சக்தி ஜோதி
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சக்தி ஜோதி |
---|---|
பிறப்புபெயர் | ஜோதி |
பிறந்ததிகதி | மார்ச்சு 15 |
பிறந்தஇடம் | அனுமந்தன்பட்டி, தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. |
பணி | சமூகப் பணியாளர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | முனைவர் பட்டம் |
அறியப்படுவது | கவிஞர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சிற்பி அறக்கட்டளை விருது, லயோலா கல்லூரி வழங்கிய லைவ் விருது |
பெற்றோர் | ச. பாண்டியன் , பா. சிரோன்மணி |
துணைவர் | சக்திவேல் |
பிள்ளைகள் | 1. திலீப் குமார் (மகன்) 2. காவியா (மகள்) |
இணையதளம் | sakthijothi wordpress blogspot |
சக்தி ஜோதி (Sakthi Jothi) இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் வாழ்கின்ற ஒரு தமிழார்வலராவார். கவிஞர்,[1][2] கட்டுரையாளர், பேச்சாளர், விவசாயி மற்றும் சமூகப்பணியாளர் என்று பரவலாக இவர் அறியப்படுகிறார். திண்டுக்கல் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவார கிராமமான அய்யம்பாளையத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சங்க இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் 2008 ஆம் ஆண்டு “நிலம் புகும் சொற்கள்” என்ற கவிதைத் தொகுப்பில் தொடங்கி, 2021 ஆம் ஆண்டில் கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள் என்ற கவிதை நூலை வெளியிட்டு இதுவரை பன்னிரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.[3] சங்கப் பாடல்கள், நவீன இலக்கியம், நீர் மேலாண்மை, கல்வி, சுற்றுச்சூழல், விவசாயம்[4] சார்ந்து ஏராளமான கட்டுரைகளையும் எழுதிவருகிறார்.[5] பெண்ணையும் இயற்கையையும் இணைத்து கவிதைகள் படைப்பது இவரது பலமாகும்.
அய்யம்பாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு நிலம் நீர் போன்ற இயற்கைவளம் பாதுகாப்பு தொடர்பாக செயல்பட “ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை” எனும் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி செயல்பட்டு வருகிறார்.[6][7]
வாழ்க்கைக் குறிப்பு
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியில் பாண்டியன், சிரோன்மணி தம்பதியருக்கு மகளாக சக்தி ஜோதி பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நீர் மின்சாரம் எடுக்கும் திட்டங்களில் இளநிலை கட்டிடப் பொறியாளராகப் பணிபுரிந்தார்.
தேனி மாவட்டம் மணலார் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் ஆரம்பக்கல்வியும், இராயப்பன்பட்டி புனித அலோசியசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைக் கல்வியும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழில் இளநிலை, முதுநிலைக் கல்வியையும் சக்தி பயின்றார். “சங்ககால பெண்களின் நிலை” என்கிற தலைப்பில் இளநிலை ஆய்வாளர் பட்டமும், “சங்க இலக்கியத்தில் ஆண் மையக் கருத்துருவாக்கம்” என்கிற தலைப்பில் முனைவர்ப் பட்டமும் பெற்றார்.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவரது கணவர் சக்திவேலும் வேளாண்மை, பூப்பந்து விளையாட்டு, கட்டிட வடிவமைப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்று தேர்ந்தவராவார். பூப்பந்துவிளையாட்டுக்காக சொந்த நிலத்தை தானமாக வழங்கி கிராமப்புற இளைஞர்களை விளையாட்டில் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார்.
