தேனி மாவட்டம்
தேனி | |
மாவட்டம் | |
மஞ்சளாறு அணை | |
தேனி மாவட்டம்:அமைந்துள்ள இடம் சிறப்பு பெயர்: இயற்கை விரும்பிகளின் பூமி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைநகரம் | தேனி |
பகுதி | தென் மாவட்டம் |
ஆட்சியர் |
|
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
திரு. இரா.சிவபிரசாத், இ.கா.ப. |
நகராட்சிகள் | 6 |
வருவாய் கோட்டங்கள் | 2 |
வட்டங்கள் | 5 |
பேரூராட்சிகள் | 22 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 8 |
ஊராட்சிகள் | 130 |
வருவாய் கிராமங்கள் | 113 |
சட்டமன்றத் தொகுதிகள் | 4 |
மக்களவைத் தொகுதிகள் | 1 |
பரப்பளவு | 3242.3 ச.கி.மீ. |
மக்கள் தொகை |
12,45,899 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
625 531 |
தொலைபேசிக் குறியீடு |
04546 |
வாகனப் பதிவு |
TN-60 |
பாலின விகிதம் |
ஆண்-50.5%/பெண்-49.5% ♂/♀ |
கல்வியறிவு |
77.26% |
சராசரி கோடை வெப்பநிலை |
40.5 °C (104.9 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை |
15 °C (59 °F) |
இணையதளம் | theni |
தேனி மாவட்டம் (Theni district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தேனி ஆகும். தேனி மாவட்டம் தமிழக அரசின் வருவாய்த்துறை அரசு ஆணை எண் 679, நாள் சூலை 25, 1996 இன் மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த மாவட்ட உருவாக்கத்திற்காக இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான டாக்டர். கே. சத்யகோபால் தனி அதிகாரியாக முதலில் நியமிக்கப்பட்டார். பின்னர் அவரே முதல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தேனி மாவட்டம் சனவரி 1, 1997 முதல் செயல்படத் துவங்கியது. தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு, இந்தியாவில் முதன் முறையாக சர்வதேசத் தரச்சான்று (ஐ.எஸ்.ஓ.,-9001) விருது வழங்கப்பட்டுள்ளது.[2]
மக்கள் வகைப்பாடு
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி தேனி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 12,45,899 ஆகும். இவர்களில் 6,25,683 ஆண்கள். 6,20,216 பெண்கள் ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 991 பெண்கள், இது தேசிய சராசரியான 929-யை விட மிக அதிகம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் 1,19,661 பேர் ஆறு வயதிற்கும் கீழானவர்கள். மாவட்டத்தின் சராசரி கல்வியறிவு தேசிய சராசரியான 72.99% ஐ ஒப்பிடும் போது, அதை விட அதிகமாக 77.26% ஆக உள்ளது. இதில் ஆண்களில் கல்வியறிவு பெற்றோர் 85.03% ஆகவும், பெண்களில் கல்வியறிவு பெற்றோர் 69.46% ஆகவுமாக உள்ளனர்.
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 11,48,990 (92.22%) ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 56,751 (4.56%), கிருஸ்துவர்கள் 37,574 (3.02%), மதம் குறிப்பிடாதோர் 2,251, சீக்கியர்கள் 152, புத்த மதத்தினர் 79, சமணர்கள் 28 மற்றவர்கள் 74 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர்.[3]
மாவட்ட வருவாய் நிர்வாகம்
தேனி மாவட்ட வருவாய்த்துறையில் பெரியகுளம், உத்தமபாளையம் இரண்டு வருவாய்க் கோட்டங்களும், இந்த வருவாய்க் கோட்டங்களின் கீழ் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர் என்று ஐந்து தாலுகா அலுவலகங்களும். இந்த ஐந்து வருவாய் வட்டங்களில் கீழ் 17 உள்வட்டங்களும், 113 வருவாய் கிராமங்களும் உள்ளது.[4]
வருவாய் கிராமங்கள்
இம்மாவட்டத்தில், ஆண்டிபட்டி வட்டத்தில் 25 வருவாய்க் கிராமங்களும், போடிநாயக்கனூர் வட்டத்தில் 15 வருவாய்க் கிராமங்களும், தேனி வட்டத்தில் 12 வருவாய்க் கிராமங்களும், பெரியகுளம் வட்டத்தில் 22 வருவாய்க் கிராமங்களும், உத்தமபாளையம் வட்டத்தில் 39 வருவாய்க் கிராமங்களும், என வருவாய்த்துறை அமைப்பின் கீழ் 113 வருவாய்க் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிலுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் (முன்பு தலையாரி என்று அழைக்கப்பட்டனர்) உள்ளனர்.
