விருமன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
விருமன்
விருமன் சுவரோட்டி
இயக்கம்முத்தையா
தயாரிப்புசூர்யா
சோதிகா
கதைமுத்தையா
இசையுவன் சங்கர் ராசா
நடிப்புகார்த்தி
அதிதி ஷங்கர்
ராசுகிரண்
பிரகாசு ராசு
சூரி
கருணாசு
வடிவுக்கரசி
சரண்யா பொன்வண்ணன்
ஒளிப்பதிவுஎசு கே செல்வக்குமார்
படத்தொகுப்புவெங்கட் ராசன்
கலையகம்2டி எண்டெர்டெய்ண்மெண்ட்
விநியோகம்சக்தி பிலிம் பேக்டரி
வெளியீடுஆகத்து 12, 2022 (2022-08-12)
ஓட்டம்151 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்மதிப்பீடு.40 கோடி[1]

விருமன் (Viruman) முத்தையா இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் படமாகும். சோதிகாவும் சூர்யாவும் அவர்களின் 2டி எண்டெர்டெய்னர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர்[2], பிரகாசு ராசு, ராசுகிரண், இளவரசு, வடிவுக்கரசி போன்றோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராசா இசையமைத்துள்ளார்[3], எசு கே செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஆகத்து 12 அன்று வெளியானது.[4][5]

கதை சுருக்கம்

வட்டாச்சியரான (தாசில்தார்) முனியாண்டி அவர் மனைவி முத்துலட்சுமி அழைத்து வந்த பெண்ணுடன் தகாத உறவு கொள்கிறார். அச்செயலை அறிந்ததும் அதைக்கண்டித்த முத்துலட்சுமியை அறைந்ததுடன் மேலும் பல பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வேன் அதை நீ கேட்க கூடாது என்று கூறியதால் மனம் உடைந்த முத்துலட்சுமி தன் அண்ணன் வீட்டுக்கு திரும்பி வந்து அங்கு தீ வைத்துக்கொண்டு இறந்து விடுகிறார். தன் தகப்பனால் தான் தன் அம்மா முத்துலட்சுமி இறந்தார் என்ற கோபத்தில் தகப்பனை கொல்லமுயல்கிறார் சிறு வயது விருமன். அவரை நீதிமன்றம் அவர் மாமனுடன் இருக்க அனுமதிக்கிறது. அவர் வெளியூரில் விருமனை வளர்க்கிறார். வளர்ந்து சொந்த ஊர் வரும் விருமன் தன் தந்தையுடன் வம்பிலுத்து கொண்டே இருக்கிறார். முனியாண்டி கையூட்டு பெறும் தாசில்தாரர் ஆகவும் தன் பேச்சை எதிர்ப்பவர்களை வெறுத்து ஒதுக்குவதுடன் அவர்களை பழிவாங்குபவராகவும் உள்ளார். மூன்று அண்ணன்களையும் விருமன் தன்னுடன் வருமாறு அழைக்கிறார் அதை அவர்கள் மறுத்துவிடுகிறார்கள். எப்படி ஒவ்வொரு அண்ணனாக தன் பக்கம் இழுக்கிறார், இறுதியில் எப்படி தந்தையையும் மாற்றி தன் பக்கம் இழுக்கிறார் என்பதுவே கதை.

நடிகர்கள்

  • விருமனாக கார்த்தி
  • தேன்மொழியாக அதிதி ஷங்கர்
  • தாசில்தார் முனியாண்டியாக பிரகாசு ராசு (விருமனின் அப்பா)
  • நிரைபாண்டியனாக ராசுகிரண் (விருமனின் மாமன், முத்துலட்சுமியின் அண்ணன்)
  • குத்துக்கல்லாக சூரி (விருமனின் நண்பன்)
  • முத்துலட்சுமியாக சரண்யா பொன்வண்ணன் (விருமனின் தாய்)
  • பாலுவாக கருணாசு (முத்துலட்சுமியின் தம்பி)
  • சங்கய்யாவாக இளவரசு (தேன்மொழியின் அப்பா)
  • செல்வமாக வசுமித்திரா (விருமனின் முதல் அண்ணன்)
  • செல்வத்தின் மனைவியாக அருந்ததி
  • முத்துக்குட்டியாக மனோசு பாரதிராசா (விருமனின் இரண்டாம் அண்ணன்)
  • முத்துக்குட்டியின் மனைவியாக மைனா நந்தினி
  • இளங்கோவாக ராசாகுமார் (விருமனின் மூன்றாம் அண்ணன்)
  • முனியாண்டியின் தாயாக வடிவுக்கரசி
  • தாசில்தாரிடம் பணிபுரியும் தலையாரியாக சிங்கம்புலி
  • குத்தாலமாக ஓஏகே சுந்தர்
  • சுனாபானாவாக ஆர் கே சுரேசு
  • சட்டமன்ற உறுப்பினர் பதினெட்டாம்படியனாக சி எம் சுந்தர்
  • கொலவிக்கல்லாக இந்திரசா
  • இந்துமதி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=விருமன்&oldid=32912" இருந்து மீள்விக்கப்பட்டது