறகு இயக்குனருடனான தொடர்ச்சியான அடுத்த ஒத்துழைப்பு இதுவாகும். பாடல் வரிகளை கவிஞர் முத்துலிங்கம், கிருஷ்ணமூர்த்தி தனுஷ்கோடி ஆகியோர் எழுதினர்.
# | பாடல் | Singer(s) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "Odum Neeril Odam Pola" | 4:16 | ||
2. | "Kazhaga Kodi Parakkuthadaa" | 5:14 | ||
3. | "Eppadi Eppadi" | 3:16 |
மேற்கோள்கள்
- ↑ "Magamuni Movie Review: A worthy follow-up to Santhakumar's debut film, Mouna Guru". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/magamuni/movie-review/70985448.cms.
- ↑ "Magamuni movie review: Arya impresses in a double role in Santhakumar's story with well-crafted characters- Entertainment News, Firstpost" (in en). 2019-09-06. https://www.firstpost.com/entertainment/magamuni-movie-review-arya-impresses-in-a-double-role-in-santhakumars-story-with-well-crafted-characters-7295501.html.
- ↑ "சர்வதேச விருதுகளை வென்ற ஆர்யா திரைப்படம்" (in en). https://www.etvbharat.com/tamil/tamil-nadu/sitara/cinema/magamuni-movie-won-9-awards/tamil-nadu20210609064522566.
- ↑ "Arya's Magamuni gets a good start; Prabhas' Saaho slips to 7th place at Chennai box office". 2019-09-10. https://www.ibtimes.co.in/aryas-magamuni-gets-good-start-prabhas-saaho-slips-7th-place-chennai-box-office-805160.