எழுத்துலக அறிமுகம்
சக்தி ஜோதி பள்ளிக்கூட நாட்களிலிருந்தே வாசிப்பு, எழுத்து, நாடகம், நாட்டியம், ஓவியம் என ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ்நாடு இறையியல் கல்லூரி நடத்திய இறையியல் மலரில் இவரது முதல் கவிதை வெளியானது. பின்னர் 2007 ஆம் ஆண்டில் சுப்ரமணிய சிவா, மகாகவி, இனிய நந்தவனம் போன்ற சிறு பத்திரிக்கைகளில் கவிதைகள் வெளியாகின. உயிர் எழுத்து, காலச்சுவடு, புதுவிசை, ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் கவிதைகள் வெளியாகத் தொடங்கியவுடன் இலக்கிய உலகில் இவர் கூடுதல் கவனம் பெற்றார். 2008 ஆம் ஆண்டில் உயிர் எழுத்துப் பதிப்பக வெளியீடாக “நிலம் புகும் சொற்கள்” என்கிற கவிதைத் தொகுப்பு வெளியானது.
எழுதியுள்ள நூல்கள்[8]
கவிதை
- நிலம் புகும் சொற்கள்[9] - உயிர் எழுத்து பதிப்பகம் (சூன் 2008)
- கடலோடு இசைத்தல்[10] - உயிர் எழுத்து பதிப்பகம் (டிசம்பர் 2009)
- எனக்கான ஆகாயம்[11] - உயிர் எழுத்து பதிப்பகம் (டிசம்பர் 2010)
- காற்றில் மிதக்கும் நீலம் - உயிர் எழுத்து பதிப்பகம் (டிசம்பர் 2011)
- தீ உறங்கும் காடு - உயிர் எழுத்து பதிப்பகம் (டிசம்பர் 2012)
- சொல் எனும் தானியம் - சந்தியா பதிப்பகம் ( டிசம்பர் 2013 )
- பறவை தினங்களைப் பரிசளிப்பவள் - வம்சி பதிப்பகம் (ஜூன் 2014 )
- மீன் நிறத்திலொரு முத்தம் - வம்சி பதிப்பகம் (ஜனவரி -2015 )
- இப்பொழுது வளர்ந்து விட்டாள்- டிஸ்கவரி புக் பேலஸ் (ஜூன் -2016)
- மூங்கிலரிசி வெடிக்கும் பருவம்- டிஸ்கவரி புக் பேலஸ் (ஜூன் -2016)
- வெள்ளிவீதி - டிஸ்கவரி புக் பேலஸ் - (ஜனவரி- 2018)
- கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள் - டிஸ்கவரி புக் பேலஸ் - பிப்ரவரி-2021
கட்டுரை
- சங்கப் பெண் கவிதை சந்தியா பதிப்பகம் - (ஜனவரி- 2018) குங்குமம் தோழி இதழில் சங்கப்பெண்பாற் புலவர்களைப் பற்றிய கட்டுரைத்தொடர். [1][12][13]
- ஆண் நன்று பெண் இனிது[14] - தமிழ் திசை பதிப்பகம் -(ஜனவரி- 2019) காமதேனு இணைய இதழில் தொடராக வந்த கட்டுரை.[15]
சிறப்புகள்
- "ஏழைகளுக்கான திறன் மேம்பாட்டின் மூலம் அதிகாரம்" என்ற லைவ் விருதை சென்னை லயோலா கல்லூரி அய்யம்பாளையம், ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார மற்றும் கல்வி நல அறக்கட்டளை நிறுவனரான சக்தி ஜோதிக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.[16]
- இந்திய அரசின் தேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சகத்தின் மூலம், தமிழ்நாட்டின் சிறந்த சமூக சேவகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்திய சீனா நல்லுறவு தூதுக் குழுவில் தமிழகத்தின் சார்பாக சீனாவிற்குச் சென்று வந்துள்ளார்.[17]. இப்பயண அனுபவங்களை பயணக் கட்டுரையாகவும் ஒரு தொடரை எழுதியுள்ளார்.
