அதிதி ஷங்கர்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
அதிதி ஷங்கர் |
---|---|
பிறந்தஇடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி |
|
கல்வி நிலையம் | சிறீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகம் |
செயற்பட்ட ஆண்டுகள் | 2022–தற்பொழுது வரை |
செயற்பட்ட ஆண்டுகள் | 2022–தற்பொழுது வரை |
அதிதி ஷங்கர் (Aditi Shankar) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் பின்னணிப் பாடகி ஆவார்.தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கிறார்.[1] விருமன் (2022) திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
ஆரம்ப கால வாழ்க்கை
அதிதி இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். இவர் இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஷங்கரின் மகள் ஆவார். இவருக்கு ஐஸ்வர்யா ஷங்கர் என்ற மூத்த சகோதரியும், அர்ஜித் ஷங்கர் என்ற தம்பியும் உள்ளனர்.[2] அதிதி ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார். பட்டம் பெற்ற பிறகு, தனது நீண்ட கால நடிப்பு ஆர்வத்தைப் பற்றி பெற்றோரிடம் தெரிவித்து,விருமன் படத்தில் அறிமுகமானார்.[3]
தொழில்
தெலுங்கில் கானி படத்தின் "ரோமியோ ஜூலியட்" பாடலுக்காக அதிதி பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.[4]
2021 இல், திரைப்பட இயக்குனர் எம். முத்தையா அவரை அணுகி விருமன் என்ற மசாலா படத்தில் கதாநாயகியாக நடிக்க கேட்டுக்கொண்டார்.[5] இப்படத்தில் மதுர வீரன் என்ற பாடலை பாடியுள்ளார்.[6]
2022 இன் நடுப்பகுதியில், மடோனா அசுவின் இயக்கத்தில், சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து மாவீரன் என்னும் படத்தில் நடிக்கத் துவங்கினார். அப்படம் சூலை 2023 இல் வெளியானது.[7][8] அப்படத்தில் வண்ணாரப்பேட்டையில ஒரு வவ்வாலு என்னும் பாடலையும் பாடினார்.
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அதர்வாவின் சகோதரருக்கு இணையாக படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.[9][10]
மேற்கோள்கள்
- ↑ "I'll pursue both singing and acting equally, says Aditi Shankar". The Times of India. 9 August 2022. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/ill-pursue-both-singing-and-acting-equally-says-aditi-shankar/articleshow/93437537.cms.
- ↑ "Shankar's daughter Aditi Shankar to make her silver screen debut with Viruman". The Indian Express (in English). 6 September 2021. Archived from the original on 17 June 2022. பார்க்கப்பட்ட நாள் 17 June 2022.
- ↑ "Aditi Shankar to Kalyani Priyadarshan: Daughters of Tamil directors who made their debut as heroines" (in en). 6 September 2021. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/aditi-shankar-to-kalyani-priyadarshan-daughters-of-tamil-directors-who-made-their-debut-as-heroines/photostory/85977666.cms.
- ↑ "Romeo Juliet, Third Single From Varun Tej's Ghani, Trends on YouTube". news18.com (in English). 10 February 2022. Archived from the original on 18 June 2022. பார்க்கப்பட்ட நாள் 18 June 2022.
- ↑ "Karthi, Aditi Shankar film Viruman wrapped up". Cinema Express (in English). 22 December 2021. Archived from the original on 22 December 2021. பார்க்கப்பட்ட நாள் 17 June 2022.
- ↑ "Aditi Shankar Reveals How She Got Opportunity to Sing in Viruman". news18.com. 9 August 2022. Archived from the original on 13 August 2022. பார்க்கப்பட்ட நாள் 13 August 2022.
- ↑ "After Aditi Shankar, director Mysskin roped in for Sivakarthikeyan's Maaveeran". The Indian Express (in English). 4 August 2022. Archived from the original on 13 August 2022. பார்க்கப்பட்ட நாள் 13 August 2022.
- ↑ "Aditi Shankar on board as the female lead in Sivakarthikeyan's bilingual film Maaveeran". Pinkvilla (in English). 6 August 2022. Archived from the original on 24 August 2022. பார்க்கப்பட்ட நாள் 24 August 2022.
- ↑ "Aditi Shankar will be Akash's love interest in his debut film with Vishnuvardhan". 20 March 2023. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/aditi-shankar-will-be-akashs-love-interest-in-his-debut-film-with-vishnuvardhan/articleshow/98792464.cms?from=mdr.
- ↑ "Vishnuvardhan teams up with Aditi Shankar, Akash Murali for a romantic flick. Details inside". indiatoday.in (in English). 21 March 2023. Archived from the original on 10 May 2023. பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.