ஜி. எம். சுந்தர்
ஜி. எம். சுந்தர் | |
---|---|
பணி | நடிகர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1986–2005; 2016–தற்போது வரை |
ஜி. எம். சுந்தர் (G. M. Sundar) என்பவர் ஒரு இந்திய நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் ஏராளமான தமிழ் படங்களில்ர் நடித்துள்ளா. உருமற்றம் என்ற படத்தின் வழியாக தயாரிப்பாளராகவும் ஆனார்.
தொழில்
இவர் அடையாறு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்லூரியில் நடிப்பை பயின்றார். புன்னகை மன்னன் திரைப்படத்தில் இயக்குனர் கே. பாலச்சந்தர் இவருக்கு முதலில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார்.[1]
பின்னர், சுந்தர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு, சத்யா போன்ற படங்களில் நடித்தார்.[2]
இப்படங்களைத் தவிர, பி. லெனின் இயக்கி தேசிய விருது பெற்ற ஊருக்கு நூறு பேர் திரைப்படத்தில் சுந்தர் முக்கிய வேடத்தில் நடித்தார்.[3] சிறந்த சுற்றுச்சூழல் படத்திற்கான தேசிய விருதை வென்ற உருமாற்றம் என்ற குறும்படத்தை தயாரித்து நடித்தார்.[4]
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, விஜய் சேதுபதி மற்றும் மடோனா செபாஸ்டியன் நடித்த நலன் குமரசாமி இயக்கிய காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் சுந்தர் தனது நடிப்பு வாழ்க்கையின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.[3]
திரைப்படவியல்
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1986 | புன்னகை மன்னன் | ||
1987 | கடமை கண்ணியம் கட்டுப்பாடு | ||
1988 | சத்யா | சுந்தர் | |
1990 | புலன் விசாரணை | ||
காவலுக்குக் கெட்டிக்காரன் | பண்ணீர் | ||
1991 | கிழக்கு கரை | ||
நண்பர்கள் | பீடா | ||
1992 | தங்க மனசுக்காரன் | துரைப்பாண்டி | |
1993 | பொன்னுமணி | ||
1994 | அதர்மம் | ||
1998 | கிழக்கும் மேற்கும் | ||
2002 | உருமாற்றம் | தயாரிப்பாளருமாக | |
2003 | ஊருக்கு நூறு பேர் | ஆனந்தன் | |
2005 | தொட்டி ஜெயா | சந்தானம் | |
2011 | சங்கரன்கோவில் | ||
2016 | காதலும் கடந்து போகும் | திலகர் | |
2017 | பொதுவாக எம்மனசு தங்கம் | தர்மலிங்கம் | |
2018 | சீதக்காதி | தனபால் வழக்கறிஞர் | |
2019 | மகாமுனி | ஊழல் காவல் அதிகாரி | |
2021 | மண்டேலா | ரத்னம் | |
சார்பட்டா பரம்பரை | துரைக்கண்ணு வாத்தியார் | ||
ரைட்டர் | வழக்கறிஞர் மருதமுத்து | ||
2022 | வலிமை | ஐஜி அரசு | |
2022 | ஜன கண மன | நாகேஸ்வர ராவ் | மலையாளப் படம் |
2022 | விருமன் | ச.ம.உ பத்தினெட்டாம்பாடியன் | |
2023 | துணிவு | முத்தழகன் |
குறிப்புகள்
- ↑ "At last". http://www.screenindia.com/20011012/rtam.html.
- ↑ "GM Sundar's patience pays him richly". https://www.deccanchronicle.com/entertainment/kollywood/150919/gm-sundars-patience-pays-him-richly.html.
- ↑ 3.0 3.1 Subramanian, Anupama (1 September 2017). "GM Sundar on a roll". தி டெக்கன் குரோனிக்கள். https://www.deccanchronicle.com/entertainment/kollywood/010917/gm-sundar-on-a-roll.html.Subramanian, Anupama (1 September 2017). "GM Sundar on a roll". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 23 February 2022. Retrieved 21 October 2019.
- ↑ Pride of Tamil Cinema: 1931–2013.