- சாகித்திய அகாடெமி நடத்துகின்ற உலக மகளிர் தினம் , உலகத் தாய்மொழி நாள் கவிதை வாசிப்பு மற்றும் தென்னிந்திய மொழி கவிதை வாசிப்பு போன்ற நிகழ்வுகளில் தமிழ் மொழியின் சார்பாக கலந்து கொண்டு கவிதை வாசித்துள்ளார்.[18]
- சிற்பி அறக்கட்டளை சார்ப்பாக ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பட்டு வரும் இலக்கியத்திற்கான சிற்பி அறக்கட்டளை விருதை சக்தி ஜோதி பெற்றுள்ளார்.[19]
மேற்கோள்கள்
- ↑ "சக்தி ஜோதி" (in en). https://www.peopletoday.page/2021/02/blog-post_12.html.
- ↑ Mangai, A. (2019-06-22). "‘Lifescapes — Interviews with Contemporary Women Writers from Tamil Nadu’: Giving voice to silences" (in en-IN). https://www.thehindu.com/books/books-reviews/lifescapes-interviews-with-contemporary-women-writers-from-tamil-nadu-giving-voice-to-silences/article28098688.ece.
- ↑ "பிடித்தவை 10- சக்தி ஜோதி, கவிஞர், செயற்பாட்டாளர்" (in ta). https://www.hindutamil.in/mag/kamadenu-13-05-2018/olir/504452-pidithavai-10-sakthi-jothi.html.
- ↑ ValaiTamil. "ValaiTamil" (in en). http://www.valaitamil.tv/.
- ↑ Correspondent, Vikatan. "காலம் தோறும் சகுந்தலைகள் - சக்தி ஜோதி" (in ta). https://www.vikatan.com/oddities/miscellaneous/134896-sakthi-jothi-storie-of-shakuntala.
- ↑ "அறக்கட்டளையின் தளம்" இம் மூலத்தில் இருந்து 2013-12-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131210055418/http://srisakthitrust.org/founder.aspx.
- ↑ "சக்தி ஜோதி" (in en). https://www.peopletoday.page/2021/02/blog-post_12.html.
- ↑ "ஆணை இயக்குகிற மையம் பெண்தான்!!" இம் மூலத்தில் இருந்து 2021-04-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210422154126/https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5912.
- ↑ "Nilam Pugum Sorkal - நிலம் புகும் சொற்கள் » Buy tamil book Nilam Pugum Sorkal online". https://www.noolulagam.com/product/.
- ↑ "வார்த்தைகளைப் போலவே வசீகரிக்கும் வாழ்க்கை" இம் மூலத்தில் இருந்து 2021-04-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210422145929/https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=2418.
- ↑ https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2011/feb/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-314586.html
- ↑ "நூல் வெளி: புது வெளிச்சத்தில் சங்கப் பெண் கவிதைகள்" (in ta). https://www.hindutamil.in/news/literature/165654-.html.
- ↑ "புது வெளிச்சத்தில் சங்கப் பெண் கவிதைகள்". https://www.commonfolks.in/bookreviews/puthu-velichchaththil-sanga-pen-kavithaigal.
- ↑ "ஆண் நன்று பெண் இனிது" (in en). https://www.hindutamil.in/.
- ↑ "ஆண் நன்று பெண் இனிது /சக்திஜோதி. Āṇ nan̲r̲u peṇ in̲itu /Caktijōti. – National Library". https://www.nlb.gov.sg/biblio/203990802.
- ↑ https://www.loyolacollege.edu/docs/Annual%20Report%202006-2007.htm
- ↑ "கூடு :: இலக்கியம் :: குறும்படம்" இம் மூலத்தில் இருந்து 2021-04-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210421152631/https://thamizhstudio.com/Koodu/thodargal_3_1.php.
- ↑ "A poetic celebration for Gurudev". https://www.newindianexpress.com/cities/chennai/2011/mar/28/a-poetic-celebration-for-gurudev-239522.html.
- ↑ Correspondent, Vikatan. "கவிதை நாயகி!" (in ta). https://www.vikatan.com/oddities/miscellaneous/14763--2.
வெளி இணைப்புகள்
சக்தி ஜோதி (காணொளி பக்கம்) |you tube=https://www.youtube.com/channel/UCaNIzDwImYj3gzr6ys2CV_g |