காவல்துறை அமைப்புகள்
தேனி மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்கான காவல்துறையில் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் ஒன்றும், இதன் கீழ் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர் ஆகிய 5 இடங்களில் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களும், இதன் கீழ் சட்டம்- ஒழுங்கிற்கான 30 காவல் நிலையங்களும், 4 மகளிர் காவல் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சி அமைப்புகள்
தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள் (முன்பு சிறப்பு கிராமப் பஞ்சாயத்துகள்), 8 ஊராட்சி ஒன்றியங்களும்[5], இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் கீழ் 130 கிராம ஊராட்சிகளும் உள்ளன.[6] இந்த உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சபைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி உள்ளாட்சித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
கல்வி நிறுவனங்கள் - உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையம் எனும் இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இரு கல்வி மாவட்டங்களும் இணைந்த தேனி முதன்மைக் கல்வி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 46, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் 23, அரசு உயர்நிலைப்பள்ளிகள் 40 , அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் 15 மற்றும் சுயநிதி ஆங்கிலவழிக்கல்வி அளிக்கும் மேல்நிலைப்பள்ளிகளும் உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன.
கல்லூரிகள்
தேனி மாவட்டத்தில், தேனியில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி, பெரியகுளத்தில் ஒரு அரசு தோட்டக்கலைக் கல்லூரி, வீரபாண்டியில் அரசு சட்ட கல்லூரி போடியில் அரசு பொறியியல் கல்லூரி ,போடிநாயக்கனூர், உத்தமபாளையம், பெரியகுளம் ஆகிய இடங்களில் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகள், ஆண்டிபட்டி, கோட்டூர் ஆகிய இடங்களில் மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகள் மற்றும் 5 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், கலைக்கல்லூரிகள், உடற்கல்வியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் உள்ளன.போடியில் ஒரு அரசு பொறியியல் கல்லூரி உருவாக்க பட்டுள்ளது மேலும் கோட்டூர் மற்றும் க விலக்கு பகுதியில் அரசு தொழில்நுட்ப கல்லூரிகள் உருவாக்க பட்டுள்ளன.கம்பத்தில் பெண்களுக்கு தனியார் கல்லூரி ஒன்று உள்ளது
தொழிற்பயிற்சி நிலையம்
தேனியில் ஒரு அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிபட்டியில் ஒரு அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை உள்ளன. இவை தவிர சில சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனைகள்
தேனி மாவட்டத்தில் சுகாதாரப் பணிகளுக்காக 1 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 6 அரசு மருத்துவமனைகள், 25 ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் 162 துணைச் சுகாதார மையங்கள் மற்றும் ஒரு மாவட்டக் காச நோய் மையம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
நூலகங்கள்
தேனி மாவட்டத்தில் ஒரு மாவட்ட மையப் பொது நூலகம், 58 கிளை நூலகங்கள், 13 கிராம நூலகங்கள் மற்றும் 17 பகுதி நேர நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
அரசியல்
இம்மாவட்டத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளன.
சட்டமன்றத் தொகுதிகள்
- ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி) - ஆ. மகாராஜன் - திராவிட முன்னேற்றக் கழகம்
- போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி) – ஓ. பன்னீர்செல்வம் – அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
- பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி (தனி) -கே. எஸ். சரவணகுமார் - திராவிட முன்னேற்றக் கழகம்
- கம்பம் (சட்டமன்றத் தொகுதி) - நா. இராமகிருஷ்ணன் - திராவிட முன்னேற்றக் கழகம்
மக்களவைத் தொகுதி
சுற்றுலாத் தலங்கள்
தேனி மாவட்டத்தில் முல்லை, வைகை, வராக நதிகள் பாய்ந்து வளம் சேர்க்கின்றன. இதனால் இம்மாவட்டத்தின் பெரும் பகுதிகள் பச்சைப்பசேல் என்று இயற்கை அழகுடன் உள்ளது. இம்மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்கள் என்று 8 இடங்கள்உள்ளது.
- வைகை அணை
- முல்லைப் பெரியாறு அணை
- சோத்துப்பாறை அணை
- சுருளி நீர் வீழ்ச்சி
- கும்பக்கரை அருவி
- மேகமலை
- வெள்ளிமலை
- போடி மெட்டு
- மேகமலை அருவி
- குரங்கனி
- மஞ்சளாறு அணை
- அகமலை
கோயில்கள்
இம்மாவட்டத்தில் பிரபலமாக விளங்கும் சில கோயில்கள்.
- குச்சனூர் சனீஸ்வரன் கோயில்
- வீரபாண்டி கண்ணீசுவரமுடையார் கோயில்
- வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில்
- பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில்
- தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்
- சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில்
- வீரப்ப அய்யனார் கோயில்
- போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில்
- தீர்த்தத்தொட்டி சித்திர புத்திர நாயனார் கோயில்
- வேலப்பர் கோயில்
- பூதிப்புரம் நஞ்சுண்டேஸ்வர ஸ்வாமி திருக்கோயில்
- கம்பம் கம்பராய பெருமாள் கோயில்
- கோம்பை திருமலைராயபெருமள் கோயில்
- ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயில்
- போடி-விசுவாசபுரம் பத்ரகாளியம்மன் திருக்கோயில்
- அருமிகு பகவதி அம்மன் கோவில் ,வைத்தியநாதன் உரம் பெரியகுளம்
மின் உற்பத்தி நிலையங்கள்
தேனி மாவட்டத்திலுள்ள ஆறுகளை ஆதாரமாகக் கொண்டு மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை
- பெரியார் நீர்மின்சக்தி உற்பத்தி நிலையம்
- சுருளியாறு நீர்மின்சக்தி உற்பத்தி நிலையம்
- வைகை நுண் புனல் மின் நிலையம்.
இவை தவிர தேனி மாவட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி-கண்டமனூர் , கம்பம் மற்றும் போடிநாயக்கனூர் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வரும் காற்றைப் பயன்படுத்தி காற்றாலைகள் கொண்டு மின் உற்பத்தி செய்யும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.[7]
அரசியல்வாதிகள்
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சில முக்கிய அரசியல்வாதிகள் மட்டும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
- பி. டி. ராஜன் - நீதிக்கட்சித் தலைவர், சென்னை மாகாண முதலமைச்சர்.
- பி. டி. ஆர். பழனிவேல்ராஜன் - முன்னாள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர், முன்னாள் தமிழ்நாடு அரசு அமைச்சர் (தி.மு.க)
- பெ. செல்வேந்திரன் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி, (தி.மு.க)
- எஸ். டி .கே.ஜக்கையன் -முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி, (அ.இ.அ.தி.மு.க)
- நா. காமராசன் - தமிழக அரசின் முன்னாள் கதர் கிராம தொழில் வாரியத் துணைத் தலைவர்
- ஓ. பன்னீர்செல்வம் - தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் துணை முதலமைச்சர், முன்னாள் நிதியமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர்.
திரைப்படத் துறையினர்
தேனி மாவட்டத்தில் பிறந்த திரைப்பட நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் (எஸ்.எஸ்.ஆர்), நடிகர் முத்துராமன் மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன், மறைந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் தனுஷ் ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், பாரதிராஜா, கஸ்தூரி ராஜா, பாலா, டாக்டர் ராஜசேகர் மற்றும் லெனின் பாரதி ,செல்வராகவன் சிராஜ் மற்றும் பொன்ராம் இயக்குனர்களாகவும், இளையராஜா, கங்கை அமரன், யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் பவதாரிணி ஆகியோர் திரை இசைத் துறையிலும், கவிஞர் வைரமுத்து, கவிஞர் நா.காமராசன் மற்றும் கவிஞர் மு.மேத்தா ஆகியோர் கவிஞர்களாகவும் புகழ் பெற்றவர்களாக உள்ளனர்.
எழுத்தாளர்கள்
தேனி மாவட்டத்தில் இருந்து சி. சு. செல்லப்பா, வே. தில்லைநாயகம், கவிஞர் வைரமுத்து,கவிஞர் நா.காமராசன், கவிஞர் மு.மேத்தா, உமா மகேஸ்வரி, கவிஞர் சக்தி ஜோதி, தேனி மு. சுப்பிரமணி, தேனி.எஸ்.மாரியப்பன் என்று பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் உருவாகியிருக்கின்றனர்.
மேற்கோள்கள்
- ↑ "District Collectors of Tamil Nadu". பார்க்கப்பட்ட நாள் 13 July 2019.
- ↑ சர்வதேசத் தரச்சான்று செய்தி
- ↑ Theni District : Census 2011 data
- ↑ தேனி மாவட்ட வருவாய் நிர்வாக அமைப்புகள்
- ↑ "தேனி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". Archived from the original on 2015-07-08. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.
- ↑ தேனி மாவட்ட உள்ளாட்சி மற்றும் ஊராட்சிகள்
- ↑ "தேனி மாவட்ட மின் உற்பத்தி நிலையங்கள் குறித்த ஆங்கிலச் செய்தி". Archived from the original on 2011-04-11. பார்க்கப்பட்ட நாள் 2010-04-23.